Saturday 30 January 2016

285. Mayurasana and sukha mukthasana

Verse 285

காணவே மயூரா சனத்தைக் கேளு
கருணையுடன் கைரெண்டுந்  தரையிலூன்றி
ஊணவே முழங்கையை உந்தியிலே வைத்து
உகந்து நின்ற சிம்மம்போல் உறுதி கொள்ளு
பேணவே சுகமுத்தா சனத்தை சொல்வேன்
பேணி மனங் கொண்டபடி யிருக்க நன்று
பூணவே ஒன்பதுக்கும் விபரஞ் சொன்னேன்
பூரணமாய் பிராணாயப் பொருளைக் கேளே

Translation:
Listen about mayurasana
Plant the hands on the floor
The elbow should be placed at the navel
Remain there firmly like a lion that remains with pleasure
Then I will tell you about sukhamukthasana
It is good to remain as the mind wishes
I told you the details about the nine asana
Now hear about pranayama

Commentary:
Agatthiyar finishes the section on asana with two more asana, the mayurasana and sukhamukthasana.  For Mayurasana the yogin places his hands on the floor with the elbows at navel and remains in this position firmly like a lion.  Sukhamukthasana is remaining comfortable in any position that the mind wishes. The next section is on pranayama 


ஆசனங்களைப் பற்றிய பகுதியை மயூராசனம் சுக முக்தாசனம் என்ற இரு ஆசனங்களை விளக்கி முடிக்கிறார் அகத்தியர்.  மயூராசனத்துக்கு ஒரு யோகி கைகளைத் தரையில் ஊன்றி முழங்கைகளை உந்தியில் வைத்து அந்த நிலையில் ஒரு சிங்கத்தைப் போல நிற்கிறார்.  சுகமுக்தாசனத்துக்கு ஒருவர் தன மனம் விரும்பியபடி ஏதாவது ஒரு ஆசனத்தில் சுகமாக இருக்கிறார்.  இவ்வாறு ஒன்பது வித ஆசனங்களை விளக்கு அடுத்து பிராணாயாமத்தைப் பற்றிக் கூறப்போவதாகச் சொல்லி இந்தப் பகுதியை முடிக்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment