Tuesday 24 February 2015

32. Anthakarana

Verse 32
கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே

Translation:
Listen, the great rishi, Pulatthiyaa, Sir,
About the merciful karana, the anthakarana (internal sense organs)
There is the one, the mind, without fault
There is this sharp buddhi (sense of discrimination)
See the ahamkaara,
Siva sivaa, the purity, the chittam
Rule them, the senses, the four,
Knowing them see the atma.

Commentary:
Having listed the senses of wisdom, senses of action, the elements and the subtle qualities, Agatthiyar is listing the internal senses or modifications of the mind.  The anthakarana are four- the mind which processes everything, the buddhi which is the discriminating part of the mind, the ahamkara which is the sense of I-ness which interprets the experiences as favorable or unfavorable and the chittham which is the pure part of mind a subset of the supreme consciousness.  The ultimate step is convert the chittham into chith or supreme consciousness. 
Agatthiyar tells Pulatthiyar, who is mentioned for the first time in this work, that having known all the senses now he should see the details about the atma or soul.

ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் பூதங்களையும் அவற்றின் சூட்சும குணங்களையும் பட்டியலிட்ட பிறகு அகத்தியர் அந்தக்கரணம் எனப்படும் மனத்தின் நான்கு நிலைகளை இப்பாடலில் கூறுகிறார்.  அவையாவன, அனைத்தையும் உணருவதான மனம், நன்மை தீமைகளைப் பகுத்தறியும் புத்தி, ஆங்காரம் எனப்படும் “தான்” என்னும் உணர்வு மற்றும் மனத்தின் தூய பகுதியான சித்தம் என்பவை.  இவற்றில் அகங்காரம் என்பது மனம் மற்றும் புத்தி உணர்ந்தவற்றைத் தன்னுடன் தொடர்புபடுத்தி தனக்கு விருப்பமானது நன்மையானது அல்லது அவ்வாறு இல்லாத ஒன்று என்று உணருகிறது.  சித்தம் என்பது பரவுணர்வு அல்லது சித்தின் பகுதி. தூய்மையான மனம்.  சித்தத்தை சித்தாக மாற்றுவதே சித்தர்களின் குறிக்கோள். 

இவ்வாறு மேற்கூறிய விஷயங்களை அறிந்து அடுத்து ஆத்மாவைப் பற்றி அறிந்துகொள் என்று அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

No comments:

Post a Comment