Verse 357
ஆமென்ற அஷ்டாக்ஷரங்கள் எட்டுமாகி
ஆதிநவக் கிரகமுடன் தீக்ஷையாகி
ஓமென்ற தீக்ஷை தானாகி
உயிராய் நின்ற
ஓங்கார றீங்கார உருவுமாகி
நாமென்ற நவ்வுடனே மவ்வுமாகி
நலமான சிவ்வுடனே வவ்வும் யவ்வாய்
தாமென்ற அய்யுடனே கிலியு மாகி
சகலவுயிர் சவ்வாகி நின்ற தாயே
Translation:
As the letters
of aam, the eight
As the nava
graha and deeksha
As the deeksha
of om, as that which remained as the soul
The
form/embodiment of omkara reenkara
As na and ma
of naam
The good siv,
vav and yav
As the ai,
kili
As the sav of
all the souls, the mother who remained so.
Commentary:
The six
letters that Agatthiyar mentioned in the previous verse may be om (in its
singular state) namasivaya. He says that
this is none other than Sakthi. The
expanded form of omkara is namasivaya. Thus
om namasivaya represents the nirguna and saguna Brahman remaining together.
Sakthi is also
the eight letters of aim, kleem, sau,namasivaya. This mantra includes the sakthi bheeja-aim,
kleem, sau and siva bhija namasivaya.
Sakthi is also
the embodiment of om reeng. As Agatthiyar has mentioned reeng along with om it
makes one wonder if it is hreem. This is
the equivalent of om for sakthi. It
represents her creative power.
The navagraha
mentioned in this verses throws open an interesting connotation due to its
context. Navagraha is used generally to
refer to the nine planets. The word
graha also means house. Thus navagraha
may mean nine houses or new house. In his work
Devi chakaram Agatthiyar calls the lines that constitute the basic nine
trianges as those of the planets. Thus
the planets, these lines, create nine house that give rise to 43 total
triangles. Nava aavarana or enclosures
with their own set of presiding deities is also known in Srividya the preceptor of which is Agatthiyar. Thus, the navagraha that Agatthiyar has
mentioned in this verse may mean anyone of these. Sricakra is a diagrammatic representation
of the macro and microcosm. Hence,
Agatthiyar calls it as subtlety.
ஆறு எழுத்துக்கள் என்று முந்தைய பாடலில் அகத்தியர்
குறிப்பிட்டது ஓம் (ஒருமை நிலையில்) நமசிவய என்பதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இதுவும் சக்திதான் என்கிறார் அகத்தியர். ஓம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய நிலை.
நமசிவய என்பது அதன் விரிவு. இவ்வாறு ஓம்
நமசிவய என்பது நிர்குண சகுண பிரம்ம நிலைகளைக் குறிக்கிறது.
சக்தியே எட்டு எழுத்துக்களான ஐம் க்லீம் சௌ நமசிவய
என்கிறார் அகத்தியர். இந்த மந்திரத்தில்
சக்தி பீசமும் சிவபீஜமும் விரிவான நிலையில் உள்ளன.
சக்தியே ஓம் ரீங் என்பது உருவு என்கிறார் அகத்தியர். ரீங் என்பது ஹ்ரீம் என்று இருக்குமோ என்று
தோன்றுகிறது ஏனென்றால் அது சக்தியின் ஓங்காரம்.
அது அவளது படைப்புச் சக்தியைக் குறிக்கிறது.
இப்பாடலில் அகத்தியர் நவக்கிரக சூட்சுமத்தையும்
குறிப்பிட்டுள்ளார். நவகிரகம் என்பது
பொதுவாக ஒன்பது கோள்களைக் குறித்தாலும் கிரகம் என்ற சொல் வீடு என்றும்
பொருள்படும். இவ்வாறு இச்சொல் ஒன்பது
வீடுகள் அல்லது புதுமையான வீடு என்ற பொருள்களையும் தருகிறது. ஸ்ரீவித்யா காடி சம்பிரதாயத்தின் ரிஷி அகத்தியர்
ஆவார். அவர் தனது தேவி சக்கரம் என்ற நூலில்
எவ்வாறு ஸ்ரீ சக்கரத்தை வரைவது என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் குறுக்கு வரிகளை கிரகங்களின்
பெயரிட்டு குறிப்பிடுகிறார். இந்த வரிகள் ஒன்பது பிரதம முக்கோணங்களையும்
அவற்றிலிருந்து பிற முக்கோணங்களையும் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு ஒன்பது வீடுகள் அல்லது நவகிரகம்
தோன்றுகிறது. மந்திரங்களைக் குறிப்பிடும்
பாடலில் அகத்தியர் நவகிரகத்தைக் குறிப்பிட்டிருப்பதால் இந்தப் பொருளிலும் அவர்
கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment