Wednesday 16 December 2015

260. sathyam and aarthikam

Verse 260
தானென்ற வஸ்துவையும் தவிர வேறே
சாதகந்தான் இல்லையென்று சஞ்சலித்து
பானென்ற சத்தியமாம் வாக்குக் காயம்
பத்தியுடன் சுத்தமதாய் பதிவாய்நின்று
ஆனென்றே இருக்கிறதை ஆத்தீகமென்பார்
அன்னாதசரா சரீரத்தை சுலபமாக்க
கோனென்று நிதானித்து பின்னையொன்று
கூறாதே ஆர்த்தீகம் என்று சொல்லே

Translation:
Other than the entity, Self,
There is no other sadhaka (practice)-deciding so,
The truth of vak (speech), and body
Remaining as purity with devotion
They will say remaining so is aartheekam
To make the intolerable life and world easy
Do not pause and say (I will do it) later
Say asthikam

Commentary:
There seems to be scribal error here.  In verse 248 he gave the list of the 11 activities which constitute iyama.  The first was ahimsa that he explained in the previous two verses.  Here, he seems to be explaining satyam and aartheekam.
Satyam according to siddhanthin is not uttering lies.  According to Vedantin it is realizing and remaining with the firm belief that there is no other practice that is essential than that of Self.  Thus one understands self through self.  
Then Agatthiyar seems to be explaining a quality called aartheekam.  Line 5 calls this as aatheekam which sounds like aastheekam.  However, aastheekam is a quality generally considered as niyama, the next limb of ashtanga yoga.

Aartheekam means one's natural quality.  Agatthiyar says that remaining with purity of words, actions and devotion is aartheekam.  This should be one's inherent nature.

In the list given in verse 248 Agatthiyar called this the third quality which is wrongly written as anthikam. 

இப்பகுதியில் உள்ள பாடல்களில் பல எழுத்துப் பிழைகள் உள்ளன.  
இப்பாடலில் அகத்தியர் சத்தியத்தையும் மூன்றாவது தன்மையான ஆர்த்திகத்தையும் விளக்குகிறார்.  பாடல் 248ல் இது தவறாக அந்திகம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 

சத்தியம் என்பது பொய்பேசாமை என்று சித்தாந்தி கூறுவார். வேதாந்தியோ சத்தியம் என்பது தன்னை அறிவதைவிட வேறு சாதனை இல்லை என்று உணருவதையே சத்தியம் என்பார் என்கிறார் அகத்தியர்.
இதனை அடுத்து அவர் ஆர்த்திகத்தை விளக்குகிறார். ஆர்த்திகம் என்பது ஒருவரது இயற்கையான தன்மை.  இந்த தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் மனம் சொல் செயல் ஆகியவை தூய்மையானவையாக, பக்தி நிறைந்தவையாக இருக்கவேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த சொல் ஐந்தாம் அடியில் ஆத்திகம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திகம் என்பது நியமத்தின் ஒரு அம்சம்.
பொதுவாக இயமத்தில் உள்ள சில தன்மைகள் நியமங்களாகக் கருதப்படுகின்றன.  

No comments:

Post a Comment