Thursday 28 January 2016

281. Asanas- kOrrikam, singa aasana

Verse 281
ஆசனம் ஒன்பது விவரம்

காணடா ஆசனத்தை விரித்துச் சொல்வேன்
கருவாக கோற்றிக ஆசனத்தைக் கேளு
தோணடா முழந்தாட்கு ளச்சி ரெண்டில்
சுகமான பதமிருக்க கோற்றிகமாச்சு
பூணடா சிங்கா சனத்தைக் கேளு
பூரணமாய் ஒட்டியான பந்தம் பண்ணி
பேணடா முழந்தாள்மேல் கரங்கள் நீட்டி
பிராண னென்ற தாரணையைப் பார்ப்பார் பாரே

Translation:
Nine types of asana

Listen, I will expand on the asana
Listen about the kOrrikam asana
In the depression behind the two knees
If the foot is placed it is kOrrikam
Now listen about Singasana
Performing the uddiyana bandham completely
Extend your hands over the knees
See the prana, the dhaarana- they will see it, see.

Commentary:
Agattthiyar is beginning to describe the asanas.  He is describing nine principle asanas in this section.  He begins with kOtrikam.  Here the yogin places his feet in the depression behind the knees.  This asana may be the kukuta asana or the svasthikasana.  Tirumandiram calls svasthikasana as supreme asana.
Next asana is the singa aasana.  Agatthiyar says that a yogin performs perfect uddiyaana bandham, extends his arms over his knees and watches the prana while all other mental activities are terminated.  Hatha yoga pradeepika describes this asana as follows “place the two heels under the perineum with soles turned upwards, hands to rest on the knees which should touch the ground. Open your mouth as you perform the jalandhara mudra and fix your gaze at the root of the nose.


அகத்தியர் இந்தப் பகுதியில் ஆசனங்களை விளக்கத் தொடங்குகிறார்.  ஆசனங்கள் ஒன்பது என்று குறிப்பிட்ட பிறகு அவர் கோற்றிகம் என்ற ஆசனத்துடன் தனது விளக்கவுரையைத் தொடங்குகிறார்.  இந்த ஆசனத்தில் ஒரு யோகி தனது பாதங்களை முட்டிக்குப் பின் இருக்கும்   இடத்தில் வைத்திருக்கிறார்.  இந்த ஆசனம் ஸ்வஸ்திகாசனமாகவோ குக்குட ஆசனம் அல்லது கோழி ஆசனமாகவோ இருக்கலாம்.
இதனை அடுத்து வருவது சிங்க ஆசனம்.  ஹத யோக பிரதீபிகா என்ற நூல் இந்த ஆசனத்தை “இரு பாதங்களை மேல்நோக்கி விதைப்பைக்கும் எருவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து கைகளை  முட்டியின் மீது நீட்டவும்.  வாயைத் திறந்து ஜாலந்தர கட்டை மேற்கொண்டு கண்களை மூக்கு தோன்றும் இடத்தில் குவிக்கவும்”என்று கூறுகிறது.

No comments:

Post a Comment