Wednesday 11 February 2015

23. Details about Jeevatma and Paramatma

Details about Jeevatma and Paramatma
Verse 23
தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோவனன்ற குருவருளால் அங்குதித்து
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்கினி யும் வாய்வுங் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்ச்
சென்றிருந்து ஆதாரம் ஆனார்பாரே

Translation:
The subtlety, the Self is the bindu and nadha
Knowing this the bindu joins with the nadha
Due to the king, the grace of guru, emerging there
The madapathi that arose there, what can I say about it.
For the madapathi, the body,
The firm and truthful fire and vayu coming together
The honey-like jivatma, paramatma
Going there and remained as its support. 

Commentary:
This is the first verse where Agatthiyar begins to explain his philosophy.  The origin for everything is the bindu and nadha, the primordial form and sound.  These represent the Self.  These two factors come together due to the grace of Guru and become a madapathi.  The term madapathi is interesting.  Pati means both lord as well as a locus.  Here it is used to indicate a locus.  Thus the madapathi is the locus which has ignorance.  The body is the achetana, one without consciousness.  The soul and Isvara are chetana, those who are endowed with consciousness.  Thus, the body is the ignorant locus.  Matam also means maTam or a sacred center.  As it houses the Jivatma and Paramatma in the form of fire and air principles respectively it is a sacred site.   

Guru arul means the grace of the preceptor.  Guru generally means one who imparts knowledge. It also means one who wishes to remove the darkness.  The darkness here is the limitation caused caused by aanava.  Tirumular says that a Jivatma gets a body to transcend the influence of aanava, the primary fault.  The karma and maya are added as aids to remove the original impurity, aanava.  Tirumular says that it is like adding the mud, the dirt, to remove the dirt in the cloth.  (It is customary in India to wash clothes in rivers by rubbing them with mud to remove the grease and dirt)

Agatthiyar concludes this verse saying that Jivatma and Paramatma remain as the support for the body.  Without them the body ceases to exist.  

இப்பாடல் முதலாக அகத்தியர் தனது தத்துவங்களை விளக்கத் தொடங்குகிறார்.  உலகம் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பது விந்துவும் நாதமும்.  இவையிரண்டும் குருவருளால் கூடி மடபதியாயின என்கிறார் அகத்தியர்.  குருவருள் என்பது பொதுவாக உபதேசம் செய்யும் உலக குருக்களைக் குறித்தாலும் இங்கு அது இறைவனைக் குறிக்கும். குரு என்ற சொல் இருட்டை நீக்குபவர் என்று பொருள்படும்.  இருட்டு என்பது ஆணவ மலம் தோற்றுவிக்கும் "நான் அளவுக்குட்பட்டவன்" என்ற எண்ணம்.  இந்த இருட்டை நீக்குவதற்கே ஒரு ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது.  இதற்கு உதவியாக இறைவன் கர்மம் மாயை என்ற இரு மலங்களையும் கூட்டுவிக்கிறார்.  அது வண்ணான் துணியை வெளுக்க ஆற்றங்கரையில் மண் என்ற மற்றொரு அழுக்கை அதன்மேல் தேய்ப்பதைப் போல் உள்ளது என்று திருமூலர் கூறியுள்ளார். 

மடபதி என்ற சொல் அறிவற்றவன் என்றும் அறிவற்ற ஒரு தலம் என்றும் ஆன்மீக இடம் என்றும் பொருள்படும்.  மடபதி என்பதற்கு அறியாமையை உடைய ஜீவன் என்று பொருள் கூறலாம் என்றாலும் இங்கே அகத்தியர் அந்த சொல்லை உடல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.  உடல் அசேதனம் அல்லது அறிவற்றது.  ஆத்மா சேதனம் அல்லது அறிவுள்ளது.  இதனால் உடலை அறிவற்ற தலம் என்று அழைக்கலாம்.  உடலில் அக்னியும் வாயுவும் ஜீவாத்மா பரமாத்மாவாக இருக்கின்றனர் என்று அகத்தியர் அடுத்து கூறுவதால் உடல் ஆன்மீக தலம், மடம், பதி, ஜீவாத்மா பரமாத்மாக்களின் இருப்பிடம் என்றும் பொருள் கூறலாம்.  இந்த உடலுக்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆதாரங்களாக அதற்கு இருப்பைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர் என்று அகத்தியர் இப்பாடலை முடிக்கின்றார்.

No comments:

Post a Comment