Wednesday 16 December 2015

261. Brahma charya

Verse 261
பிரம்மம்
சொல்லாது ருதுகால மில்லா நேரம்
சுகமான பெண் வெறுத்தால் பிரம்மமென்பார்
உள்ளான சரீரமே சுபாவமாக                    
உத்தமனே லக்ஷணமா விருத்தியாலே
நல்லான பிரம்மமதே சுபாவமென்று
நன்மையுடன் நிரந்தரமும் ஆலோசித்தால்
வில்லான திதுபிரம்ம சரீரமென்று
விரிந்துரைப்பார் வேதாந்தி அறிவார் பாரே

Translation:
Brahman
Do not say, "When it is not the right time
Detesting the pleasure from a women is brahmam".
The body in its natural state
The supreme One! Due to its identity 
Having one's innate nature as that of the good Brahman. 
Thinking so permanently
The body will become brahma sareeram
The Vedantin will explain it in detail, see it.

Commentary:

The fourth quality in iyama is brahmacharya.  Brahma+charya is discipline concerning brahmam. Agathiyar explains the error in our perspective of this term.
Brahmacharya is generally considered as abstaining from physical pleasures.  "Some say that not seeking the pleasure of a woman unless it is the time for physical pleasure is brahmacharya.  Do not say that," he says.  "If you think at all times that the Jiva is Brahman as it is only a modification/manifestation of Brahman then it is Brahmacharya" says Agatthiyar.  He also adds that if one remains with that thought then one will get Brahma sareera.  This is the actual Brahma charya. 

இப்பாடலில் அகத்தியர் நான்காவது தன்மையான பிரம்மசரியத்தை விளக்குகிறார்.
பிரம்மம்+சரியை என்பதே பிரம்மசரியை.  இந்த சொல் எவ்வளவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று காட்டுகிறார் அகத்தியர்.
"பொதுவாக மக்கள் ருதுக்காலம் அல்லாதபோது பெண்ணின்பத்தை விலக்குவதே பிரம்மசரியம் என்று சொல்லாதே" என்று தொடங்கும் அகத்தியர் ஜீவாத்மாவின் லட்சணம் அல்லது தன்மை பிரம்மமாக இருப்பதுதான் என்னெனில் அது பிரம்மத்தின் விருத்தி அல்லது மாறுபாடுதான் என்று கூறுகிறார். 

இவ்வாறு ஒருவர் தனது இயல்பான தன்மை பிரம்மம்தான் என்று நிரந்தரமாக நினைப்பதே பிரம்மசரியை என்றும் அவ்வாறு இருந்தால் பிரம்மசரீரம் கிட்டும் என்றும் இப்பாடலை முடிக்கிறார் அகத்தியர்.


No comments:

Post a Comment