Verse
462
ஒடுக்கி மனதுருக்கமுடன் கொண்டாயானால்
உனது கெதிகால் வேக முரைக்கப் போமோ
இடுக்கமென்ற தீவினைகள் இடங்கெட்டோடும்
என்மகனே உன்வுடம்பு நாதமாகும்
அடுக்குநிலை ஆதாரம் அடங்கி வாழும்
ஆதிசிவ சாம்பவியாள் நிர்த்தஞ்செய்வாள்
தொடுக்கும் எல்லாம் முப்பூவின் வாசத்தாலே
சுக சீவ பிராணனது சுத்தமாமே
Translation:
Controlling
it, if you consume it with the mind melting
The
speed and the path of your breath- can anyone describe it?
The
fruits of evil actions will run away
My
son, your body will become nadha
The
layered adhara will abide and live so,
The
lady Adi Siva Sambhavi will dance
Everything
will be attaine due to the fragrance/vasi of the triple flower,
Sukha
Jiva Prana kala will be purified.
Commentary:
If
the yogin consumes the nectar with the help of vaasi and with the mind melting
in devotion and love, his breath will flow with incredible speed. His body will come nadha. The adhara that
exist in ascending order will abide. Adi
Siva Sambhavi, the Sakthi, will dance. Everything
will be accomplished due to the three akshara akara, ukara and makara. These three are called muppoo. Agatthiyar says they are attained due to the
fragrance of the three flowers. Vaasam
represents vaasi. Then the sukha jiva
pranan will get purified. This is the
pranan that is present in the body.
Thus, sukha jiva pranan represents the limited soul while the prapancha
pranan represents Supreme Being.
Sambhavi yogam is a process of merging the prana with the fire of kundalini and mind with consciousness. It is also called prana anala yogam. Please refer to the book Sambavi yogam by Hayagriva publications
http://nammabooks.com/Buy-Religion-Spiritual-Tamil-Books-Online/Buy-Tamil-books-online-Siddhargal/buy-Shambhavi-Yogam- Hayagreeva Pathipagam
முன்பாடலில் அகத்தியர் கூறிய விதத்தில்
அமிர்த்தத்தை வாசியின் உதவியால் மனம் பக்தியிலும் அன்பிலும் உருக, ஒரு யோகி
பருகினால் அவரது சுவாசம் அளப்பரிய வேகத்தில் பாயும். அவரது உடல் நாதமாகும். அடுக்கு நிலைகளில் இருக்கும் ஆதாரங்கள்
கட்டுப்பட்டு நிற்கும். ஆதி சிவசாம்பவி
என்னும் சக்தி அங்கு நர்த்தனம் புரிவாள்.
இவையனைத்தும் முப்பூ எனப்படும் அகார உகார மகாரத்தால், முப்பூவின் வாசத்தால்
அதாவது இவற்றை உச்சரித்து நடைபெறும் வாசியால் நிகழும். அதனால் உடலில் உள்ள பிராணனான சுக ஜீவ பிராணன்
சுத்தமாகும் என்று கூறுகிறார் அகத்தியர்.
உடலில் இருக்கும் பிராணன் ஜீவபிராணன், அதுவே
ஜீவாத்மா எனப்படுகிறது. பிரபஞ்சம்
முழுவதும் பரவியுள்ள பிராணன் பரமாத்மா எனப்படுகிறது. உடலில் இருக்கும் ஜீவபிராணன் இந்த வழிமுறையால்
சுத்தமடைகிறது.
பிராணனை குண்டலினி அக்னியுடன் சேர்த்து மனதை எண்ணமற்ற நிலையில் வைத்திருப்பதை சாம்பவி யோகம் என்பர். இது சாம்பவி முத்திரை அல்ல. இதைப் பற்றிய விவரங்களை ஹயக்ரீவா பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் காண்க.
பிராணனை குண்டலினி அக்னியுடன் சேர்த்து மனதை எண்ணமற்ற நிலையில் வைத்திருப்பதை சாம்பவி யோகம் என்பர். இது சாம்பவி முத்திரை அல்ல. இதைப் பற்றிய விவரங்களை ஹயக்ரீவா பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் காண்க.