Sunday 31 January 2016

286. Pranayama

Verse 286
பொருளான ரேசகந்தான் விடுவதப்பா
புத்தியுடன் பூரகந்தான் உள்ளே வாங்கல்
அருளான கும்பகந்தான் அண்டத்து எல்லை
அரகரா சவுபீசம் மந்திர மார்க்கம்
திருவான நிர்பீசம் மந்திரத்தை விட்டு
சிவசிவா வெளிதனிலே பூரித்தேகில்
உருவாக அஞ்சுவிதம் வெளியாய்ச் சொன்னேன்
உத்தமனே ஆசனத்தில் இருந்து பாரே

Translation:
Rechakam is letting it out
Poorakam with awareness is drawing in
The grace, kumbakam, is the frontier of universe
Arahara! Saubheejam is mantra margam
The auspicious nirbheejam is leaving the mantra
Siva sivaa!  If one goes to the space with flash
To create this I told you the five types
The Supreme One! Remain in asana and see it.

Commentary:
Agatthiyar is beginning to describe pranayama or breath regulation from this verse onwards.  He describes rechakam as exhalation, purakha is inhalation and kumbhakam is remaining in a breathless state.  Agatthiyar calls kumbhakam as the frontier of universe.  What is seen as the universe is manifestation of the singularity.  In kumbakha the state of singularity or laya is reached.  Hence, Agatthiyar calls this state as the frontier of the universe. He describes two other states in this verse.  They are saubheejam and nirbheejam.  Bheejam is seed. Here it is the seed of the universe.  This seed state is reached in kumbhaka.  The next higher state is saubheejam.  Agatthiyar says that this is mantra marga.  The word mantra is explained as “mananat traya iti mantraha”  that which is repeated or contemplated upon constantly is mantra.  Mantra also means that which releases the mind.  Thus, upto kumbhakam the mind is engaged.  After that state the function of mind is released.  Sabhijam or saubhijam also means saguna worship.  Mind is essential for realizing a quality.  Thus, saubhijam is the state where only the mind or anthakarana is involved in cognition or consciousness.  Nirbhijam is also called nirguna.  This state is free of mind.  These five states of pranayama are called ladders that raise the limited consciousness to sahasrara and merging it with supreme consciousness. To achieve this one has to remain in asana as only the right asana or posture raises the pranasakthi or the lifeforce to sahasrara.


பிராணாயாமத்தை இப்பாடல் முதல் விளக்கத் தொடங்குகிறார் அகத்தியர்.  ரேசகம் என்றால் மூச்சை வெளிவிடுதல், பூரகம் என்றால் உள்ளிழுத்தல், கும்பகம் என்றால் மூச்சற்ற நிலை.  இதல் கும்பகத்தை அவர் அண்டத்தின் எல்லை என்கிறார் அகத்தியர்.  அண்டம் என்பது வெளிப்பாட்டு நிலை.  அத்தகைய வெளிப்பாடு விலகும் நிலை கும்பக நிலை.  இதற்கு அடுத்த உயர்நிலை சபீஜ நிலை.  சபீஜம் அல்லது சௌபீஜம் என்பது சகுணநிலை.  இதை மந்திர மார்க்கம் என்கிறார் அகத்தியர்.  மந்திரம் என்ற சொல் “மனனத் த்ரய இதி மந்திர:” அல்லது ஒன்றை மனனம் செய்வது அல்லது திரும்பத் திரும்ப எண்ணுவது அல்லது உச்சரிப்பது மந்திரம் எனப்படுகிறது.  இச்சொல் மன த்ரய என்று பிரிந்து மனத்தை விலக்குதல் என்றும் பொருள்படும்.  முன்கூறிய மூன்று படிகளில் புலன்கள் செயல்படுகின்றன.  சபீஜ நிலையில் அந்தக்கரணம் எனப்படும் மனத்தின் கட்டு விடுவிக்கப்படுகிறது.  இதனை அடுத்து உள்ள நிலை நிர்பீஜ நிலை.  இது நிர்குண நிலை.  இந்த ஐந்து நிலைகளும் ஏணிப் படிகளாகச் செயல்பட்டு விழிப்புணர்வை சகஸ்ராரத்துக்கு எடுத்துச் சென்று பரவுணர்வுடன் கலக்கச் செய்கின்றன.  இதுவே பிராணாயாமத்தின் குறிக்கோள்.  இதற்கு ஒருவர் ஆசனத்தில் இருக்கவேண்டும்.  ஏனெனில் ஆசனமே பிராண சக்தியை மேலே எழும்பச் செய்கிறது.  

No comments:

Post a Comment