Verse 340
மயேஸ்வரி பூசை
பாரப்பா இந்த விதந் தேவி பூசை
பதறாமல் செய்து சிவா யோகம் பார்த்தால்
நேரப்பா நின்றவனாம் மகனே என்று
நினைத்தவரந் தான் கொடுப்பாள் நிலையைப் பற்றி
சாரப்பா வாசி சிவா யோகத்தாலே
சார்ந்திருந்து பூரணியைப் பூசை செய்து
காரப்பா ஆதாரம் நன்றாய்ப் பார்த்து
கருத்தை வைத்து பூசை செய்யக் கருவைக் கேளே
Translation:
Maheswari Puja
See son, if
you perform Devi puja this way
Patiently and
perceive Sivayogam
She will call
you son
And grant all
the boons wished for. Hold the position
And associate
with it. To associate with vaasi yogam,
Perform
worship of poorani
To see the
adhara well
and perform
her puja, listen to the method.
Commentary:
Agatthiyar
talks about Sakti puja in this verse.
After performing yoga and raising consciousness to higher states one has
to perform sakti puja. Agatthiyar calls
this Maheswari puja. He says that if
this worship is performed after attaining Siva yogam, perceiving the adhara,
Sakthi will grant all the boons one wishes for.
அஷ்டாங்க யோகத்தையும் சமாதியையும் செய்து உயருணர்வை
எழுப்பிய பிறகு சக்தி பூசை செய்யவேண்டும் என்று கூறுகிறார் அகத்தியர். இந்தப் பூசையை மகேஸ்வரி பூஜை என்கிறார்
அவர். இந்த பூசையை ஒருவர் சிவயோகத்தில்
இருந்து ஆதாரங்களை நன்றாகப் பார்த்துவிட்டு செய்தால் சக்தி அனைத்து வரங்களையும்
அருளுவாள் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment