Saturday, 28 February 2015

36. Tattva and taathvika

Verse 36
பாரப்பா தன்னை மிகத்தானே கண்டு
பக்தியுடன் உள்கருவி மூலம் பார்த்து
நேரப்பா நின்றதினால் தத்துவத்தின் பெருமை
நீதியுடன் தோணுமடா நினைவாய்ப் பாரு
சாரப்பா மனசாரச் சார்ந்து பார்த்தால்
சார்வான தத்துவங்கள் தோணும் பாரு
ஆரப்பா அறிவார்கள் பூதமைந்தில்
அதிற்பிறந்த தத்துவந்தான் தொண்ணூற்றாரே

Translation:
See son, seeing the self greatly,
Seeing it with the internal instruments, with devotion,
By remaining clear, the glory of the principles
Will appear properly. See it carefully
If you see it mentally
The associated principles will appear.  See them
Son, who knows that from the five elements
The principles that are born are ninety six.

Commentary:
According to the Tamil Siddhas the total number of principles or tattva are ninety six.  Thirty six of them are primary principles and the remaining sixty are derived principles from the primary principles, taatvikam.  Agatthiyar is referring to this concept in this verse.  He has already listed the thity six principles in the previous verse (24 atma tattva, 7 vidya tattva and 5 siva tattva).  From the next verse he will be describing the derived principles.  Setting the stage for this he is saying that if one examines the nature of the principles carefully one will see that the derived principles occur from the primary principles. 


சித்த மார்க்கத்தில் தத்துவங்கள் 96 ஆகக் கருதப்படுகின்றன.  அவற்றில் 36 பிரதம தத்துவங்கள் என்றும் மீதி 60 சார்வுத் தத்துவங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.  சார்வுத் தத்துவங்கள் பிரதம தத்துவங்களிலிருந்து தோன்றுபவை.  இவற்றை அவர் அடுத்த பாடலிலிருந்து விளக்கத் தொடங்குகிறார்.  பிரதம தத்துவங்களை ஒருவர் மனதால் கவனம் கொண்டு நோக்கினால் அவற்றிலிருந்துதான் சார்வுத் தத்துவங்கள் தோன்றுகின்றன என்பதைக் காணலாம் என்று அவர் கூறுகிறார்.  

Friday, 27 February 2015

35. Siva tattva

Verse 35
கேளடா சிவதத்துவந் தன்னை மைந்தா
கிருபையுள்ள புலத்தியனே நன்றாய்க் கேளு
ஆளடா சுத்த வித்தை ஈசுவரமும் மைந்தா
அப்பனே ச்தாக்கியமும் சத்தி சிவம் ஐந்துஞ்
சூளடா சிவதத்துவம் என்று பேரு
சுகமான தத்துவங்கள் முப்பத்தாறும்
வாளடா உடற்கருவி என்றும் பேரு
மைந்தனே தானறிந்து தன்னைப் பாரே

Translation:
Listen about the Siva tattva, Son,
The merciful Pulatthiya hear well,
The suddha vidya, Isvaram, son,
Son, sadhaakhyam, sakthi, sivam five
Say firmly, they are named siva tattva
The pleasurable principles thirty six
See son they are called the instruments of the body
Son, knowing them see them/self.

Commentary:
Agatthiyar lists the siva tattva in this verse.  There are also principles because other lower principles emerge from them.  They are the products of suddha maya.  The Siva tattva are sadvidya, isvara, sadaakhya or sadasiva, sakthi and sivam.  Thus, the total number of principles or tattva in siddha marga are thirtysix- 24 atma tattva, 7vidya tattva and 5 siva tattva.  These 36 principles are called the instruments of the body.  They make the body function and cause various experiences.


சுத்த வித்யா, ஈஸ்வரம், சாதாக்கியம் அல்லது சதாசிவம், சக்தி, சிவம் என்று சிவ தத்துவங்கள் ஐந்தாகும்.  இந்த ஐந்தும் பிற தத்துவங்கள் தொன்ருவதர்க்குக் காரணமாக இருப்பதால் தத்துவங்களாகின்றன.  இவ்வாறு சித்த மார்க்கத்தில் தத்துவங்கள்  முப்பத்தாறு.  24 ஆத்ம தத்துவம், 7 வித்யா தத்துவம், 5 சிவ தத்துவம்.  இவையனைத்தும் உடற்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன என்கிறார் அகத்தியர். இவை உடல் செயல்படுவதற்கும் பல அனுபவங்களைப் பெறுவதற்கும் காரணமாக இருப்பதால் கருவிகளாகின்றன.

34. Vidya tattva

Verse 34

கேளப்பா வித்தியா தத்துவத்தைச் சொல்வேன்
கேள் என்ன காலை என்றும் நியதி என்றும்
சூளப்பா கலைஎன்றும் வித்தை என்றுஞ்
சுகமான ராகம் என்றும் புருடன் என்றும்
நாளப்பா மாய்கை என்றும் எழுமாச்சு
நன்மையுடன் வித்தியா தத்துவத்தைப் பார்த்து
ஆளப்பா ஆதாரத் தேகந் தன்னை
அறிந்து கொண்டு சிவ தத்துவத்தைக் கேளே

Translation:
Listen son, I will tell you the vidya tattva
Listen, kaalai, niyathu
Kalai, vidyai and
The blissful raga and purusha
The maya and so they became seven.
Seeing the beneficial vidya tattva
Rule it, the supporting body
Knowing it, listen about siva tattva.

Commentary:
Agatthiyar is listing the vidya tattva.  They are kaala, niyathi, kalaa, vidya, purusha and maya.  Maya mentioned here is the asuddha maya which creates the other principles.  However, it is also considered a tattva as the creations of maya are beyond the five, kalaa, kaala, niyathi, raga and vidya.  The vidya here is asuddha vidya which gives the perception of limitation.  Purusha is not atma, the self.  Purusha is a product of the vidya tattva, it is a state.  It is the state of the soul that is limited by the vidya tattva and takes a body.
Instead of saying kaala Agatthiyar is saying kaalai or morning.  This is to indicate that it is the distinctions of time, morning, evening, day, month etc.  
Kalaa is limitations with respect to action., kaala- limitations with respect to time, raga- limitations in what the soul can desire, niyathi- limitation in experience.

Agatthiyar is proceeding to the Siva tattva after the vidya tattva.

அகத்தியர் இப்பாடலில் வித்யா தத்துவங்களை விளக்குகிறார்.  தத்துவம் என்பது தன்னிலிருந்து மற்றொன்றைப் பிறப்பிப்பது.  அதனால்தான் ஆத்ம தத்துவம் என்பவை ஆத்மா அல்ல.  ஆத்மா என்றும் நிலையாக இருப்பது, தன்னிலிருந்து மற்றொரு தத்துவத்தைப் பிறப்பிப்பதில்லை.  புருடன் என்று வித்தியா தத்துவத்தில் குறிப்பிடப்படுவது ஆத்மா அல்ல.  அது வித்யா தத்துவத்தால் மாயையினால் உருவாக்கப்படும் ஒரு நிலை.   அதேபோல் வித்தியா தத்துவத்தில் சேர்க்கப்படும் மாயை சுத்த மாயை அல்ல.
மற்ற தத்துவங்களான காலம்- பகல், இரவு, நாள், மாலை, காலை என்று காலத்தின் அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது.  கலை- செயல்பாட்டில் அளவுக்குட்டமையை ஏற்படுத்துவது, ராகம்- விருப்பத்தில் அளவுக்கு உட்பட்டமைக்குக் காரணம், நியதி-  அனுபவத்தில் அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது, வித்யை- அறிவில் அளவுக்கு உட்பட்டிருப்பதை ஏற்படுத்துவது.


இவ்வாறு வித்தியா தத்துவத்தை விளக்கியபிறகு அகத்தியர் சிவ தத்துவங்களை விளக்கப்போகிறார்.

Wednesday, 25 February 2015

33. Atma tattva

Verse 33
பாரப்பா ஆத்தும தத்துவம் தானப்பா
பதிவாக இருபத்து நாலும் சொன்னேன்
நேரப்பா தானிருந்து ஆத்துமாவாம்
நிலையறிந்து பெற்றதினால் வாசியாகும்
காரப்பா வாசிநிலை கருவைக் கண்டு
கருவாக ஆத்துமத தத்துவத்தைப் பார்த்தால்
ஆரப்பா உனக்கு நிகர் உண்டோ பிள்ளாய்
அப்பனே வித்தியா தத்துவம் கேளே

Translation:
See son, the atma tattva (principles of soul)
I told you the twenty four
Remaining with the knowledge
About the soul, it will become vaasi
Focus son, seeing the status, the essence of vaasi
And the essence of the atma tattva,
Who is equal to you? Son,
Listen about the vidya tattva.

Commentary:
Agatthiyar explained the atma tattva or principles that control the soul.  They are 5 jnanendriya, 5 karmendriya, 5 elements, 5 subtle qualities and four modifications of mind- a total of 24.
When one learns their essence and the status of vaasi one will become a superior soul with none equal to him.  Agatthiyar will next explain the vidya tattva or the principles that confer knowledge.

இதுவரை அகத்தியர் ஆத்ம தத்துவங்கள் எனப்படும் 24 தத்துவங்களை விளக்கினார்.  அவை 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5 பூதங்கள், 5 தன்மாத்திரைகள், 4 மனத்தின் மாறுபாடுகள் என்பவை.  இந்த ஆத்ம தத்துவத்தின் கருவையும் வாசியின் நிலையையும் ஒருவர் அறிந்தால் அவருக்கு ஈடானவர் இவ்வுலகில் இல்லை என்கிறார் அகத்தியர்.

இதனை அடுத்து அவர் வித்யா தத்துவங்களை விளக்கப்போகிறார்.   

Tuesday, 24 February 2015

32. Anthakarana

Verse 32
கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே

Translation:
Listen, the great rishi, Pulatthiyaa, Sir,
About the merciful karana, the anthakarana (internal sense organs)
There is the one, the mind, without fault
There is this sharp buddhi (sense of discrimination)
See the ahamkaara,
Siva sivaa, the purity, the chittam
Rule them, the senses, the four,
Knowing them see the atma.

Commentary:
Having listed the senses of wisdom, senses of action, the elements and the subtle qualities, Agatthiyar is listing the internal senses or modifications of the mind.  The anthakarana are four- the mind which processes everything, the buddhi which is the discriminating part of the mind, the ahamkara which is the sense of I-ness which interprets the experiences as favorable or unfavorable and the chittham which is the pure part of mind a subset of the supreme consciousness.  The ultimate step is convert the chittham into chith or supreme consciousness. 
Agatthiyar tells Pulatthiyar, who is mentioned for the first time in this work, that having known all the senses now he should see the details about the atma or soul.

ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் பூதங்களையும் அவற்றின் சூட்சும குணங்களையும் பட்டியலிட்ட பிறகு அகத்தியர் அந்தக்கரணம் எனப்படும் மனத்தின் நான்கு நிலைகளை இப்பாடலில் கூறுகிறார்.  அவையாவன, அனைத்தையும் உணருவதான மனம், நன்மை தீமைகளைப் பகுத்தறியும் புத்தி, ஆங்காரம் எனப்படும் “தான்” என்னும் உணர்வு மற்றும் மனத்தின் தூய பகுதியான சித்தம் என்பவை.  இவற்றில் அகங்காரம் என்பது மனம் மற்றும் புத்தி உணர்ந்தவற்றைத் தன்னுடன் தொடர்புபடுத்தி தனக்கு விருப்பமானது நன்மையானது அல்லது அவ்வாறு இல்லாத ஒன்று என்று உணருகிறது.  சித்தம் என்பது பரவுணர்வு அல்லது சித்தின் பகுதி. தூய்மையான மனம்.  சித்தத்தை சித்தாக மாற்றுவதே சித்தர்களின் குறிக்கோள். 

இவ்வாறு மேற்கூறிய விஷயங்களை அறிந்து அடுத்து ஆத்மாவைப் பற்றி அறிந்துகொள் என்று அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

Monday, 23 February 2015

30. Senses and sense-mediated experiences

Verse 30
பார்க்கையிலே ஐம்புலனை நன்றாய்க் கேளு
பதிவான சத்தமொடு பரிசம் ரூபம்
ஏர்க்கவே ரசமுடனே கெந்தம் ஐந்து
இன்பமுள்ள ஐம்புலனை அறிவதற்கு
சேர்க்கையுடன் ஐம்புலனிக் கண்டு மைந்தா
தேர்ந்து மனதறிவாலே தேர்ந்து கொண்டால்
மார்க்கமுள்ள சித்தரென்று யார்க்குந்தோணும்
மைந்தனே ஐம்புலனை வகுத்துக் காணே

Translation:
While seeing the five sense, hear well
The merciful sabdha (sound), sparsha (touch sensation), roopa (form)
The acceptable rasa (taste) gendham (smell) are the five
To know the senses that confer pleasure
See the senses in the associated state (with the organs and objects)
Everyone will think that “this siddha has the path”
Son, see the senses in detail.

Commentary:
Agatthiyar says that the five senses are sabdha, sparsha, roopa, rasa and gandha.  The experiences that senses confer are due to the association of the sense organs, the jnanendriya, with the senses- the five subtle qualities and the soul.  The organs transmit the information classifying them in the context of the senses and the soul enjoys the experience.  Hence, Agatthiyar is advising that one should know the intricacies of the senses, the process of sense mediated experience.


சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்று புலன்கள் ஐந்தாகும்.  இந்தப புலன்களால் பெரும் அறிவு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் பொறிகள் எனப்படும் ஞானேந்திரியங்கள் புலன்களுடன் சேருகின்றன, இவையிரண்டும் ஆன்மாவுடன் சேர ஆன்மா அந்த அனுபவங்களை உணர்கிறது.  இதனால் அகத்தியர் புலன்களை அவற்றின் சேர்க்கையுடன் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.  இவ்வாறு உலக இன்பங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது சித்தர் மார்க்கத்தில் ஒரு அம்சம் என்று அவர் நமக்குக் கூறுகிறார். 

Sunday, 22 February 2015

29. Karmendriya-the benefit they confer

Verse 29
கேளப்பா வாக்குடனே பாதம்பாணி
கிருபையுடன் பாயு உபஸ்தம் ஐந்துஞ்
சூளப்பா கர்ம இந்திரிய மாகுஞ்
சுகமாகத் தானரிந்து சுத்தமானால்
பாளப்பா போகாது ஞான மார்க்கம்
பத்தியுடன் ஐந்தையும் நீ கண்டு தேர்ந்தால்
கேளப்பா ஒன்றுமில்லை வாசியேகுங்
குறியாக ஐம்புலனைக் கூர்ந்து பாரே

Translation:
Listen son, along with vak (mouth), foot, hands
With mercy, the organ of excretion, organ of reproduction, the five
Are the karma indriya
Knowing them well and if they are purified
The jnana marga will not leave
If you know these five with devotion and become an expert
Listen son, there is nothing, the vaasi will ascend
Look at the five senses with focus.

Commentary:
After describing the senses of knowledge Agatthiyar is mentioning the senses of action, the karma indriya.  They are five in number- mouth, feet, hands, organ of reproduction and organ of excretion.  If the nature of these five are known and they are made pure Agatthiyar says that then the vaasi or life force will ascend.  Purity mentioned here is the external purity as these are organs of action. 
While the jnanendriya conferred atma darsanam, the karmendriya confer vaasi’s ascent.

ஞாநேந்திரியங்களை விளக்கியபிறகு அகத்தியர் கர்மேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன்களை இப்பாடலில் விளக்குகிறார்.  அவை வாய், கால், கை, கழிவுறுப்பு மற்றும் பிறப்புறுப்பு என்பவை.   இவற்றின் தன்மையை அறிந்து அவற்றை சுத்தமாக்கினால் வாசி ஏறும் என்கிறார் அகத்தியர்.  இங்கு குறிப்பிடும் சுத்தம் சரியை எனப்படும் வெளிச்சுத்தமாகும்.

ஞான இந்திரியங்கள் ஆத்ம தரிசனத்தையும் கர்ம இந்திரியங்கள் வாசியின் ஏற்றத்தையும் தருகின்றன என்கிறார் அகத்தியர். 

Saturday, 21 February 2015

28. Meijnana deepam

Verse 27
கேளப்பா ஞான இந்திரியந்தன்னை
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
சூளப்பா தோத்திரந்தான் தேகந்தேகம்
வாளப்பா சக்ஷுவென்றால் நேத்ரமாகு
மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும்
காலப்பா ஆக்கிராணம் மூக்கு மூக்கு
கருணையுள்ள ஞான இந்திரியமைந்தாம்.

Translation:
Listen son, about the senses of wisdom (jnanendriya)
I will tell you with mercy, hear well, 
Adorn son, the worshipful body, body
That which is called “thvak” is the body, deham,
See son, “chakshu” means eyes
The magnificient “singhu” means mouth
The air, son, “aagraanam” means nose
The merciful jnana indriya are five.

Commentary:
Agatthiyar is explaining the organs of knowledge or jnanendriya in this verse. The eyes are the shakshu, the skin-thvak, mouth-singhu, nose- aagraanam.  Ear is missing in the verse.  However, Aatthiyar has included it also as he says the jnanendriya are five in number.

அகத்தியர் இப்பாடலில் ஞாநேந்திரியங்களை விளக்குகிறார்.  கண்கள்-சஷு, உடல்- த்வக், வாய்- சிங்கு, மூக்கு- ஆக்ராணம் என்று அழைக்கப்படுகின்றன என்கிறார் அகத்தியர். இப்பாடலில் காது குறிப்பிடப்படவில்லை.  ஆனால் அகத்தியர் அதையும் சேர்த்து ஞானேந்திரியங்கள் ஐந்து என்கிறார்.  

அஞ்சான பஞ்ச இந்திரியந்தன்னை
அருளான மனக்கண்ணால்நன்றாய்ப் பார்த்து
நெஞ்சார அஞ்சி நிலை பார்த்து மைந்தா
நிலையான குருபதியில் நின்றாயானால்
மிஞ்சாமல் வாசியது தானேதானாய்
மெய்ஞ்ஞான தீபமது விளங்கும் பாரு
தஞ்சமுடன் ஐந்து நிலை நன்றாய்ப் பார்த்துச்
சங்கையுடன் கர்ம இந்திரியங்கேளே

Translation:
The five indriya
If you see them well with your mind’s eye
Seeing their status satisfactorily
If you remain in the gurupathi
The vaasi becomes the self
The meijnana deepa will become visible
Surrendering to it seeing the five states
Hear about the karma indriya.

Commentary:
The jnanedriya described in the previous verse grant knowledge.  Hence, if one sees their true nature, that the collect the information and send them to the self who enjoys it, then one will understand them completely.  If one were to remain in the guru pathi or the ajna with this knowledge, the vaasi will remain as self, untainted by the delusions caused by the indriya.  In that state the soul will experience the atma deepa or the flame of true wisdom- meijnana deepam.  This flame will be visible at the ajna.

After describing the jnanendriya Agatthiyar explains the karma indriya or senses of action in the next verse.

மேற்பாடலில் கூறிய ஞானேந்திரியங்கள் அறிவைக் கொடுப்பவை.  அவற்றின் உண்மையான தன்மையை, அவை விஷய ஞானத்தை ஆத்மாவுக்குத் தருபவை, அந்த அறிவை அனுபவிப்பது ஆத்மாவே என்ற உண்மையை, ஒருவர் அறிந்தால் அவற்றைப் பற்றிய அறிவைப் பெறலாம்.  இந்த அறிவுடன் ஒருவர் குருபதம் எனப்படும் ஆக்னையில் நின்றால் வாசி ஆத்ம தீபமாக, மெய்ஞ்ஞான தீபமாகக் காட்சி தரும் என்கிறார் அகத்தியர். 

இவ்வாறு ஞானேந்திரியங்களை விளக்கிய பிறகு அகத்தியர் கர்மேந்திரியங்களை விளக்கப் புகுகிறார்.

Thursday, 19 February 2015

27. Jnanendriya

Verse 27
கேளப்பா ஞான இந்திரியந்தன்னை
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
சூளப்பா தோத்திரந்தான் தேகந்தேகம்
வாளப்பா சக்ஷுவென்றால் நேத்ரமாகு
மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும்
காலப்பா ஆக்கிராணம் மூக்கு மூக்கு
கருணையுள்ள ஞான இந்திரியமைந்தாம்.

Translation:
Listen son, about the senses of wisdom (jnanendriya)
I will tell you with mercy, hear well, 
Adorn son, the worshipful body, body
That which is called “thvak” is the body, deham,
See son, “chakshu” means eyes
The magnificient “singhu” means mouth
The air, son, “aagraanam” means nose
The merciful jnana indriya are five.

Commentary:
Agatthiyar is explaining the organs of knowledge or jnanendriya in this verse.  They are five in number.  The body is called thvak, the eyes are shakshu, mouth is singhu and the nose is aagranam. The ears are missing in this verse.   Agatthiyar will continues about them in the next verse also.

பூதங்களைப் பற்றிக் கூறிய பிறகு அகத்தியர் ஞாநேந்திரியன்களைப் பற்றிக் கூறத்தொடங்குகிறார்.  உடல் த்வக் என்றும் கண்கள் சக்ஷு என்றும் வாய் சிங்கு என்றும் மூக்கு ஆக்ராணம் என்றும் அழைக்கப்படுகின்றன.  இங்கு காது குறிப்பிடப்படவில்லை.  

Tuesday, 17 February 2015

26. Bhutha siddhi, Merugiri, Chaturagiri and Kailaya

Verse 26
காரப்பா அஞ்சு பஞ்ச பூதந்தன்னை
கண் குவித்து மனக்கண்ணால் கருவாய்ப் பார்த்தால்
மேரப்பா மேருகிரி காணலாகும்
மேரான சதுரகிரி விலாசந் தோணும்
ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன்
அரகரா பூதவகை அறிந்து கொண்டால்
நேரப்பா நின்ற கைலாசந் தோன்றும்
நிஜமான ஞான இந்திரியங்கேளே

Trasnaltion:
See son, the five elements and their nature
By focusing the mind’s eye and see their essence
The Meru peak will become visible
The locus of Chaturgiri will become visible.
Son, who can I say is equivalent to you
Araharaa! If (you know) about the elements/if the elements are known
The truthful Kailasam will appear.
Hear about the jnanendriya.

Commentary:
This interesting verse explains various peaks that are referred to frequently in Siddha poems.  Meru peak, Chaturagiri, Kailaya etc are referred to frequently in the siddhar songs.  Meru is said to be a mythical mountain around which the entire universe is said to revolve.  It is really the spinal chord that houses the sushumna nadi.  Chaturagiri, similarly is the energy peak in the muladhara.  By understanding the true nature of the elements one perceives the sushumna nadi, the muladhara and ultimately Kailasa or sahasrara.  This is the path of kundalini.  Thus Bhuta siddhi grants a yogi the knowledge about the manifested world. 


இந்த முக்கியமான பாடலில் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் பல சிகரங்களைப் பற்றிக் கூறுகிறார்.  மேரு கிரி, சதுரகிரி, மகேந்திர கிரி, கைலாயம் என்ற பெயர்கள் சித்தர்பாடல்களில் அடிக்கடி காணப்படுகின்றன. மேரு கிரி என்பது ஒரு மலை என்றும் அதனைச் சுற்றி உலகங்கள் அமைந்துள்ளன என்றும் சூரியனும் அதைச்சுற்றிப் பயணிக்கிறது என்றும் புராணங்களும் பல கதைகளும் கூறுகின்றன.  உண்மையில் மேரு என்பது நமது தண்டுவடம். அதனுள் சுழுமுனை நாடி உள்ளது.  அதேபோல் சதுரகிரி என்பது மூலாதாரத்தைக் குறிக்கும்.  இவ்வாறு இந்த கிரிகளை ஒருவர் பூத சித்தி பெற்றால், பூதங்களின் உண்மையான தன்மையை உணர்ந்தால் அறியலாம்.  கைலாயம் என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கும்.  இதனால் பூத சித்தி அடைந்த ஒருவர் கண்ணால் காணும் உலகைப் படைக்கும் சக்திகளின் தன்மைகளை உணர்ந்து குண்டலினியின் பாதையை உணரலாம்.  உலகம் எவ்வாறு தோன்றுகிறது என்பதை உணரலாம்.   

Monday, 16 February 2015

25. The five elements

Verse 25
காணப்பா தத்துவத்தின் விபரஞ் சொல்வேன்
கருணையுடன் சொல்லுகிறேன் கனிவாய்க்கேளு
பேணப்பா பூதமைந்து சொல்லக் கேளு
பிரிதிவி அப்புவுடன் தேய்வுமாக
பூணப்பா வாய்வுடனே ஆகாசந்தான்
பொருந்திநின்ற பூதமடா ஐந்துமாச்சு
தோணப்பா மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்துத்
துலங்கி நின்ற பூதத்தை நன்றாய்க்காரே

Translation:
See son,  I will tell you details about the principles
I will tell you with mercy, hear with compassion
Hear me tell you about the five elements
Earth, water, effulgence
The air along with sky
Thus, the elements that remain fitting well are five
Seeing this well with the mind’s eye
You realize the elements that remain so.

Commentary:
After describing that Jivatma and Paramatma are fire and air principles, Agatthiyar begins describe the five elements that constitute the body and other factors that make up a lifeform.
The five elements are earth, water, fire, air and space.  The different cakras represents these five elements as follows:  The muladhara corresponds to the earth principle, the svadishtana the water principle, the manipuraka the fire principle, the anahata the air principle and vishuddhi the space principle.
  ஜீவாத்மா அக்னி பரமாத்மா வாயு என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் ஐம்பூதங்களை விளக்கத்தொடங்குகிறார்.  ஐம்பூதங்களாவன பிரிதிவி எனப்படும் நிலம், அப்பு எனப்படும் நீர், தேயு எனப்படும் தீ, வாயு எனப்படும் காற்று மற்றும் ஆகாயம்.  நமது உடலில் உள்ள சக்கரங்களுக்கும் இந்த பூதங்களுக்கும் உள்ள தொடர்பு பின்வருமாறு:  மூலாதாரம்-நிலம், சுவாதிஷ்டானம்-நீர், மணிபூரம்- தீ, அனாகதம்- வாயும் விசுத்தி- ஆகாயம். 




Friday, 13 February 2015

24. Jivatma, Paramatma, the witness- who are they?

Verse 24
பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்
பரிவான ஆதார மடத்துக்குள்ளே
நேரப்பா அக்கினிதான் ஜீவாத்மாவே
நிறைந்துநின்ற வாய்வதுதான் பரமாத்மாவாய்ப்
பேரப்பா பெருகி நின்ற கடத்தினுள்ளே
பிளமாக நின்று திருவிளையாட்டாடி
காரப்பா ஆகாசஞ் சாக்ஷியான
கருணையுடன் நின்றுதடா கருவாய்க்காணே

Translation:
See son, the adhara the six of them
Within the merciful center that has the adhara
The fire is the jeevatma
The air principle that remains filling that is the Paramatma
With the pot where these are flowing in great amount
Remaining in the cave, the sacred one plays
See son, the akasa is the witness
It remained mercifully, see it as the essence.

Commentary:
In this very important verse Agatthiyar describes what is Jivatma and what is Paramatma.  The adhara or the support are the six cakra.  The maTam or center that holds these six centers is the human body.  Within the body the fire principle is the Jiva and the air principle is Paramatma.  The body is the pot that holds all these. The cave in this pot is the heart where the sacred Divine remains playing.  The sky or the space principle is the witness for this.  It is interesting to call the sky or space as the witness.  Space is present everywhere.  Even in places where the other principles do not exist, space exists.  Thus, it forms the substratum in which everything remains. 
மிக முக்கியமான இப்பாடலில் அகத்தியர் ஜீவாத்மா பரமாத்மா உடல் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார்.  அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவை சக்கரங்கள்.  ஆதாரம் என்றால் தாங்குவது, support.  சக்கரங்கள் உடலுக்கும் தத்துவங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன.  இந்த ஆதாரங்கள் இருக்கும் மடம் உடலாகும்.  அந்த மடத்தில் அக்னி தத்துவமே ஜீவாத்மா.  அந்த மடத்தை நிறைக்கும் வாயுவே பரமாத்மா.  இந்த பரமாத்மா குகை அல்லது பிலம் எனப்படும் இதயத்தில் இருந்து விளையாடுகிறது.  வாழ்க்கையே அதன் விளையாட்டுதான்.  இந்த கடம் அல்லது பானையில் ஆகாயம் சாட்சியாக இருக்கிறது.
ஆகாயத்தை சாட்சி என்று கூறுவது மிகவும் ரசமானது.  பஞ்ச தத்துவங்களில் ஆகாய தத்துவமே அனைத்துக்கும் அடிப்படையாக இருந்து தாங்குகிறது.  பிற தத்துவங்கள் அதன் மீது உள்ளன.  ஒரு இடத்தில் மற்ற எந்த தத்துவம் இல்லாவிட்டாலும் ஆகாய தத்துவம் இருக்கிறது.  அதனால் அதுவே அனைத்துக்கும் சாட்சியாக உள்ளது. 

Wednesday, 11 February 2015

23. Details about Jeevatma and Paramatma

Details about Jeevatma and Paramatma
Verse 23
தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோவனன்ற குருவருளால் அங்குதித்து
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்கினி யும் வாய்வுங் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்ச்
சென்றிருந்து ஆதாரம் ஆனார்பாரே

Translation:
The subtlety, the Self is the bindu and nadha
Knowing this the bindu joins with the nadha
Due to the king, the grace of guru, emerging there
The madapathi that arose there, what can I say about it.
For the madapathi, the body,
The firm and truthful fire and vayu coming together
The honey-like jivatma, paramatma
Going there and remained as its support. 

Commentary:
This is the first verse where Agatthiyar begins to explain his philosophy.  The origin for everything is the bindu and nadha, the primordial form and sound.  These represent the Self.  These two factors come together due to the grace of Guru and become a madapathi.  The term madapathi is interesting.  Pati means both lord as well as a locus.  Here it is used to indicate a locus.  Thus the madapathi is the locus which has ignorance.  The body is the achetana, one without consciousness.  The soul and Isvara are chetana, those who are endowed with consciousness.  Thus, the body is the ignorant locus.  Matam also means maTam or a sacred center.  As it houses the Jivatma and Paramatma in the form of fire and air principles respectively it is a sacred site.   

Guru arul means the grace of the preceptor.  Guru generally means one who imparts knowledge. It also means one who wishes to remove the darkness.  The darkness here is the limitation caused caused by aanava.  Tirumular says that a Jivatma gets a body to transcend the influence of aanava, the primary fault.  The karma and maya are added as aids to remove the original impurity, aanava.  Tirumular says that it is like adding the mud, the dirt, to remove the dirt in the cloth.  (It is customary in India to wash clothes in rivers by rubbing them with mud to remove the grease and dirt)

Agatthiyar concludes this verse saying that Jivatma and Paramatma remain as the support for the body.  Without them the body ceases to exist.  

இப்பாடல் முதலாக அகத்தியர் தனது தத்துவங்களை விளக்கத் தொடங்குகிறார்.  உலகம் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பது விந்துவும் நாதமும்.  இவையிரண்டும் குருவருளால் கூடி மடபதியாயின என்கிறார் அகத்தியர்.  குருவருள் என்பது பொதுவாக உபதேசம் செய்யும் உலக குருக்களைக் குறித்தாலும் இங்கு அது இறைவனைக் குறிக்கும். குரு என்ற சொல் இருட்டை நீக்குபவர் என்று பொருள்படும்.  இருட்டு என்பது ஆணவ மலம் தோற்றுவிக்கும் "நான் அளவுக்குட்பட்டவன்" என்ற எண்ணம்.  இந்த இருட்டை நீக்குவதற்கே ஒரு ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது.  இதற்கு உதவியாக இறைவன் கர்மம் மாயை என்ற இரு மலங்களையும் கூட்டுவிக்கிறார்.  அது வண்ணான் துணியை வெளுக்க ஆற்றங்கரையில் மண் என்ற மற்றொரு அழுக்கை அதன்மேல் தேய்ப்பதைப் போல் உள்ளது என்று திருமூலர் கூறியுள்ளார். 

மடபதி என்ற சொல் அறிவற்றவன் என்றும் அறிவற்ற ஒரு தலம் என்றும் ஆன்மீக இடம் என்றும் பொருள்படும்.  மடபதி என்பதற்கு அறியாமையை உடைய ஜீவன் என்று பொருள் கூறலாம் என்றாலும் இங்கே அகத்தியர் அந்த சொல்லை உடல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.  உடல் அசேதனம் அல்லது அறிவற்றது.  ஆத்மா சேதனம் அல்லது அறிவுள்ளது.  இதனால் உடலை அறிவற்ற தலம் என்று அழைக்கலாம்.  உடலில் அக்னியும் வாயுவும் ஜீவாத்மா பரமாத்மாவாக இருக்கின்றனர் என்று அகத்தியர் அடுத்து கூறுவதால் உடல் ஆன்மீக தலம், மடம், பதி, ஜீவாத்மா பரமாத்மாக்களின் இருப்பிடம் என்றும் பொருள் கூறலாம்.  இந்த உடலுக்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆதாரங்களாக அதற்கு இருப்பைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர் என்று அகத்தியர் இப்பாடலை முடிக்கின்றார்.