Thursday 3 March 2016

333. How to see Siva roopa

Verse 333
தேடப்பா கண்மூடி விழியைத்தானே
திருவான சுழி முனையில் கருத்தை வைத்து
நாடப்பா நேத்திரத்தைச் சூட்டிப் பாரு
நாதாந்த சுடர் விழியில் விரலாலாட்ட
கூட்டப்பா பிரபைஒளி என்ன சொல்வேன்
கோடான கோடிரவி பிரபை வீசும்
சூடப்பா அப்பிரபை தானே கண்டால்
சுகமான சிவரூபம் தான்தானாச்சே

Translation:
Search son, closing the eyes, the awareness
Placing attention at the tip of the whorl
Seek son focusing on the eye
Shaking with finger, the eye of the nadhantha flame
Join it son.  How can I describe the brilliance?
It is the illumination equivalent to millions and millions of suns
Adorn it, if you see the light
It is the Sivaroopam.

Commentary:
Agatthiyar is describing an advanced practice here.  Attention is focused at ajna, eyes are closed (the advanced way of sambhavi mudra) and the region of ajna cakra is stirred with the finger.  Then a great effulgence ensues which he says is equivalent to millions of suns.  This is sivaroopam or form of consciousness.


அகத்தியர் இங்கு ஒரு முக்கியமான பயிற்சியை விளக்குகிறார். அது சாம்பவி முத்திரையின் அடுத்த கட்டம்போலத் தோன்றுகிறது.  கண்களை மூடி, ஆக்னையைப் பார்த்து, விரலால் அந்த இடத்தை ஆட்ட வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் கோடி சூரியப் பிரகாசம் தோன்றும் என்றும் அவர் கூறுகிறார்.  இதுதான் சிவரூபம் என்றும் அவர் கூறுகிறார். 

No comments:

Post a Comment