Wednesday, 8 March 2017

547-553 How to see the effulgence

547-553
Agatthiyar describes a procedure to see the jyothi mentioned in the previous section.  Camphor is placed on sacred ash which is formed as a heap with the left hand, burnt (with mind and consciousness) and the resultant ash is smeared on the forehead.  This gives the yogin the sight of the Jyothi. Philosophically this means the essence and ida nadi are involved.  They are burned with the fire of kundalini through mind and consciousness.  This results in an effulgence.

Adorning this sacred ash daily will give the benefit of performing siva puja and sakthi puja.  When this sacred ash is given to a patient he will recover quickly.
The japa mala is taken in the right hand, attention is placed at the middle of the brow and the mantra om reeng sim sivam, is recited 96 times and the sacred ash is adorned on the forehead.  The Jyothi will appear brightly.

The yogin sees his form as that of sivamayam or embodiment of consciousness.  The adhara will get purified, the pasa or attachment will leave.  The yogin will be called peranda sitthan or the siddha of the supreme space.
 
However, this procedure should be performed secretly, not in public view.  The kechari the thejas, the vasi and the adhara are perceived during yoga and merged with ravi or surya in the forehead.  The amrita rasa karpam will emerge.  Agatthiyar describes this procedure as the yogin realizing the state of bindu and going to the nadha.  The “karpam” or magical potion is creation which is none other than poornam or fully complete.  One should not consider this as insignificant.  Otherwise the deities of the adhara will go away.

முந்தைய பகுதியில் கூறிய ஜோதியை எவ்வாறு காண்பது என்று இப்பகுதியில் அகத்தியர் கூறுகிறார். இடது கையால் விபூதியைக் குவித்து வைத்து, அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும்.  அதை நெற்றியில் அணிந்துகொண்டால் ஜோதியில் தென்படும்.  தத்துவ ரீதியில், இது சாரத்தை குண்டலினி அக்னியில் மனம், உணர்வு ஆகியவற்றால் எரித்தால் ஜோதி தென்படும் என்கிறார் அவர்.
இந்த விபூதியை தினமும் அணிந்தால் அது சிவ பூஜை சக்தி பூஜை செய்ததை ஒக்கும்.  இந்த விபூதியை வியாதியஸ்தருக்குக் கொடுத்தால் அவர் குணமடைவார். ஜப மாலையைக் கையில் எடுத்து கவனத்தைப் புருவ மத்தியில் குவித்து ஓம் ரீங் சிம் சிவம் என்று 96 முறை சொல்ல வேண்டும்  அப்போது அந்த யோகி தனது உருவம் சிவமயமாக இருப்பதைப் பார்ப்பார்.  ஆதாரங்கள் தூய்மையடையும் பாசம் விலகிப்போகும்.  அந்த யோகி பேரண்ட சித்தர் என்று அழைக்கப்படுவார். 
ஆனால் இந்த செயலை அனைவரும் அறியும் விதத்தில் செய்யக்கூடாது, ரகசியமாகச் செய்ய வேண்டும்.  தேஜஸ் எனப்படும் கேசரியைப் பார்க்கவேண்டும், திருவாக நின்ற வாசியைப் பார்க்கவேண்டும்  ஆதாரங்களைப் பார்க்கவேண்டும்  அவற்றை ஆதி அந்த பூரணமாய் ரவி எனப்படும் பிங்கள நாடியில் அல்லது சூரிய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.  மனம் கூசாமல், குன்றாமல் குருவை எண்ணி குருவான அமிர்த ரச கற்பத்தைப் பெறவேண்டும் என்கிறார் அகத்தியர். 


கர்ப்பம் என்ற உத்பன்னத்தை நாத பிந்துக்களின் கடாட்சம் என்கிறார் அகத்தியர்.  அதற்கு ஒரு யோகி விந்துவின் நிலையை அறிந்து நாதத்துக்குப் போய் கற்பத்தை உன்ன வேண்டும்.  அப்போது உண்மை என்னும் பூரணம் நிலைத்திருக்கும்.  இதை அல்பம் என்று எண்ண வேண்டாம்,  அவ்வாறு எண்ணினால் ஆதார தேவதைகள் விலகிவிடுவார்கள் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment