Sunday, 20 September 2015

171. After returning home

Verse 171
கேளடா தன்பதியில் வந்திருந்து
கிருபையுடன் சட்டரச வர்க்கஞ் செய்து
வாளடா குருபதத்தைப் போற்றி மைந்தா
வணக்கமுடன் குருபூசை வளமாய்ச் செய்து
பாளடா போகாமற் சமாதியில் மைந்தா
பத்தியுடன் நித்தியமும் பூசை செய்தால்
கோளடா வாராமற் சமாதி தன்னிற்
குருவான முற்றாகாரம் அதிகமாமே

Translation:
Listen son, after returning home
With mercy, offering various products
Praising the gurupadam
Performing the gurupuja with humility
Without letting the tomb become uncared for
If worship is performed daily
Without any damage occurring to the tomb
The presence of Guru in the tomb is high.

Commentary:
After returning home one performs worship rituals and prays to the guru.  Pujas are performed daily at the tomb.  The tomb is cared for with great respect.  If it is done so the presence of the guru will be felt more at the tomb.


மேற்கூறியவாறு சடங்குகளைச் செய்த பிறகு ஒருவர் தனது வீட்டுக்கு வந்து அங்கு பலவித பொருட்களை குருவுக்குப் படைத்து பூஜை செய்ய வேண்டும்.  அவரது சமாதியைக் கருத்துடன் கவனித்து அங்கு தினமும் பூசை செய்யவேண்டும்.  அவ்வாறு செய்தால் அங்கு குருவின் சான்னித்தியம் அதிகமாக இருக்கும் என்கிறார் அகத்தியர். 

170. Various offerings after entombment

Verse 170
செய்யப்பா மானதமாய்ப் பூசைசெய்து
சிந்தை மனது ஒன்றாகச் சிவனை நோக்கி
மெய்யப்பா கோதானம் பூதானங்கள்
மேன்மையுள்ள கன்னிகா தானஞ் செய்து
கையப்பா தவறாமல் அதற்குப் பூசை
கருணையுடன் பூரிகா தானஞ் செய்து
கையப்பா மையமென்ற குருவைப் போற்றி
மார்க்கமுடன் தன்பதியில் வந்து கேளே

Translation:
Perform manasa puja
With the mind towards Siva
Offer cow, land
Maiden (in marriage)
Perform puja without missing it
Perform the purika dhana also
Praising the guru as the central entity
Listen to what should be done in one’s own house.

Commentary:
After performing the manasa puja as mentioned in the previous verse various things are offered as dhaana.  Go dhaana or cow is offered, bhu dhaana or land offering and kannika dhana or offering a maiden in a marriage are performed along with offering eagle wood or akil (bhurika dhaana).  After performing these dhaana one performs puja to the tomb without fail.  Agatthiyar lists the procedure to do after returning home.

யோகியின் உடலை சமாதிப்படுத்திய பிறகு பசு, நிலம், அகில் கட்டை ஆகியவற்றையும் ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொடுப்பதான கன்னிகா தானம் ஆகியவற்றையும் செய்யவேண்டும்.  அதன் பிறகு அந்த சமாதியில் விடாமல் பூசை செய்து மனைக்குத் திரும்பவேண்டும் என்கிறார் அகத்தியர். 

Friday, 18 September 2015

169. Final steps in creating the tomb

Verse 169
எண்ணியே ஐந்தெழுத்தை உச்சரித்து
இன்பமுடன் மணல் பரப்பித் திரணை போட்டு
உண்ணியே திரணிநடு லிங்க பீடம்
உத்தமனே தான் வகுத்து உறுதியாகப்
புண்ணியனே சுகந்தமலர் அர்ச்சனைகள் செய்து
புத்தியுடன் சகலரச வர்க்கம் வைத்து
வன்னிஎன்ற ருத்திரனைத் தியானம் பண்ணி
மார்க்கமுடன் மானதாம் பூசை செய்யே

Translation:
Uttering the sacred five letters
Spreading the sand over it, adding a stone plank with cornice
In the middle of the cornice a linga is placed
The Good One!  Placing them firmly
Perform archana with fragrant flowers
Placing all the categories of rasa
Contemplating on Rudra, the fire,
Perform manasa puja

Commentary:
After covering the body up to the top with the various powders listed in the previous verse a cornice or a decorative horizontal platform is placed after covering with sand.  On top of the cornice a linga is installed.  Fragrant flowers are placed and all things that represents all the rasa are placed.  Rudra is contemplated on and mental worship is performed.


உடலைப் பல்வேறு பொடிகளினால் மூடிய பிறகு அதன் மேல் மணல் பரப்பி திரணை எனப்படும் அலங்காரக் கல்லை வைத்து அதன் மேல் லிங்கத்தைப் பிரதிஷ்டை பண்ண வேண்டும்.  பிறகு மலர்கள், பல வித ரசங்களைக் குறிக்கும் பொருட்கள் ஆகியவற்றை வைத்து நெருப்புக்கு அதிபதியான ருத்திரனைத் தியானிக்க வேண்டும்.  இவ்வாறு அந்த சமாதியின் முன் மானச பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர். 

168.. Covering the body with various powders

Verse 168
எடுத்து நன்றாய்ப் பாதாதி கேசமட்டும்
இன்பமுடன் தான் தூளை கெட்டி செய்து
அடுத்து மிக பாதமுதல்புருவமட்டும்
அளவாகப் பொடியிட்டு வாழ்த்தி மைந்தா
தொடுத்து முகப் புருவமுதல் உச்சி மட்டும்
சொல்லுகிறேன் விபூதியில் கற் பூரஞ் சேர்த்து
கொட்டிமிக அமிழ்த்தி நன்றாய்த் தூபதீபங்
குருவாழ்க மூர்த்திகரமாவாய் என்ன
Translation:
Taking it (the triple powder)
From head to toe and make it firm.
After that from foot to eyebrows
Add the powder while praising him
From eyebrows to the top of the head
Take sacred ash and camphor together
Pour it, make it firm, show fragrant smoke and lamp
Saying, “Praise to the guru.  Please beome the embodiment of Murthy.”

Commentary:
The triple powders of stone, brick and sacred ash are added to the body while tapping it to make it firm.  The body is covered from feet to the eyebrows with this powder.  From the eyebrows to the top of the head a mixture of sacred ash and camphor is added.  Fragrant smoke and lamp are waved saying, “Praise to the Guru.  Please become Murthy.”


கல் பொடி, செங்கல் பொடி, விபூதி ஆகிய மூன்றால் ஆனா பொடியை கால் முதல் புருவம் வரை சேர்த்து கெட்டிப்படுத்தவேண்டும் என்கிறார் அகத்தியர்.  புருவம் முதல் உச்சிவரை உள்ள பகுதிக்கு விபூதி மற்றும் கற்பூரத்தால் ஆன பொடியைச் சேர்த்து தூப தீபம் காட்டி, “குருவே போற்றி நீர் மூர்த்திகரமாக வேண்டும்” என்று வாழ்த்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 

167. Rituals for placing the body in the tomb

Verse 167
பண்ணப்பா கிரகமென்ற சமாதினுள்ளே
பதிவான மத்தி என்ற எண்சாண் தன்னில்
நண்ணப்பா தூபமதால் சுத்தி பண்ணி
நாட்டமுடன் ஐயும் கிலியும் சிவயநமவென்று
கண்ணப்பா ஈசான்னியம் பார்வையாகக்
கருணையுடன் தானிருத்திக் கனிவாய் மைந்தா
முன்னப்பா செய்து வைத்த முத்தூள் தன்னை
முக்கியமுடன் சிவவசி என்று எடுத்திடாயே

Translation:
Place it within the house, the tomb,
In the middle eight finger spans
Clean it with the fragrant smoke
As aim kleem sivayanam
Let the eye be directed towards the north-east (isanya)
Placing there with humility
The three powders that were made before
Take it saying sivavasi.

Commentary:
The body brought to the tomb is placed in the eight fingerspan depression made in the middle.  The place is purified with the fragrant smoke.  The body is placed such that it faces north east.  The mantra aim kleem sivayana is uttered.  The three powders- that of stone, brick and sacred ash, that were made by mixing them together is taken up uttering sivavasi.


உடலை சமாதியினுள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள எட்டு சாண் குழியில் ஈசான்யம் எனப்படும் வடகிழக்கு திசையைப் பார்த்தபடி வைக்கவேண்டும்.  அப்போது ஐயும் கிலியும் சிவயநம என்று உச்சரிக்கவேண்டும்.  பிறகு அந்த இடத்தை தூபம் காட்டித் தூய்மைப்படுத்தி முன்பு செய்து வைத்திருந்த முத்தூளை-கல்தூள், செங்கல் தூள் மற்றும் விபூதி, சிவவசி என்று கூறியபடி எடுக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

Thursday, 17 September 2015

166. Taking the body to the tomb

Verse 166
காட்டடா தூபமொடு தீபங்காட்டி
கருணையுடன் ரதமதின்மேற் கடாக்ஷஞ் செய்து
நாட்டடா மணியோசை சங்கினோசை
நலமான ஜெயகண்டி மேளவாத்தியம்
மூட்டடா சகலவொலி நாதத்தோடே
முக்கியமாய் ரதமதனை நடத்திக்கொண்டு
சூட்டடா சமாதினுட வாசற் சென்று
சுகமாகக் கிரகப்பிரவேசம் பண்ணே

Translation:
Wave the lamp and fragrance
Place him on top of a chariot
Sound the bell, conch
The victory disc, drums and other musical instruments
Sound the various sounds
Move the chariot
To the entrance of the tomb
Make it enter the house (tomb).

Commentary:
After performing the appropriate worship rituals the body is placed on a chariot.  Various musical instruments are sounded and the chariot is takne to the entrance of the tomb and the body is placed inside the house.

உடலுக்குச் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்த பிறகு அதை ஒரு ரதத்தில் வைத்து பலவித மங்கள வாத்தியங்களை முழங்கியபடி அதை சமாதி கிரகத்துக்கு அழைத்து வரவேண்டும்.  பிறகு அதனை கிரகத்தினுள் வைக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

165. Rituals for the body- 2

Verse 165
செய்யடா விபூதி தூளிதமே செய்து
திருவான புருவமத்தில் திலதப் பொட்டு
மெய்யடா தங்கமதால் பட்டஞ்செய்து
மேன்மைபெற ஐந்தெழுத்தை அதிலே மாறி
பையடா நெற்றிதனிற் பட்டங் கட்டிப்
பாங்குபெறச் சுகந்தமலர் மாலை சாற்றி
வையடா அமுதுகனி வர்க்கமுன்னே
வைத்தபின்பு தூபமொடு தீபங்காட்டே

Translation:
Perform “thoolitham” (spreading the fine powder) with sacred ash
In the middle of the brow a sacred dot.
Make a foil with gold
Draw the sacred five letters on it
Tie the foil on the forehead
Adorn a garland of fragrant flowers
Place food and fruits in front
Wave the lamp and fragrance.

Commentary:
After performing sacred ablution and adorning the body with silk cloth and sacred ash a thilakam should be adorned on the forehead.  A gold foil with the sacred five letters of namasivaya should be tied on the forehead.  The body should be adorned with garland made with fragrant flowers.  Food and fruit offerings should be placed in front of it.  A lamp (deepa) and fragrance (dhoopa) should be waved in front of it.


உடலுக்கு அபிடேகம் செய்து பட்டுடுத்தி விபூதி பூசிய பிறகு நெற்றியில் திலகமிடவேண்டும் (திலதம் என்றால் எள், இங்கு திலகம் என்று இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது).  அதன் பிறகு தங்கத் தகடால் ஒரு பட்டம் செய்து அதில் நமசிவாய ஐந்தெழுத்தைக் கீறி (மாறி என்று இருப்பது கீறி என்று இருக்குமோ என்று தோன்றுகிறது) அதை அவரது நெற்றியில் கட்ட வேண்டும்.  நறுமண மலர்களால் ஆன மாலையைச் சாற்றி, அமுதும் கனிகளும் படைத்து அவருக்கு தூப தீபம் காட்டவேண்டும் என்கிறார் அகத்தியர்.