Saturday 30 January 2016

284. Padmasana

Verse 284
உறுதியுள்ள பத்மமதை சொல்லக் கேளு
உண்மையுடன் பாதம் ரெண்டும் துடைமேலேற்றி
சுருதியுடன் கை ரெண்டும் முழந்தாள் வைத்து
சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப் பார்க்க
பரிதியுள்ள பத்மா சனமிதென்று
பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்
வரிதியுடன் எக்கிய மாமுனிதான் சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே


Translation:
Listen to me talk about the firm padmam
Raising the foot over the thighs
Place the hands on the knee
Seeing the self with purity
This is the padmasanam
All the great souls of Vedanta
With yagna mamuni saying
They became happy in the glorious asana

Commentary:
Agatthiyar talks about Padmasana in this verse.  Agatthiyar describes it as placing the feet on the thighs and the hands on the knees and concentrating on the self.  Agatthiyar says that this asana was described by Yagna mahamuni and other great souls, experts of Vedanta practiced it and remained in it with happiness.


இப்பாடலில் அகத்தியர் பத்மாசனத்தை விளக்குகிறார். பாதங்களைத் துடைகளின் மேல் வைத்து கைகளை முழந்தாளின் மேல் வைத்து ஆத்மாவில் லயித்திருப்பதே பத்மாசனம் என்றும் இந்த ஆசனத்தை யக்ஞ மகாமுனிவர் விளக்கினார் என்றும் அந்த ஆசனத்தில் வேதாந்தில் தலைசிறந்த ஆன்றோர் நின்று மகிழ்ந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment