Verse 142
பாரடா திரேதாயுகம் அதனைக் கேளு
பதினேழுலக்ஷத்தொன்பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக் கேளு
விருபது லக்ஷத் தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் அதனைக் கேளு
தீர்க்கமுடன் ஒன்பது லக்ஷத்து ஒன்பதினாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் நாலு லக்ஷத்து முப்பதினாயிரமாம்
Translation:
See
threthaayugam, listen about it
It is 17 lakhs
9 thousand
The supreme
krethaayugam listen about it
20 lakhs 9
thousand
Listen about
dvaapara yuga
It is 9 lakh 9
thousand
The kaliyuga,
the most difficult one, Son.
See it to be 4
lakh 30 thousand.
Commentary:
Agatthiyar
concludes the list of the eons in this verse.
Please find the list of these yugas at http://www.siththarkal.com/2011/10/blog-post_21.html also.
Variyin yuga-
14 crore years
Arpudhanaar
yugam- 10 crore
Thanma yugam-
12 crore years
Janya yuga
(not found in the verse but makes up for the number)- 10 crore
Veera raajan
yugam- 20 crore years
viN yugam- 16
crore
vaayu yugam- 7 crore
maina yugam- 6 crores
manigal yugam- 6 crores
atthE yugam- 19 crores
paniyiratha yugam- 4 crore years
visvaasana yugam- 3 crore
thrEthaa yugam- 17,09,000 years
krEthaa yugam- 9,10,000 years
dvaapara yugam-
9,09,000 years
kaliyuga-
1,30,000 years
Agatthiyar
says that kali yuga is the most difficult one.
அகத்தியர் இப்பாடலில் யுகங்களைப் பற்றிய விவரங்களை
முடிக்கிறார். யுகங்கள் பதினெட்டு என்று
கூறிய அகத்தியர் அவற்றின் பெயர்களையும் காலவிவரங்களையும் தருகிறார்.
அவை:
வரியின் யுகம்- 14 கோடி வருடங்கள்
அற்புதனார் யுகம்-10 கோடி வருடங்கள்
தன்ம யுகம்- 12 கோடி வருடங்கள்
ஜன்ய யுகம்-10 கோடி வருடங்கள்
வீரராசன் யுகம்- 20 கோடி வருடங்கள்
விண் யுகம்- 16 கோடி வருடங்கள்
வாயு யுகம்- 7 கோடி வருடங்கள்
மைன யுகம்- 6 கோடி வருடங்கள்
மணிகள் யுகம்- 6 கோடி வருடங்கள்
அத்தே யுகம்- 19 கோடி வருடங்கள்
பணியிரத யுகம்- 4 கோடி வருடங்கள்
விஸ்வாசன யுகம்- 3 கோடி வருடங்கள்
திரேதா யுகம்- 17, 09,000 வருடங்கள்
கிரேதா யுகம்- 9,10,000 வருடங்கள்
த்வாபர யுகம்- 9,09,000 வருடங்கள்
கலியுகம்- 1,30,000வருடங்கள்
இவற்றில் மிகக்
கடினமானது கலியுகம் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment