Monday 25 July 2016

455. Siva yoga siddhi

Verse 455
முத்தியுடன் இப்படியே மூன்றுகாலம்
முனைநிறுத்தி தியான செபம் செய்துவந்தால்
பத்தியுடன் சிவயோகஞ் சித்தியாச்சு
பஞ்ச கணதீட்சையுமே முத்தியாச்சு
சுத்தமுள்ள தீட்சையது ஆறாதாரஞ்
சுகமான ஆதாரம் ஆறுமுகமாச்சு
சித்தமுடன் இருதயத்தில் தானே நின்று
சிவசிவா நினைத்தபடி முடிக்கும்பாரே

Translation:
If dhyana and japa are performed in this fashion
Three times a day, by holding it in the tip/terminus,
With devotion, the Siva yoga will be accomplished
The pancha gana deeksha became mukti
That pure deeksha is the six adhara
The comfortable adhara became the six faces
Remaining with chittham, at the heart
Siva sivaa!  It will accomplish as desired, by itself.

Commentary:
During vaasi/siva yogam the prana, mind and consciousness combination is raised to the ajna, the nectar is brought down into the subtle body by collecting it in the visuddhi cakra first and then slowly bringing it down to muladhara which is then raised to the other chakras and finally consciousness is held at the anahata.  By performing this while remaining at the heart the yogin crosses the limitations of time and space and attains mukti.  Agatthiyar is talking about this process here.  In the previous verses he described the process with the nectar and now he is describing the status at the heart chakra.  He says that if one remains at the heart chakra and performs dhyana and japa of the mantra, om reeng sivayavasi, thrice a day with consciousness at the ajna and muladhara, the two tips or termini then the person will accomplish siva yogam.  This will also grant him pancha gana deeksha.  The five elements represent the five cakra from muladhara to vishuddhi and ajna represents their merged state.  Thus the yogin attains siddhi of the six adhara.  These six are called the “six faces or aaru mukha”.  Agatthiyar says that chittham will accomplish mukti by itself, remaining at the heart chakra.

Pancha gana also means sakti, siva, vaalai, manas and prana.  Please refer to verses 201, 202, 203 and 397.

வாசி/சிவயோகத்தில் பிராணன், மனம், உணர்வு என்ற வாலை மேலே எழுப்பப்பட்டு மேலிருந்து அமிருதம் கீழே இறக்கப்படுகிறது. முதலில் விசுத்தியை அடையும் அது பின் மூலாதாரத்துக்கு இறக்கப்பட்டு சூட்சும சரீரமான சக்கரங்களின் மூலம் மேலே ஏற்றப்படுகிறது.  அதன்பிறகு அதைச் செய்யும் யோகி இதய சக்கரத்தில் நின்று உணர்வை முனைகளான மூலாதாரம் ஆக்னையில் வைத்து ஐந்து கணங்களையும் வெல்கிறார்.  இவ்வாறு அவர் காலத்தையும் இடத்தையும் கடந்த முக்தியை அடைகிறார்.  இந்த செயல்முறையை அகத்தியர் இப்பாடலில் விளக்குகிறார். 

இந்த செயல்முறை சிவயோக சித்தியையும் பஞ்ச கண தீட்சையையும் அருளும் என்றும் அதுவே ஆறாதார சித்தி என்றும் அதுவே ஆறுமுகம் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இந்த செயல்முறையை இதயத்தில் நின்று சித்தம் முடித்துவைக்கும் என்றும் கூறுகிறார் அவர்.

பஞ்ச கண தீட்சை என்றால் சிவ சக்தி வாலை மனஸ் மற்றும் பிராணன் என்றும் முன்னமே பார்த்தோம்.  பாடல்கள்  201, 202, 203, 397 பார்க்கவும்.

No comments:

Post a Comment