Thursday, 17 September 2015

164. How to process the body-1

Verse 164
கேளடா பாலுடனே இளநீர் விட்டுக்
கிருபையுடன் தண்ணீரும் தேனுங் கூட்டி
சூளடா அபிஷேகம் நன்றாய்ச் செய்து
சுத்தமுடன் மேல்துவட்டிச் சமமாய் மைந்தா
ஆளடா அரை தனக்குப் பட்டு வஸ்த்திரம்
அன்பாகத் தான் அணிந்து அதின்மேற் கேளு
மேலடா பாதாதி கேசமட்டும்
மேன்மையுடன் விபூதி தூளிதமே செய்யே

Translation:
Listen son, tender coconut water along with milk
Adding water and honey
Perform abhisheka well
Wipe the body clean
Adorn silk cloth on the waist
With love.  Over it
From foot to head
Sprinkle the sacred ash

Commentary:
In the previous two verses Agatthiyar described how to construct the Samadhi or the tomb.  Here he talks about how to handle the body of the saint. 
Sacred ablution should be performed with water, honey, tender coconut water and milk.
The body should be wiped clean, adorned with silk cloth and sacred ash should be spread on it from head to toe.

முந்தைய இரு பாடல்களில் முக்தியடைந்த ஒரு ஆத்மாவின் சமாதியை எவ்வாறு கட்ட வேண்டும் என்று அகத்தியர் கூறினார்.  இங்கு அவரது உடலை சமாதிக்கு எவ்வாறு பதனப்படுத்தவேண்டும் என்று கூறுகிறார்.

உடலுக்கு தண்ணீர், இளநீர், தேன், பால் ஆகியவற்றால் ஆனா கலவையால் அபிஷேகம் செய்யவேண்டும்.  அதனை சுத்தமாகத் துவட்டிய பிறகு அரைக்கு பட்டு வஸ்த்திரம் அணிவிக்க வேண்டும்.  அதன் பிறகு கால் முதல் தலை வரை விபூதியைப் பூசவேண்டும்.

163. Samadhi continued

Verse 163
பண்ணப்பா அதின் கீழே நாலடியில் மைந்தா
பதிவான ஆழமது எண்சாண் நீளம்
நண்ணப்பா நிதானமதாய் நன்றாய்ச் செய்து
நலமான கிரகமதிற் பிரவேசிக்க
உண்ணப்பா கற்பொடியுஞ் செங்கல் தூளும்
உத்தமனே திருநீறும் மூன்றும் ஒன்றாய்
முன்னப்பா செய்துகொண்டு பதனம் பண்ணி
முத்திகர மாவதற்கு முறைமை கேளே

Translation:
Created below that in four feet, Son!
In a depth of eight palm spans
Creating it patiently
To enter the house well
Fill with powdered stone, brick
And sacred ash- all three together
Processing it with these
Listen to the method for completing it.

Commentary:
The procedures listed in the verse are structural in nature.  Continuing the previous verse Agatthiyar says that after making a depression of three handspans, another depth of four feet should be dug and within it a depth of eight palmspans should be created.  This is the house within which the bodywill be placed.  This space should be filled with powdered stone, brick and sacred ash. 


அந்த சமாதியைப் பற்றி மேலும் விவரங்கள் கூறுகிறார் அகத்தியர்.  மூன்று சாண் ஆழம் பண்ணிய பிறகு நான்கடியில் எட்டு சாண் அளவு தோண்டவேண்டும் என்றும் அதுவே அந்த யோகியின் உடல் இருக்கப்போகும் வீடு என்று கூறுகிறார் அகத்தியர்.  அதில் கல்பொடி, செங்கல் பொடி மற்றும் விபூதியை இடவேண்டும் என்றும் கூறுகிறார் அவர்.

162. How to construct a tomb (samadhi) for a liberated soul

Verse 162
சமாதியளவு
நாட்டமுடன் பூரணத்தில் நாடினோர்க்கு
நாதாந்த சமாதியுட நன்மைகேளு
தேட்டமுடன் எவ்விடமேயானாலென்ன
சிவசிவா அந்திடத்தில் செம்மை பண்ணி
வாட்டமுடன் பத்தடியிற் சதுரமாக
மைந்தனே ரெண்டு முழ ஆழஞ் செய்து
ஆட்டமுடன் அதின் கீழே ஆறடியில் மைந்தா
அப்பனே முச்சாணிலாழம் பண்ணே

Translation:
Measurements for Samadhi
For those who sought the poornam
Listen about the effects of their Samadhi
It does not matter which place it is
Siva sivaa!  Cleaning that place
As a ten feet square
Digging it two handspand deep
Digging within it for six feet
Create a depth of three palm spans

Commentary:
Agatthiyar is talking about what to do with the body of those who sought the terminus of manifestation, the nadhantha.  He tells us that there is no special sacred place where they should be buried.  He says that a place should be picked and a square of ten feet should be cleaned.  Within it a two handspan depression should be created.  Six feet below that a depth of three palmspans (the length obtained when the thumb and the little finger are expanded).


நாதாந்தத்தை நாடிய ஆத்மாக்கள் முக்தாத்மாக்கள்.  அவ்வாறு நாதாந்தத்தை அடைந்தவர்களது உடலை எவ்வாறு சமாதிபடுத்தவேண்டும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  அவர்களது உடலை இடுவதற்கு விசேஷமான இடம் என்று எதுவும் இல்லை.  ஏதாவது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பத்தடி சதுரத்தை சுத்தப்படுத்தவேண்டும்.  அதில் இரண்டு முழ ஆழத்துக்குத் தோண்டவேண்டும்.  அதன் கீழ் ஆறடியில் மூன்று சாண் அளவுக்குக் குழியை ஏற்படுத்தவேண்டும் என்கிறார் அகத்தியர்.

Wednesday, 16 September 2015

161. The end goal of all the four paths

Verse 161
தாமென்ற சரியைவழி நடந்தாலென்ன
தன்னறிவாய்க் கிரியைவழி நடந்தாலென்ன
வோமென்ற யோகவெளி நடந்தாலென்ன
உத்தமனே ஞானமதில் உறைந்தாலென்ன
ஆமென்ற பூரணமே தானென்றெண்ணி
அனுப்பான தமர்வாசல் அதிலே சென்று
நாமென்ற ஐந்தெழுத்தில் இரண்டைப் பற்றி
நாதாந்த வெளியொளியில் நாடினாரே

Translation:
What if you one walks the path of charya
What if one walks with awareness in the path of kriya
What if one walks in the path of yoga whch is OM
What is you remain embedded in wisdom, The Supreme One!
Considering that the fully complete as Self
Going through the gates of the beloved
Holding two of the five letters
They sought in the light of the space of nadhantha.

Commentary:
Agatthiyar says that it does not matter which path one follows.  The end goal is to seek the effulgence of the space of nadhantha.


சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் ஏதாவது ஒன்றில் சென்றாலும் முடிவில் ஒரு யோகி முயலுவது நாதாந்த ஒளி வெளியை நாடுவதே என்கிறார் அகத்தியர். 

Sunday, 13 September 2015

160. Yogi becomes Poorna

Verse 160
வானான வெளியோடே வெளியாய் நின்று
மகத்தான நாற்பதமும் வகையராய்ப் பெற்று
ஊனான பஞ்சகரத்தால் நிலையும் பெற்று
உகாந்தவரை திருநடன உண்மை கண்டு
கோனான குருபத்தில் மனதொடுங்கி
குறியான பூரணமாய்ச் சேர்ந்தோர்க்கப்பா
தானான சமாதியுடன் உண்மை கேளு
தன்மையுடன் நாற்பதமும் ஒன்றதாமே

Translation:
Remaining as space along with space
Attaining the glorious four positions (padha)
Attaining the original status through panchaksharam
Seeing the truth, the dance, until the end of the eon
Abiding in the gurupadham, the royal position
For those ho have reached the sign, the state of Poorna
Listen about their Samadhi
The four padham will lead to that single goal.

Commentary:
Agatthiyar describes the ultimate state in this verse.  The yogin does not merge with the supreme space immediately.  Agatthiyar describes how this happens. The yogin remains firmly in the state of space with the help of the panchakshara or namasivaya.  He experiences Sakthi who is represented by the sacred dance, the movement which is the cause of the universe.  This dance is experienced until the terminus of the yuga.  He then abides in the gurupadham and becomes poornam or blemish-free.

Agatthiyar then describes how the Samadhi should be constructed for such a soul
முந்தைய பாடலில் ஞானம் சாயுச்சிய பதவியைத் தரும் என்று ஒருவர் வெளியோடு வெளியாவார் என்றும் கூறிய அகத்தியர் அது எவ்வாறு ஏற்படுகிறது என்று இப்பாடலில் கூறுகிறார்.  வெளி நிலையை அடைந்த யோகி பஞ்சாட்சரத்தின் மூலம் அதில் நிலைபெற்று இருக்கிறார்.  அப்போது அவருக்கு திருநடனம் அல்லது பரத்தின் ஆதி அசைவு புலப்படுகிறது.  இந்த ஆதி அசைவே யுக முடிவு வரை, உலகம் அழியும் வரை தொடருகிறது.  இந்த நடனத்தைக் கண்ட யோகி குருபத்தில் ஒடுங்குகிறார்.  குரு என்றால் அஞ்ஞானமற்ற ஒளி என்று பொருள்.  இவ்வாறு அவர் ஒளி நிலையை அடைகிறார்.  இந்த பராபர நிலையில் அவர் குற்றமற்றவராக பூரணமாக இருக்கிறார்.


இதனை அடுத்து இந்த நிலையை அடைந்த யோகியை எவ்வாறு சமாதிபடுத்த வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். 

Saturday, 12 September 2015

159. The four steps grant various benefits

Verse 159
தானென்ற சாலோக பதவி சேர்ந்தால்
சகலசவு பாக்கியபதி தானேயாவான்
ஊனென்ற சாமீப பதவிசேர்ந்தால்
உலகுதனில் சராசரங்க ளோகஞ்சசெய்வார்
கோனென்ற சாரூப பதவி சேர்ந்தால்
குவலயத்திற் சிவயோக ஞானியாவான்
வானென்ற சாயுச்சிய பதவி சேர்ந்தால்
மகத்தான வெளியோடே வெளியாவானே

Translation:
If the salokha padavi is attained
He will become one wealthy of all riches (sakala saubhyapathi)
If the saameepa padavi is attained
He will perform yogam with all the mobile and immobile
If the royal saroopa padavi is attained
He will become Sivayogajnani in this world
If the sayujya padavi is attained
He will beome space within the supreme space.

Commentary:
Agatthiyar describes the benefits the four pada mukhtis grant for a pursuer.  Salokha padavai attained by charya will grant all the riches, saameepya padavai by kriya will grant association with the charaachara or mobile and immobile entities in the world.  Saaroopya padavai granted by yoga will make the pursuer a Siva yoga jnana.  The saayujya padavi, granted by jnana will make one merge with the supreme space.  Thus, the four step process will grant both worldly benefits as well as liberation.


சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற நான்கு படி வழிமுறை அளிக்கும் பயன்களை அகத்தியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  சரியை அளிக்கும் சாலோக பதவி உலகின் எல்லா செல்வங்களையும் அளிக்கும்.  கிரியை அளிக்கும் சாமீப்ய பதவி ஒருவரை அசைவன அசையாவன ஆகியவற்றுடன் யோகம் செய்யவைக்கும், அவற்றைத் தானாகக் காணவைக்கும்.  யோகம் அளிக்கும் சாரூப்பியம் ஒருவரை சிவத்தின் உருவைப் பெறவைக்கும்.  அவர் இவ்வுலகில் இருக்கும்போதே சிவயோக ஞானியாவார்.  கடைசி படியான ஞானம் ஒருவரை வெளியுடன் சேர்ந்து தானும் வெளிநிலையை அடைய வைக்கும் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு இந்த நான்கு பத முக்திகளும் இவ்வுல நன்மையையும் உச்ச நிலையான வெளி நிலையையும் அளிக்கின்றன என்கிறார் அகத்தியர். 

Friday, 11 September 2015

158. Pada mukhti

Verse 158
சாலோக சாமீப பதவி
ஆச்சப்பா சரியைவழி நடந்தோர்க்கப்பா
அப்போதே சாலோக பதவியாகும்
பேச்சப்பா கிரியைவழி நடந்தோர்க்கப்பா
பெருமையுடன் சாரூப பதமேயாகும்
நீச்சப்பா யோகவழி நடந்தோர்க்கையா
நிசமான சாமீப பதவியாகும்
மூச்சப்பா ஞானவழி வந்தோர்க்கையா
முத்தியுள்ள சாயுச்சிய பதவிதானே

Translation:
Saloka, sameepya padavi
Yes son, for those who walk in the path of charya
The position of Salokam, immediately
For those who walked in the path of kriya
The Saroopa position with fame,
For those who walked the path of yoga
The truthful sameepya position
The breath son, for those who walked the path of wisdom
The mukthi, the position of sayujya.

Commentary:
Agatthiyar talks about the benefits of each of the steps, charya, kriya, yoga and jnana.  Charya offers the position salokam or remaining in the same locus as the Divine.  Kriya offers saroopam or the same form as the Divine. Yoga offers saameepyam or proximity with the Divine and jnana or wisdom offers the ultimate, liberation or mukthi, the saayujyam or joining with the Divine.

Attaining the above mentioned positions is called padha mukthi.

Tirumular has described these steps in the fifth tantiram in Tirumandiram.  He explains the various attainments and says that the ultimate state to reach is saayujyam.  Sayujyam according to him is attaining the jagrat atheetha, it is remaining in tranquility or upasantham.  It is becoming Sivam, remaining in bliss or anandha sakthi.

சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நாற்படிகளில் பெரும் நன்மைகளை அகத்தியர் இப்பாடலில் பட்டியலிடுகிறார்.  சரியை சாலோக்கியத்தையும் கிரியை சாரூபத்தையும் யோகம் சாமீப்பியத்தையும் ஞானம் சாயுஜ்யத்தையும் அளிக்கின்றன என்கிறார் அவர்.  இந்த நான்கு நிலைகளையும் பெறுவது பதமுக்தி எனப்படுகிறது.

திருமூலர் இந்த நான்கு படிகளையும் தமது திருமந்திரம் ஐந்தாவது தந்திரத்தில் விளக்கியுள்ளார்.  அவர் சாயுச்சியம் என்பது சாக்கிரத் அதீத நிலையை அடைவது, உபசாந்தத்தில் நிலைத்திருப்பது, சிவமாக ஆவது ஆனந்த சக்திநிலை என்கிறார்.