Sunday 27 December 2015

265. Food and mukhti

Verse 265
இல்லையடா இதைவிட்டால் முத்தியென்று
ஏகாந்த எக்கியமா முனிதான் சொன்னார்
தொல்லையடா மற்றதெல்லாம் என்று பூண
சுகமான திருதிஎன்றதிதுவுமாச்சு
கல்லையடா ஆகாரச் சுருக்கில் மைந்தா
கருணையுடன் மிதாகாரம் என்பாரையோ
அல்லைஎன்ற சொற்பனத்தில் பத்தைத்தான் கண்டு
அடங்கி நின்றால் பிரபஞ்சம் அகிலந் தானே

Translation:
Mukhti is none other than this
The ekantha yagna mamuni said so
All others are trouble- if this is accepted
It became the comfortable drithi
Son, if the food is reduced
Or if food is consumed in moderation/or food with moderate taste is consumed
In the dream they will see the attachment
If they remain controlled, then the world is the universe.

Commentary:
Agatthiyar says that his definition of mukthi was in line with the words of Yagna mahamuni.  He is one of the seven rishis Agattiyar mentioned at the beginning of this world.  He said that they were the original souls that created other principles.  To realize the truth about mukhti one should reduce the food that is consumed and keep it in moderation.  one of the components of iyama is midhaakaaram or eating in moderation.  
All the attachments occur because of the quantity and nature of the food one consumes.   Thus, food leads to attachment.  Hence, the yogins are advised to be careful about what they eat.  Then one will be able to see the attachment and keep away from it.  If a person is able to do so then his world or locus will not be limited to this world only.  It will encompass all the universes.

தான் முக்தியைப் பற்றிக் கூறிய கருத்துக்களை யக்ஞய மகாமுனிவரும் கூறியுள்ளார் என்கிறார் அகத்தியர்.  உலகம் தோன்றியதைப் பற்றி விளக்கும்போது அகத்தியர் கூறிய ஏழு ரிஷிகளில் இவரும் ஒருவர்.

முக்தியைப் பற்றி உணர வேண்டும் என்றால் ஒருவர் உணவைக் குறைக்க வேண்டும் அல்லது மிதமான உணவை உண்ண வேண்டும் என்கிறார் அகத்தியர்.  மிதாகாரம் என்பது இயமத்தின் ஒரு பகுதி.  

உணவே ஒருவரது குணங்களைத் தீர்மானிக்கிறது.  எந்த உணவை எப்போது, எவ்வளவு உண்கிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரது செயல்கள் அமைகின்றன.  இவ்வாறு உணவைக் குறைத்தால் ஒருவரால் பற்று என்றால் என்ன என்று பார்க்க முடியும் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு ஒருவர் பார்த்தால் அவரது உலகம் என்பது பிரபஞ்சமாக இருக்கும் என்றும் கூறுகிறார் அவர்.  அதாவது அவர் படைப்பைப் பற்றிய உண்மையை அறிவார் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment