Verse 362
சித்தான தாவான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலிஎன்று தியானஞ் செய்து
வத்தாத பூரணமாஞ் சிவயோக சித்தி
மகத்தான கற்பூர தீபமது சித்தி
வித்தான பிரம்மமொடு சரஸ்பதியுஞ்சித்தி
வேதமயமான சிவா போதஞ் சித்தி
சத்தான தாபன முத் திரையின் மகிமை
சங்கையுடன் கண்டு சிவ யோகஞ் செய்யே
Translation:
Performing the
“thaavaana” mudra
Contemplating kili
The poornam,
sivayoga siddhi
The siddhi of
the lamp of camphor
Brahma and
Sarasvathi siddhi
The embodiment
of Veda, the siva bodham siddhi
This is the
glory of the sthapana mudra
Perform sivayoga
seeing this.
Commentary:
Agatthiyar is
talking about the sthapana mudra in this verse.
It is turning the palms to face down with all the fingers extended, the
thumb not being visible. While aavaahana
means invoking sthapana means establishing.
Agatthiyar says that the mantra for this is kili. When this mudra is performed contemplating
the mantra it grants sivay yoga siddhi, the siddhi of atma darsanam, siva bodha
siddhi and the siddhi of brahma and sarasvathi.
This mudra is performed along with sivayogam.
ஸ்தாபன முத்திரையைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார்
அகத்தியர். ஆவாகனம் என்பது ஒரு தேவதையை
ஒன்றில் வரவழைப்பது என்றால் ஸ்தாபனம் என்பது அதை அங்கு குடிகொள்ளச் செய்வது. ஸ்தாபன முத்திரைக்கு கைகள் தரையை நோக்கி
வைக்கப்பட்டு விரல்கள் நீட்டி கட்டைவிரல் உள்ளே அடக்கிவைக்கப்படுகிறது. இந்த முத்திரை செய்யும்போது தியானிக்க வேண்டிய
மந்திரம் கிலி என்கிறார் அகத்தியர். இந்த
முத்திரையினால் ஒருவர் சிவயோக சித்தி, ஆத்மசித்தி, பிரம்மா மற்றும் சரஸ்வதி
சித்தி, சிவபோத சித்தி ஆகியவற்றைப் பெறுவார் என்கும் அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment