Verse 347
ஒளியாகி ஒளி நிறைந்த வெளியுமாகி
ஒன்றாகி ரெண்டாகி உறுதியாகி
வளியாகித் தீயாகி வானுமாகி
மவுனரச யோகாமென்னும் ஞானமாகித்
தெளிவாகி தெளிவினுள்ளே ஒளியுமாகிச்
சித்தாதி ரிஷிகள் சித்தர் மனமுமாகி
நெளிவாகி சுழிவாகித் தெளிவினுள்ளே
நேத்திரத்துக் கடங்காத பூரணமே என்னே
Translation:
Becoming
effulgence, as the space filled with effulgence
Becoming one,
two and firmness
Becoming air,
fire and sky
Becoming the
mauna rasa yoga-the jnana
Becoming clarity,
the light of clarity
Becoming siddhas,
rishi, the hearts of siddhas
Becoming the
curve, whorl, within the clarity
The fully
complete (poornam) that cannot be contained by the eye.
Commentary:
Agatthiyar
explained before that initially there was darkness. From darkness emerged light and from light
emerged space. Thus sakthi, the
manifestation is the light and the light that fills space. She is the singularity when she remains one
with Siva, without distinction. She is
also two when she remains as Siva and Sakthi, paraparam and paraparai. She is the five elements, the wisdom, the
clarity or consciousness and the light of consciousness. She is the supreme souls, their minds, the
cakra, the poorna who cannot be contained within the eye.
முன்பு அகத்தியர் வெளிப்பாடு எவ்வாறு ஏற்பட்டது என்று
கூறினார். முதலில் இருள் இருந்தது. அதிலிருந்து
ஒளி பிறந்தது. ஒளியிலிருந்து வெளி பிறந்தது. அதனால்தான் சக்தியே ஒளியும் ஒளி நிறைந்த வெளியுமாவாள் என்கிறார் அகத்தியர். அவள் சிவனுடன் சேர்ந்த
நிலையில் ஒன்றாகவும் சிவன் சக்தி அல்லது பராபரம் பராபரை என்னும்போது இரண்டாகவும்
இருக்கிறாள். எல்லாப்பொருள்களும் ஒருமை
நிலையிலிருந்து இருமை அல்லது தான் அது என்ற நிலையை அடைந்தவைதான். இவ்வாறு சக்தியே காரணமும் காரியமுமாக
இருக்கிறாள். அவளே ஐம்பூதங்களாகவும்
அவையனைத்தும் ஒன்றான நிலையாகவும் இருக்கிறாள்.
அவளே பரவுணர்வு என்னும் தெளிவாக, அந்த ஞானத்தால் பிறந்த அறிவு என்ற
ஒளியாகவும் இருக்கிறாள். அவளே
உயராத்மாக்களான சித்தர்களாகவும் ரிஷிகளாகவும் அவர்களது மனமாகவும்
இருக்கிறாள். அவளே குண்டலினி சுழியாவார். அவளே பரவுணர்வு, பரவுணர்வின் ஒளி. அவளே கண்ணுக்குள் அடங்காத பூரணம்.
No comments:
Post a Comment