Saturday 5 March 2016

337. Points to keep while performing internal worship

Verse 337
தானான சூக்ஷமது என்னவென்றால்
தன்மையுடன் போம் வாய்வு சிவமதாகும்
ஊனான உட்புகுதல் சத்தியாகும்
உண்மையுடன் இதுவறிந்து தன்னைப் பார்த்து
கோனான குருபீடம் புருவ மத்தி
குருவான அனுக்கிரக சுழினைமீதில்
வானான கேசரமே தானேதானாய்
மனங்குவிந்து பூசை செய்யும் வகையைக் கேளே

Translation:
What is the subtlety of the self?
The air that goes out is sivam
The air that enters the body is sakthi
Knowing this truth, seeing the self
At the gurupetam, the middle of the brow, the king of loci
Over the guru, the graceful whorl
The sky, the kecharam as self
Listen to the method of worship with mental focus.

Commentary:
Agatthiyar is explaining vaasi yogam here.  He says the air principle that comes in during inhalation is sakti and that which leaves the body is sivam.  The self is seen at ajna the guru petam, the self is the kecharam the sky principle.  One should keep this in mind while performing worship with mental focus.


வாசியோகத்தை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  உள்ளே வரும் வாயு சக்தி, வெளியே போகும் வாயு சிவம்,  ஆத்மா குருபீடம் எனப்படும் ஆக்ஞையில் காணப்படும், அதுவே கேசரம் எனப்படும் வான் தத்துவம்.  இவற்றை மனத்தில் கொண்டு உள்பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment