Saturday 19 March 2016

354. She is big and small, she is eight and four

Verse 354
குறியாகி வேதாந்தக் காக்ஷியாகி
குணமாகி மனமாகி அதுவுந்தாண்டி
நெறியாகி ஆதியந்த சூக்ஷமாகி
நேரான வாசிதிரு வாசியாகி
சிறிதாகிப் பெரிதாகி ச் சீவனாகிச்
சீவநிலை காலாகித் தெளிவுமாகி
பெரிதாகி எட்டுடனே நாலுமாகி
பேரொளியாய்ச் சித்தொளியாய் நின்ற தாயே

Translation:
As the sign/indication as the image of Vedanta
As quality, as the mind, going beyond there
As the path/discipline, as the subtlety of origin and terminus
As the regulated lifeforce, the sacred vaasi
As big and small and as Jiva
As the prana of jiva, as the clarity
As the four along with eight
As the great effulgence, as the small effulgence, the mother who stood so.

Commentary:
“kuri” or sign is lingam or identity.  She is the kuri or the supreme state.  She is the scene that Vedanta unfolds.  She is the embodiment of the teachings of Vedanta.  She is the quality, and the mind that perceives the qualities.  She is also beyond the quality and the mind, she is the discipline, the path.  She is the origin terminus- the Supreme subtlety.  She is the life force which when regulated becomes the sacred life force or Thiruvaasi.  She is the smallest of the small and biggest of the big- anoraneeyaan mahatho maheeyaan.  She is the Jiva and the prana.  She is the clarity or supreme awareness.  The eight and four may be the two types of states that constitute the dvadasa kala.  The eight are the gross states while the four are subtle states. 
She is the great effulgence- the Supreme and the small effulgence- the jiva.  She is thus the limited consciousness as well as supreme consciousness.  She is the mother.


குறி என்பது சமஸ்கிருதத்தில் லிங்கம் எனப்படுகிறது.  அதுவே ஒன்றை இது என்று காட்டுகிறது.  சக்தியே வேதாந்த உபதேசம் வரையும் காட்சி,  வேதாந்தம் அவளைப் பற்றித்தான் பேசுகிறது.  அவளே குணங்களும் அந்த குணங்களை உணரும் மனமும்.  அவளே இந்த இரண்டையும் கடந்த நெறியும் ஆவாள்.  அவளே ஆதி அந்தம் எனப்படும் சூட்சுமம்,  அவளே நெறிப்படுத்தப்பட்ட உயிர்ச் சக்தியான திருவாசி.  அவளே சிறியதும் பெரியதும்- அணுவினும் அணுவானது, பெரியதினும் பெரியதானது.  அவளே ஜீவன், அவளே பிராணன்.  அவளே தெளிவு அவளே எட்டு நான்கு எனப்படும் துவாதச கலாநிலைகள்.  அவளே சிறிய ஒளி எனப்படும் சிற்றறிவு, அவளே பேரொளி எனப்படும் பேரறிவு.  அவளே தாய். 

No comments:

Post a Comment