Verse 131
ஆச்சப்பா சென்னால் பதினெட்டு வித்து
அப்போதே உண்டாச்சு அதின் மேல் மைந்தா
நீச்சப்பா அன்னம் அரு சுவையைக் கண்டு
நிசமான மனு நீதி நேர்மையாக
பேச்சப்பா சகல சித்துந் தானுண்டாச்சுப்
பெருகுகின்ற ஆசைவெகு நேசமாச்சு
மூச்சப்பா வாசியது முன்பின்னாச்சு
முழங்கி நின்ற ஜகமதுவுங் கலக்கமாச்சே
Translation:
The eighteen
seeds occurred then
Son, over it
Tasting the
food that has six tastes
With the true
manu dharma, honestly
All the
accomplishments occurred
The desire
that occurred copious became love
The breath, the vaasi, became front and back (in and out)
The world that remained with a roar became mixed.
Commentary:
This verse has some interesting concepts. In the first line Agatthiyar says that 18
seeds occurred and later in the verse he says that all the sitthu or
accomplishments occurred. The number 18 has great significance in Siddha
parlance. It refers to steps that take
one from limitedness to unlimited state.
In alchemy 18 refers to the steps that mercury is put through to attain
magical properties. The six tastes referred
to in this verse correspond to the svadishtana cakra, the locus of the sense of
taste. Agastya says “nijamaana manu
neethi”. He has attacked the popular
manu neethi that is in circulation in the world as something that should be
burned. From the expression in this
verse we understand that he is referring to the true dharma that humans should
follow. When he says “aasai nesamaacchu”
it means the desire turned into love. Prana that remained in kumbaka became
inhalation and exhalation. Thus the
world which is a compound of happiness and sorrow, good and bad- the locus of
duality, came into existence.
இப்பாடலில் அகத்தியர் சில முக்கியமான விஷயங்களைக்
கூறுகிறார். முதல் வரியில் அவர் பதினெட்டு
வித்துக்கள் தோன்றின என்கிறார். பதினெட்டு
என்ற எண் சித்தமார்க்கத்தில் பல முக்கியமான தத்துவங்களைக் குறிக்கிறது. கட்டுப்பட்ட நிலையிலிருந்து எல்லையில்லா நிலையை
அடைய பதினெட்டு படிகள் சித்த மார்க்கத்தில் உள்ளன. இத்தோடு தொடர்புடைய ரசவாதத்தில் பாதரசம் பதினெட்டு
படிகளில் சக்தியூட்டப்பட்டு விசேஷ சக்திகளைப் பெறுகிறது. ஆறு சுவைகள் என்பது சுவாதிஷ்டான சக்கரத்துடன்
தொடர்புடையது.
அகத்தியர் இப்பாடலில் நிசமான மனு நீதி என்று கூறுகிறார். உலகில் மனுநீதி என்று பரப்பப்பட்டு வரும் பிரிவினைகளைக் ஏற்படுத்தும் நீதி கோட்பாடுகளை சித்தர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மனுநீதியை எரிக்க வேண்டும் என்று பல சித்தர்கள் பாடியுள்ளனர். இதனால் இங்கு அகத்தியர் குறிப்பிடுவது மனு எனப்படும் மானுடர் கடைப்பிடிக்க வேண்டிய உண்மையான தர்மத்தைத்தான் என்பது புரிகிறது. ஆசை நேசமாச்சு என்பது பாசம் தோன்றியதையும் பிராணன் முன்பின்னாச்சு என்பது கும்பக நிலை விலகி உள்சுவாசம் வெளிசுவாசமானதையும் குறிப்பிடுகின்றன. இவ்வாறு உலகம் “கலங்கியது” அதாவது தெளிவாக இருந்தது இருதுருவங்களான நன்மை, தீமை, இன்பம் துன்பம் என்று மாறியது என்கிறார் அகத்தியர்.

No comments:
Post a Comment