Monday 18 July 2016

449. Mother Tribhuvanai will grant the magical sword

Verse 449
பண்ணடா பூசைமுறை ஆசைவைத்து
பத்தியுடன் மனங்கொண்டு பூசை செய்தால்
முன்னடா நின்று திருபுவனை தாயும்
மூன்றுலகும் தன்வசமாய் ஆள்வதற்கு
கண்ணடாகருணைவிட்டு திருநீறிட்டு
கமலமலர் அமுர்தமதை கனிவாய்ஊட்டி
விண்ணடா தானிருந்த மந்திரவாளை
வேதாந்த பூரணமாய் ஈவாள் பாரே

Translation:
Perform worship, with love,
If it is performed with a mind which has devotion
The mother, Tirubhuvana, taking charge
To rule the three worlds by bringing them under control,
The eye, releasing mercy, adorning sacred ash,
Feeling the nectar from the lotus flower- with love,
The magical sword, the sky where the self remained
She will offer it as Vedanta poornam, See!

Commentary:
Agatthiyar describes the work of Sakti when the yogin performs the above mentioned worship.  When the yogin worships her as listed in the above verses, with love and devotion Mother Tribhuvana will grant her love and mercy to him.  She will feed him the divine nectar from the lotus flower, cakra.  She will grant him the magical sword, the sky where the self remains. She will offer it as the fully complete state of Vedanta poornam.


முந்தைய பாடல்களில் கூறியபடி பூசை செய்தால் சக்தித்தாய் எவற்றைக் கொடுப்பாள் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  மனத்தில் அன்புடனும் பக்தியுடனும் ஒருவர் மேற்கூறிய புவனை பூசையைச் செய்தால் சக்தித்தாய், திருபுவனை, கருணையுடன் அவருக்குத் திருநீறிட்டு, கனிவாக தாமரை மலர் என்னும் லலாட சக்கரத்தின் அமிர்தத்தை அருளி அவர் மூவுலகும் ஆளுமாறு தான் எனப்படும் ஆத்மா இருக்கும் வானான மந்திரவாளை வேதாந்த பூரணமாய் ஈவாள் என்கிறார் அகத்தியர்.  இதனால் சக்தி நிலையை அடையும்போதுதான், நாதாந்த நிலையை அடையும்போதுதான் அமிர்தம் சுரக்கிறது அது ஆத்மநிலையான மந்திர வாளைத் தருகிறது என்பது புரிகிறது.

No comments:

Post a Comment