Sunday 31 January 2016

289. Effects of pranayama

Verse 289
ஆச்சப்பா பிராணாயம் அறிந்து செய்தால்
அநேகமென்ற பாவமெல்லாம் அகன்று போகும்
மூச்சப்பா பிராணாயஞ் செய்யச் செய்ய
முக்கியமுடன் தேகத்தில் வேர்வை கொள்ளும்
நீச்சப்பா மும்மலமுங் கழிந்து போகும்
நேர்மையுடன் நாடிஎல்லாஞ் சித்தியாகும்
காச்சப்பா திசைநாதங் காதிற் கேழ்க்கும்
கருணையுடன் பிராணாயங் கருதக் கேளே

Translation:
If pranayama is performed with awareness
Innumerable sins will leave
As pranayama is performed repeatedly, the breath
Will gain importance and there will sweating in the body
All the three innate impurities will be removed
All the nadi will be perfected
The sounds of the directions will be heard
Listen about the states that occur due to pranayama.

Commentary:
Verse 289
ஆச்சப்பா பிராணாயம் அறிந்து செய்தால்
அநேகமென்ற பாவமெல்லாம் அகன்று போகும்
மூச்சப்பா பிராணாயஞ் செய்யச் செய்ய
முக்கியமுடன் தேகத்தில் வேர்வை கொள்ளும்
நீச்சப்பா மும்மலமுங் கழிந்து போகும்
நேர்மையுடன் நாடிஎல்லாஞ் சித்தியாகும்
காச்சப்பா திசைநாதங் காதிற் கேழ்க்கும்
கருணையுடன் பிராணாயங் கருதக் கேளே

Translation:
If pranayama is performed with awareness
Innumerable sins will leave
As pranayama is performed repeatedly, the breath
Will gain importance and there will sweating in the body
All the three innate impurities will be removed
All the nadi will be perfected
The sounds of the directions will be heard
Listen about the states that occur due to pranayama.

Commentary:
Agatthiyar described the five states that are attained through pranayama.  They are poorakam (inhalation), kumbakam (cessation), rechakam (exhalation) saubheejam (saguna) and nirbheejam (nirguna).  Next, he described the time of pranayama as 32 poorakam, 64 kumbakam and 16 rechakam.  The saubhijam and nirbhijam are mental processes.  This explanation was followed by the connection of pranayama and the cakra.  While inhaling consciousness must be present at the different loci, muladhara, svadhishtana etc.  In this verse he describes the changes that in the body when pranayama practice is performed with awareness.  He says that if pranayama is performed correctly with awareness there will be sweating in the body.  All the sins will leave a person.  It also removes the three innate impurities. These are egoity or aanava, association with action or karma, and erroneous perception or maya. These impurities are the causes and the sins are the effects.  Thus, pranayama removes the causes and effects that cause further births and life experiences.  If these three mala are taken as three types of karma, sanchitha (actions that have accumulated the time immemorial), prarabdha (karma that has started to give fruits) and aagaami (those that would occur in future).  These three types of karma are the basis for life’s experiences and subsequent births.  Thus, pranayama removes future births for the yogin. 

Agatthiyar begins by describing the effects that occur in the body.  He starts by saying that sweat will accumulate in the body.  Then the nadis or energy channels will get purified.  When this occurs ten types of sounds are heard.  This corresponds to ten nadis becoming activated.  They also represent the ten directions- north, south, east, west, noth/east, north/west, south/east and south/west, up and down.  Once the nadis are activated these sounds stop.


முதலில் பிராணாயாமத்தின் ஐந்து நிலைகளை விளக்கினார் அகத்தியர்.  அவை பூரகம் (உள்மூச்சு), கும்பகம் (நிறுத்துதல்), ரேசகம் (வெளிமூச்சு), சௌ பீஜம் (சகுணம்), நிர்பீஜம் (நிர்குணம்) என்பவை.  அதனை அடுத்து பிராணாயாமத்தின் கால அளவுகளை 32-64-16 பூரகம் கும்பகம் ரேசகம் என்றார் அவர்.  அதனை அடுத்து இவ்வாறு செய்யும்போது உணர்வு சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் பயணிக்க வேண்டும் என்றார்.  இப்பாடலில் இவ்வாறு பிராணாயாமத்தை அறிவுடன் செய்தால் உடலிலும் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்களைக் கூறுகிறார்.

முறையாகச் செய்யப்பட பிராணாயாமம் ஒருவரது பாவங்கள் அனைத்தையும் விலக்குகிறது.  மும்மலங்களையும் கழிக்கிறது.  மும்மலங்கள் என்பவை காரணங்கள் பாவங்கள் காரியங்கள். இவ்வாறு பிராணாயாமம் காரணம் காரியம் என்ற இரு நிலைகளையும் ஒழிக்கிறது.  மும்மலங்களை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா மற்றும் ஆகாமி கர்மா அல்லது காலகாலமாக நம்மைத் தொடரும் கர்மம், இப்போது பயன் கொடுத்துக்கொண்டிருக்கும் கர்மம் மற்றும் இனி ஏற்படப்போகும் கர்மம் என்று கொண்டால் பிராணாயாமம் எல்லாவித கர்மங்களையும் ஒழிக்கிறது என்ற பொருள் வருகிறது.
இதனை அடுத்து பிராணாயாமம் உடலில் ஏற்படுத்தும் மாறுதல்கள்- உடலில் வியர்வை தோன்றுகிறது என்று தொடங்கும் அகத்தியர் உடலில் ஏற்படும் பல நிலைகளை அடுத்து விளக்கப் புகுகிறார்.

வியர்வையுடன் நாடிகள் தூய்மையடையும்.  நம் உடலில் உள்ள நாடிகளில் பத்து நாடிகள் ஆன்மீக உணர்வைப் பெறுவதற்கு முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.  இந்த நாடிகள் தூய்மையடைந்து செயல்படுவதே சித்தியடைவது என்பது. இவ்வாறு நிகழும்போது காதில் பத்துவகைச் சத்தங்களை ஒரு யோகி கேட்கிறார்.  இவற்றை திசை நாதங்கள் என்கிறார் அகத்தியர்.  இவை எட்டு திசைகள் மற்றும் மேல் கீழ் என பத்துத் திசைகளாகின்றன.  தூய்மையடைந்த நாடிகளிலேயே உயிர்சக்தி அல்லாது வாசி பாய்கிறது.

No comments:

Post a Comment