Thursday 31 December 2015

268. Niyama- 1

Verse 268
நியம வகை
அறிவான மரையினுள்ளே பிரிந்ததென்னும்
அப்பனே நிஷ்களமாஞ் சந்திராயணத்தை
நெறியான விரதமதாய் சரீரம்வத்தி
நேர்மையுட னிருப்பதையோ தபசென்பார்கள்
விரிவான சத்தியந்தான் என்பதேது
விபரமெல்லாம் வித்தைஎன்று சொல்வதேது
சரியாக தானென்னப் பட்டதாரு
சங்கையுடன் நானென்ற சொல்தான் ஆரே

Translation:
Types of Niyama
As that which was found in Veda born from knowledge
Son, the faultless chandrayana
As proper austerity, with the body becoming emaciated
Will they call that as tapas?
Elaborate truth, what is it?
All the details that are called vidya- what is called so?
Truly, who is called self?
Who says “I” with knowledge?

Commentary:
Niyama is said to be inner disciplines. Agatthiyar listed them in verse 249 as follows:

Tapas (austerity, perseverance), santhosha (contentment), aasthikam (faith in self, in god,), dhaanam (generosity), inner siva puja (isvara puja), siddhantha sravanam (listening to scriptures), sivam- right knowledge, sivamathi (reflection), vratha – japa and huta- mantra recitation and rituals.

Agatthiyar shows that us how these disciples becomes true austerities.  He says that performing austerities that starve the body are not tapas.  Chandrayana is a vrata or austerity when the person decreases his food intake from full moon upto newmoon day.  On the new moon day he fasts for the whole day.  Then, as the moon grows he also increases his food consumption until the full moon.  Agatthiyar says that this is not tapas.  According to him, questioning the truth of everthing is real austerity. He questions what is satyam or that which is immutable, what is self, what are real vidya or knowledge, what is self and who calls himself as Self. 


நியமங்கள் என்பவை உள்ளொழுக்கங்கள். அவை யாவை என்று அவர் பாடல் 249 ல் முன்பு கூறினார். அவை தபஸ், சந்தோசம், ஆஸ்திகம்,தானம், சிவ பூசை, சிவம், சிவமதி, சித்தாந்த சிரவணம், விரதம்- ஜபம் ஹுதம் என்பவை.
 இந்த முதல் பாடலில் அவர் தபஸ் என்றால் என்ன என்று விளக்குகிறார். உடலை வத்தச் செய்யும் சந்திராயணம் போன்றவை உண்மையான தவம் அல்ல என்று துவங்குகிறார் அவர்.  சந்திராயண விரதம் என்பது என்னவென்றால் ஒருவர் சந்திரன் குறைவதைப் போல தனது உணவை பௌர்ணமி முதல் அமாவசை வரை குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று முழுப்பட்டினி கிடக்கிறார்.  மீண்டும் சந்திரன் வளர்வதைப் போல தனது உணவை சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே வந்து பௌர்ணமியன்று முழு உணவு எடுத்துக்கொள்கிறார்.  இது உடலுக்கான உபாயம் மட்டுமே, உண்மையான தவம் இதுவல்ல என்கிறார் அகத்தியர்.  உண்மையான தவம் என்பது சத்தியம் அல்லது மாற்றமில்லாதது எது, அதனைப் பற்றிய விவரங்களான வித்தைகள் என்றால் என்ன, தான் என்பது என்ன, யார் இவ்வாறு தான் என்று கூறுகிறார் என்ற கேள்விகளை எழுப்புகிறார் அகத்தியர்.  இந்த கேள்விகளுக்கு விடைகாண்பதே நியமம் என்று இவ்வாறு குறிப்பால் கூறுகிறார் அவர்.

No comments:

Post a Comment