Verse 351
பொருளான வேதாந்தஞ் சித்தாந்தமாகி
புகழ்ந்து நின்ற சமரசத்தின் போக்குமாகி
அருளாகி அருளிருந்த அகண்டமாகி
அளவற்ற ஆகாச ரூபமாகி
மருளாகி மருள் கண்டு அறிவுமாகி
மகத்தான சோதி சிவ சாக்ஷியாகி
இருளாகி ஒளியாகி வெளியுமாகி
ஏத்தரிய பூரணமா இருந்த தாயே
Translation:
As the Vedanta
Siddhantham
As the path of
the praise worthy samaras am
As Grace, as
the expanse where the grace resides
As the form of
the unlimited akasa
As delusion
and awaress following knowledge about delusion
As the
incredible effulgence, as the siva Saakshi
As darkness as
light as space
The Mother,
you remain as the fully complete that is hard to praise (fully).
Commentary:
Sakti is the
terminus of knowledge, that is, she is the experience. She is the samarasa or the state of harmony
with Siva. She is the grace that remains
in the supreme space. Agatthiyar has
pointed out before that there was darkness in which grace occurred. This led to the emergence of light which led
to the emergence of space. Thus light
and space are results of grace. Akasha
is different from sky. It is the space
principle, veLi. Sakthi is maruL or
delusion. She is also the awarenss that
occurs when the soul becomes aware of the maruL. She is the jyothi, the witness of
consciousness or siva Saakshi. She is
the darkness, the light, the space. She
is the mother with unlimited glory who cannot be praised completely.
சக்தியே அறிவின் எல்லை, அவளே வேதாந்த சித்தாந்தம். அவளே சமரசம் அல்லது சிவனுக்குச் சமமானவள். அவளே அருள், அருள் இருக்கும் வெளி. முன்பு உலகம் எவ்வாறு தோன்றியது என்று
கூறிவந்தபோது அகத்தியர் முதலில் இருள் இருந்தது.
அதில் அருள் பிறந்து ஒளியை ஏற்படுத்தியது.
அந்த ஒளியினால் வெளி தோன்றியது என்று கூறினார். இவ்வாறு வெளியும் ஒளியும் அருளின்
வெளிப்பாடுகளே. அவளே ஆகாசம். ஆகாசம் என்பது வானம் அல்ல. அது தத்துவமல்ல. வெளி எனப்படுவது. எல்லையற்ற பெருமையை உடைய சக்தியை ஒருவரால்
முழுவதுமாகப் போற்ற இயலாது என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment