Sunday, 31 January 2016

290. Eight stages of pranayama

Verse 290

கேளப்பா எட்டு வகை பருவமுண்டு
கிருபையுடன் புலத்தியனே சொல்லக் கேளு
காளப்பா கழண்டு வெகு வேர்வையானால்
கருத்துடனே தம்பிக்கும் ரெண்டாம் பக்ஷம்
வாளப்பா அக்கினிதான் சொலித்து நின்று
மகத்தான தீபனமாம் மூன்று பக்ஷம்
கேளப்பா இல்லாமல் வாசியேறி
குருபதியில் தீபமுண்டாம் நாலாம் பக்ஷம்

Translation:
Listen son, there are eight stages
Pulathiya!  Listen to me describing them
If prana releases and the body becomes sweaty
The breath will stop in the second stage
The fire will glow
And light up in the third stage
The vasi or life force will ascend
To the locus of guru and the lamp will occur in the four stage

Commentary:
Agatthiyar describes the stages that occur during pranayama.  Beginning with the statement that there are eight stages he says that when breath is practiced in a rhythm, sweat will occur in the body.  This is stage one.  Next, the prana will terminate.  Kumbaka is consciously terminating the breath for a specific period.  The stage two that Agatthiyar is describing is one where breath stops for an extended period, without a time count.  When this happens the fire or heat in the body increases.  This is stage three. This heat will stir vaasi or life force which will ascend the sushumna nadi and make it reach the gurupathi or locus of guru, the ajna.  Here the yogin will experience the glowing lamp.  This is the atma jyothi.


பிராணாயாமத்தினால் ஏற்படும் நிலைகளை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர். இந்த நிலைகள் எட்டு என்று முதலில் கூறும் அவர்  மூச்சை ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் பயின்றால் உடலில் வியர்வை தோன்றும் என்கிறார்.  இதன் அடுத்த நிலை பிராணன் ஸ்தம்பிக்கும் நிலை.  கும்பகம் என்பது பிராணனைத் குறிப்பிட்ட கால அளவுக்குத் தடைப்படுத்துவது.  இந்த இரண்டாம் நிலையில் அவ்வாறு கால அளவு இல்லாமல் பிராணன் நின்றுபோகிறது.  இதனால் உடலில் சூடு அல்லது அக்னி எழும்புகிறது.  இது மூன்றாம் நிலை.  இதைத் தீ மூட்டுவது என்கிறார் அகத்தியர்.  இந்தத் தீ உடலில் வாசி அல்லது உயிர்ச்சக்தியை எழுப்பி அதனை சுழுமுனை நாடியில் பயணிக்கச் செய்கிறது.  இவ்வாறு மேலே எழும் உயிர்ச்சக்தி குருதலம் எனப்படும் ஆக்ஞையை அடைகிறது.  அப்போது அங்கே தீபம் எனப்படும் ஆத்மா ஜோதி தென்படுகிறது.  இதுவே நான்காம் நிலை.

2 comments:

  1. A humble request to the readers, Comments on the whether these verses are grammatically correct or not will not be entertained. Only Agatthiyar has the authority to correct the words or expressions in these verses. Once again, these translations are for general information only. A yoga practitioner should know that he/she should not attempt any of these techniques without the supervision of a guru. Do not split the words as you like and give your own interpretations. As everyone should know, Siddhas emphasised on writing in simple, colloquial language that anyone will be able to understand. Please keep this mind when commenting on the verses.

    ReplyDelete
  2. Dear Miss. Ok.

    I'm sorry if you do not like my comments on Tamil grammar.


    ReplyDelete