Saturday 5 December 2015

258. Yama according to a siddhantin

Verse 258
இயம வகை
நில்லப்பா அஷ்டாங்கம் எட்டுமாச்சு
நேராக இயமமென்ற பத்துங் கேளு
சொல்லப்பா லக்ஷணத்தைச் சொல்லுகிறேன் கேள்
சுகமான நரமிருக பக்ஷி என்றும்
விள்ளபா உந்தனிட சுகதுக்கம்போல
மேன்மை பெற பார்க்க அங்கிசைஎன்பார்கள்
நல்லப்பா சித்தாத்தி சொல்லுவது மைந்தா
நாட்டமுடன் வேதாந்தி சொல்லுவதுங் கேளே

Translation:
Types of yama

Stop son the ashtanga became eight
Listen about the ten yama
I will tell you the details
People, animals and birds-
consider their happiness and sorrow like yours
If you consider so then it is ahimsa
These words of siddhanthi is good, son,
Listen to what vedanthi says.

Commentary:
Agatthiyar is beginning to explain yama or iyamam.  Unlike the previous steps Agatthiyar is explaining this elaborately.  He listed the other steps before and is now beginning to explain them in detail, beginning with yama.

He begins with details about ahimsa.  He calls it angisai.  He says that a Siddhantin will say that ahimsa is considering the happiness and sorrow of other lifeforms as one's own.
He will describe the opinion of a Vedantin next.

அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிகளை விளக்கிக்கொண்டிருக்கிறார் அகத்தியர்.  இந்த யோகத்தின் முதல் படி இயமம்.  பிற படிகளை மேற்பாடல்களில் அவர் சுட்டிக்காட்டிவிட்டு மேலே விளக்கப்போகிறார்.  இயமத்தை முதலில் குறிப்பிடாமல் இங்கு குறிப்பிட்டு விளக்கவும் செய்கிறார்.

இயமம் என்றால் என்ன என்று ஒரு சித்தாந்தி எவ்வாறு விளக்குவான் என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். எல்லா உயிர்களின் சுக துக்கங்களையும் ஒருவர் தனது சுக துக்கத்தைப் போல எண்ணுவதே அகிம்சை என்று ஒரு சித்தாந்தி கூறுவான் என்கிறார் அவர்.  அகிம்சையை அவர் அங்கிசை என்று அழைக்கிறார்.
 அடுத்த பாடலில் ஒரு வேதாந்தி என்ன கூறுவான் என்று விளக்குகிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment