Thursday 31 December 2015

269. Tapas and santhosha

Verse 269
சொல்லான நமக்குவந்த சொந்தமேது
சோத்தியந்தான் வந்தவகை எதுதானென்றும்
நல்லான வருத்தமதாய்ப் பார்த்துப் பாத்து
நன்மையுடன் நிரந்தரமு மாலோசித்து
பொல்லாது பூணதெல்லாம் விருத்தி பண்ணி
புத்தியுடன் திடப்படுதல் தபசாச்சப்பா
நில்லாமல் கிடைத்தமட்டும் சந்தோஷித்து
நன்மையுடன் இருப்பதுவே சந்தோஷங்காணே

Translation:
How did we get the relationships
That which is dimished (time) what is that?
As happiness and sorrow
Contemplating on this eternally
Realizing all that are evil and those that were adorned unnecessariy
Becoming mentally firm about (all these) is tapas
Being content with what is obtained 
Remaining happy is santhosha. See!

Commentary:
Agatthiyar lists the niyama beginning with tapas and santhosha.   He says that one should examine one's various relationships, things that diminish in life (such as time), things that which leaves a person etc. One should contemplate on these incessantly until one gets clarity after which one should remain firmly in one’s conviction.  He calls this as tapas.  Thus tapas is not going to the forest or starving oneself or performing austerities that trouble the body.  It is questioning the truth about everything, coming to a conclusion and remaining firmly in the convictions.  The previous step, yama will help in this. Agatthiyar explained yama as learning the Vedanta sara or essence of Vedanta from a true and expert guru.  This will help the person realize the answers for the above questions raised as a part of niyama.  After reaching the conclusion that person should remain firmly in his conclusions.  
He should not specifically seek pleasure but enjoy whatever comes his way.  Remaining good is happiness and one should live so.

Santhosha, the next niyama is being contented with what one has in life.  



இப்பாடலில் அகத்தியர் தபஸ், சந்தோசம் என்ற நியமத்தின் இரு பகுதிகளை விளக்குகிறார்.  தபஸ் என்பது ஒருவர் தமது உறவுகளை, தன்னை விட்டு விலகுபவற்றைப் பற்றி, எவற்றை விலக்க வேண்டும் என்பதைப் பற்றி நன்கு சிந்தித்து அவற்றைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவில் அசையாமல் இருப்பது. இவ்வாறு தபஸ் என்பது உடலை வருத்திக்கொள்ளும் செயலல்ல என்று கூறுகிறார் அகத்தியர்.
அகத்தியர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான பதில்களைப் பெற முந்தைய படியான இயமம் ஒருவருக்கு உதவும்.  இயமம் என்பது வேதாந்த சாரத்தை குருமுகமாக அறிவது என்று முந்தைய பாடலில் அகத்தியர் கூறினார்  இந்த பதில்களைப் அறிந்துகொண்டு ஒருவர் தானாக சந்தோஷத்தைத் தேடாமல் வரும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.  உண்மையான சந்தோசம் என்பது இருப்பதைக் கொண்டு திருப்தியடைவது என்று அவர் கூறுகிறார். 

No comments:

Post a Comment