Thursday 28 January 2016

282. Bhadrasana and mukthasana

Verse 282
பாரப்பா பத்திர சனத்தைக் கேளு
பதிவாகத் தானறிந்து காலை ரெண்டும்
காரப்பா பிரகாலை கையால் கட்டி
கண்ணறிந்து தானோக்க ஆசனமுமாச்சு
சாரப்பா முத்தான ஆசனத்தைக் கேளு
சங்கையுடன் பரடு மேல் பரடு போட்டு
சேரப்பா குதத்துக்குள் குதிகால் வைத்து
செம்மையுடன் தானிருக்கத் திறந் தானாமே

Translation:
See son, listen about bhadraasanam
Knowing it well, the two feet
Are placed together and held with hands
Focusing the mind on the mental eye is the asana
Now listen about the mukthasana
Placing one heel over the other
Place the back of the foot at the anus
Remaining so perfectly.

Commentary:
Agatthiyar is describing the bhadrasana here.  In this aasana the feet are placed facing each other and held by the palms.  The eyes are closed.  This asana is said to one the four poses that aid
meditation.  This asana awakens the muladhara cakra and directs the prana upwards.  It calms the mind and reduces mental activity.
The next asana that he describes is mukthasana.  Here the left heal is placed over the genitals or anus and the right heel is placed exactly over the left one as if they are both one.  This asana directs the energy from the lower chakras to the higher ones.  It calms the brain and the nervous system.

இப்பாடலில் அகத்தியர் பத்ராசனத்தையும் முக்தாசனத்தையும் விளக்குகிறார்.  ப்த்ராசனத்தில் ஒருவர் பாதங்களை ஒன்றை ஒன்று தொடுவதாக வைத்து கைகளால் அவற்றைப் பிடித்துக்கொள்கிறார்.  கண்களை மூடி மனத்தைக் குவிக்கிறார்.  இந்த ஆசனம் மூலாதார சக்கரத்தை எழுப்பி பிராணனை மேல் நோக்கிச் செல்ல வைக்கிறது.  மனதை அமைதிபடுத்தி எண்ணங்களைக் குறைக்கிறது.

முக்தாசனத்தில் ஒருவர் இடது குதிகாலை குதத்தில் வைத்து வலது குதிகாலை அதன்மேல் ஒன்றாக இருக்கும்படி வைக்கிறார். இந்த ஆசனம் கீழ்ச்சக்கரங்களில் உள்ள குண்டலினி சக்தியை மேல் சக்கரங்களை நோக்கிச் செலுத்துகிறது.  மனதையும் நரம்பு மண்டலத்தையும் அமைதியாக்குகிறது. 

No comments:

Post a Comment