Sunday, 31 January 2016

288. Pranayama and the cakra

Verse 288
அறிந்து பிரம்ம நிலையறிந்து நன்றாயோது
அதின்பிறகு விஷ்ணுவிலே அமர்ந்துவோது
தெரிந்து ருத்திர நிலையறிந்து திறமா யோது
சிவசிவா மயேசுரத்தில் திறமாயோது
வருந்திமனநிலையறிந்து மைந்தா மைந்தா
மகத்தான சதாசிவத்தில் வந்துகூடி
விரிந்த தலந் தனையறிந்து ஓதியேற
விள்ளுகிறேன் பிராணாயம் ஒன்றேயாச்சே

Translation:
In the previous verse Agathiyar said that the poorakam or inhalation should be performed at muladhara.  Inhalation is drawing the breath in.  So this means, one draws the breath in with consciousness in the muladhara.  This is the site of Brahma.  Next it should be done with consciousness at svadhistana, the locus of Vishnu.  The order of divinities in the body is Brahma at the muladhara, Vishnu at svadhishtana, Rudra at manipuraka, Maheswara at anahata, Sadasiva at Vishuddhi, Sakthi and Siva the duality at ajna and the singular state at Sahasrara.  Hence, Agatthiyar says the yogin should draw the breath with consciousness at Maheswara who controls the manas tattva.  This is followed by ascent to the Sadasiva state.  Thus pranayama moves consciousness from the state of plurality to singularity.


முந்தைய பாடலில் அகத்தியர் பூரகத்தை பிரம்ம தலத்தை அறிந்து ஓது என்றார்.  பிரம்மாவின் தலம் அல்லது நிலை இருப்பது மூலாதாரத்தில்.  இது அனைத்தும் வெளிப்பாடுடன் இருக்கும் நிலை.  இதனை அடுத்தது விஷ்ணுவின் நிலை.  சுவாதிஷ்டானமே அதன் தலம்.  இதனை அடுத்து முறையே மகேசுரம்- அனாஹதம் அல்லது இதயம், சதாசிவம்- விசுத்தி, சிவசக்தி- ஆக்ஞா மற்றும் ஒருமை நிலை- சகஸ்ராரம் என்று தலங்கள் நமது உடலில் அமைந்துள்ளன.  இவ்வாறு உணர்வு ஒவ்வொரு நிலையாகக் கடந்து ஒருமை நிலையை அடைகிறது.  இதைத்தான் அகத்தியர் மகேசுர நிலையை அடைந்து மனத்தைப் பற்றி அறிந்து சதாசிவநிலையை அடைந்து முடிவில் ஒன்றாகு என்கிறார்.

No comments:

Post a Comment