Verse 270
காணடா பிர்மமாதி லோகத்துள்ளே
கலந்தசுராள் பீடமுதற் சிந்தித் தெண்ணி
நாகம்போல் வெறுப்பு வந்து
சொற்பனம் போல் அசத்தென்று தூரத்தள்ளி
ஊணடா உண்மையென்ற வேதாந்தத்தை
உணர்ந்து சச்சிதா நந்த மயமாக நின்று
பூணடா தடையற்றுந் தெளிந்து நின்றால்
புத்தியுடன் ஆனந்த வடிவுமாமே
Translation:
See all the worlds beginning with Brahma’s
The position of Sura, think about them
Develop a hatred for them as if it is a snake
Pushing it away as if they are a dream, as impermanent
Plant firmly the Vedanta as the truth
Remaining as sath chith aananda as the truth
If you remain so without any obstacles
With discrimination (buddhi) then the form will that of bliss.
Commentary:
Agatthiyar describes the state of one who practices niyama correctly. Through questioning one understands the truth about self, about permanent and impermanent entities about different positions and locations such as the world of Brahma, Vishnu etc and statuses such as that of sura or Devas. Agatthiyar says that one should shun them as if they are snakes. One should push them away considering them to be as impermanent as a dream. One should remain as sath-chith-ananda, says Agatthiyar. Sath means existence, it is the actionless state. Chith is being aware of oneself. The result of sath and chith is bliss or Ananda. Kashmir Saivam calls sath and chith as prakasha and vimarsha, Divine existing and being aware of itself. As being aware is an action a cause it has an effect, the effect being the world. Thus, this world is an expression of the Supreme Being’s bliss which results from its awareness of itself. When one remains with this awareness or buddhi then one’s form is that of aanada.
Buddhi is one of the modifications of the mind others being manas, chittham and ahamkaram. Manas experiences, buddhi classifies it as good and bad, chittham enjoys the experiences and ahakaram is the sense of self that participates in the previous three steps.
நியமத்தைச் சரியாகக் கடைப்பிடித்தால் ஒருவர் அடையும் நிலையை இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். தான் என்றால் என்ன, சத்தியம் என்றால் என்ன, சொந்தங்கள் என்றால் என்ன என்பவற்றை ஒருவர் உணர்ந்தபோது அவர் பிரம்மா லோகம், விஷ்ணு லோகம் போன்ற இருப்புக்களையும் சுரர் எனப்படும் தேவ நிலைகளையும் பாம்பைப்போல தள்ள வேண்டும். அவற்றை ஒரு கனவு, நிலையற்றவை என்று விலக்க வேண்டும் அவ்வாறு மனவுறுதியுடன் இருந்தால் ஒருவர் சத் சித் ஆனந்த நிலையில் இருப்பார்.
சத் என்பது இருப்பு, செயலற்ற நிலை, சித்- தனது இருப்பை உணரும் ஞானம். ஆனந்தம்- இந்த அறிவினால்ஏற்படும் இன்பம். தனது இருப்பை உணருவது என்பது ஒரு செயல் என்பதால் அதற்கு ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவே உலகம் என்று காஷ்மீர சைவம் கூறுகிறது. அது சத் என்பதை பிரகாசம் அல்லது ஒளிநிலை, இருப்பு நிலை என்றும் சித் என்பது அறிவு நிலை, போதம், விமர்சம் என்றும் அழைக்கிறது. இந்த இருநிளைகளினால் ஏற்படுவது ஆனந்தம். இதற்கு ஒருவர் தனது புத்தியைப் பயன்படுத்துவது முக்கியம்.
புத்தி என்பது மனஸ், அகங்காரம், சித்தம் என்ற மனதின் மூன்று நிலைகளுடன் சேர்ந்து இருக்கும் நான்காவது நிலை. மனஸ் ஒன்றை உணருகிறது, புத்தி அதை இன்பம் துன்பம் என்று பாகுபடுத்துகிறது, சித்தம் அதை அனுபவிக்கிறது இந்த அனுபவத்திற்குத் தான் அல்லது அகம் என்ற உணர்வு முக்கியம். இதனால் புத்தியினால்தான் ஒருவர் சரியான நிலையில் சத் சித் ஆனந்த நிலையில் நிற்க முடியும் என்பதைக் குறிக்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment