Verse 279
பாரப்பா குருசொன்ன சாஸ்திரப்படியே
பத்தியுடன் நடக்கிறதே விரதமென்பார்
நேரப்பா எந்தெந்தக் காரியங்கள் வந்தும்
நேர்மையுள்ள துக்கம் வந்து நாம் பிர்மமென்று
தேரப்பா நிரந்தரமும் வேதம் பார்த்து
செம்மையுடன் நிற்பதுவே விரதமென்பார்
சாரப்பா நேமமென்ற பத்துஞ் சொன்னேன்
சங்கையுடன் இருவகையுந் தானே காணே
Translation:
See son, they say acting as per the words of guru
With devotion is austerity (vratha)
Irrespective of whatever effects happen
Even when righful sorrow occurs pacify yourself saying
“I am Brahman”. Seeing the Vedas at all times and
Remaining as per their instructions is austerity (vrata)
Be so. I have told you the ten types of niyama.
With clarity see the two types.
Commentary:
Agatthiyar explains what is vrata or austerity. He says that leading a life following the words of the guru is vrata, Following the instructions of the Veda and remaining with the knowledge imparted by them is vrata. Agatthiyar concldes the verse telling Pulatthiyar that he has so far explained the ten types of niyama and that Pulatthiyar should see the two types. The two types may be yama and niyama.
விரதமென்றால் என்ன என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். குரு கூறிய வழியே நடப்பதே விரதம். வேதத்தில் கூறியுள்ளபடி ஒழுக்கமாக வாழ்வது, சரியான புரிதலுடன் வாழ்வதே விரதம் என்கிறார் அகத்தியர். இவ்வாறு கூறியபிறகு தான் இதுவரை பத்துவிதமான நியமங்களைக் கூறியுள்ளேன் என்றும் அதை மனதில் கொள்ள வேண்டும் இரு வகைகளையும் பார்க்கவேண்டும் என்றும் புலத்தியருக்குக் கூறுகிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment