543- 546
Preparation of
the wax
Agatthiyar says that the golden aparanji should be added to the Vedanta wax, the mother kundalini praised with buddhi and the golden wax is processed. It is placed at the site of Brahma and smeared on the nine worlds or chakra, with the earth as the cover. It is then burned after praising the sathguru. After the process it will appear as golden effulgence. When this is perceived through vasi then sivayogam occurs, siddhi of all karpam occurs and the person will be called sivayoga muni, vasisiva yogi, jnana paradesi, the silent mauni, the kevuni who circumambulates the great universe. The yogin sees the Jyothi of kesari with the help of the three- moon, sun and flame.
Thus we understand that the muladhara and the earth element becomes the shield and other chakra get processed within it.
இதுவரை கூறிய
மெழுகை வேதாந்த மெழுகு என்னும் அகத்தியர் அத்துடன் தங்க அபரஞ்சி எனப்படும்
குண்டலினி தாயுடன் புத்தியால் சேர்த்து அவளைப் போற்றி பதனம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த மெழுகை நவலோகம் என்னும் ஒன்பது
சக்கரங்களில் பூசி, அதற்கு மண் எனப்படும் மூலாதாரத்தைக் கவசமாக வைக்க வேண்டும். பிறகு சத்குருவை தியானம் பண்ணி அதைப் புடம்
போடவேண்டும். அப்போது கண்கொள்ளா சோதி
தென்படும். இவ்வாறு தங்கத்தாயான
குண்டலினியைப் பார்த்தல் சிவயோகம் நேர்ப்படும்.
இந்த சிவயோகத்தில் இருந்தால் கற்ப சித்தி ஏற்படும். அந்த யோகி சிவயோகி என்றும், வாசிசிவயோகி
என்றும் கேசரி என்றும் ஞான பரதேசி என்றும் பேசாத மவுனி என்றும், பேரண்டங்களைச்
சுத்தி வரும் கெவுனி என்றும் அழைக்கப்படுவார்.
இவ்வாறு சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று தீக்களால் கேசரியின்
சோதியைப் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
மண் தத்துவமும் அதன் இடமான மூலாதாரமும் கவசமாக இருக்க பிற சக்கரங்கள் அதனுள் புடமிடப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
மண் தத்துவமும் அதன் இடமான மூலாதாரமும் கவசமாக இருக்க பிற சக்கரங்கள் அதனுள் புடமிடப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
No comments:
Post a Comment