Verse 146
காணவே பதிங் கோடி செல்லும்போது
காசிமா முநியவருங் கயிலாசமாவார்
பூணவே அந்தநாள் எண்கோடி மீண்டால்
புகழான மாமுனிக்கி இடறேயாகுந்
தோணவே அந்தநாள் நவகோடி மீண்டால்
சுகமான ஈஸ்வரமுனியும் பிரம்மாவாவார்
பேணவே அந்தநாள் ஏழு கோடி சென்றால்
பிலமான எண்கோணமுனி தனக்குக் கேளே
Translation:
If such days
ten crores pass by
Kasi mamuni
will attain Kailasa
If eight crore
such days pass by
The pugazh
maamuni will attain completion
If nine such
crore days pass by
Isvara muni
will become Brahman
If when seven
crore such days pass by
The Enkona
muni will- hear about him.
Commentary:
This verse
talks about Kasi muni, Pugazh Mamuni, Isvara muni and Enkona muni and their
life span. The following link gives the
time scales in manvantara and kalpa along with the names of rishis responsible
for each of the manvantaram.
இப்பாடலில் அகத்தியர் காசி முனி, புகழ் மாமுனி, ஈஸ்வர முனி,
எண்கோண முனி என்பவர்களைக் குறிப்பிட்டு அவர்களது காலங்களைக் கூறுகிறார். நமது நூல்கள்
நமது நூல்கள் கால அளவுகளைக் குறிக்கும்போது மன்வந்தரம்
கல்பம் என்ற அளவுகளைக் குறிப்பிட்டு ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் ஒரு சப்த ரிஷி
குழு பொறுப்பேற்கின்றனர் என்று கூறுகின்றன.
கீழ்க்காணும் தளத்தில் இதைப் பற்றிய விவரங்களைக் காணலாம். https://en.wikipedia.org/wiki/Saptarishi
No comments:
Post a Comment