Thursday 21 July 2016

451. Magical sword with other letters

Verse 451
பத்தி மனங்கொண்டு பூரணமாய் நின்று
பரஞான கேசரமே வாசமாகி
சுத்தமுடன் ஓம் றீங் வசிவசி என்றோத
சூழ்ந்திருந்த சத்துருக்கள் வசியமாகும்
சித்தமுடம் ஓம்றீங் நசிநசி என்றோத
சினந்து வரும் பீடைஎல்லாம் அகன்று போகுஞ்
சுத்தமுடன் ஓம் றீங் வசிவசி என்றோத
சகல சவுபாக்கியங்கள் தானுண்டாமே

Translation:
With devotion in the heart, remaining as poornam
The parajnana kecharam as the locus
Reciting with purity, om reeng vasivasi
All the enemies will be enchanted
Reciting om hreeng nasi nasi with concentration
All the angry evils will go away
Reciting om hreeng vasivasi with purity
All the riches will occur.

Commentary:
Agatthiyar is showing that by combining the magical sword or the the mantra om hreeng with other letters one can produce different beneficial effects.  He says that if one remains at the para jnana kecharam or supreme state of consciousness with breath regulated and mind quelled, and recite om hreeng vasi vasi then all the enemies will become friendly and all the riches will come to the person.  If one recites om hreeng nasi nasi then all the evil forces that are coming towards the person in a state of anger will go away.


ஓம் றீங் என்ற மந்திர வாளை பிற மந்திரங்களுடன் சேர்த்துக் கூறினால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  பர ஞான கேசரம் என்ற உச்ச உணர்வு நிலையில் மூச்சையும் பிராணனையும் ஒழுங்குபடுத்தி மனத்தைக் குவித்து ஒருவர் ஓம் றீங் வசிவசி என்று கூறினால் ஒருவரது விரோதிகள் வசியமாவார்கள், அவர் எல்லா சௌபாக்கியங்களையும் பெறுவார் என்றும் ஓம் றீங் நசிநசி என்று கூறினால் சினத்தோடு அவரை நோக்கி வரும் தீமை ஓடிவிடும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment