Verse 274
கேளடா சகல சித்தும் பொசித்ததெல்லாங்
கிருபையுடன் நமக்கெனவே திருத்திக்கொண்டு
நாணடா வொருமித்துக் கவனிப்பார்க்கு புண்ணியம்
நன்மையுடனாச்சுதென்று அறிந்துகொள்ளு
வாணடா சாஸ்திரத்தின் பயனோடப்பா
வரிசையாய்க் கோர்க்கிறதே சிரவணமாகும்
ஆணடா சாஸ்திரங்க ளெல்லாம்விட்டு
அசைந்தாடும் விருத்தி யெல்லாம் பிடித்துத் தள்ளே
Translation:
Listen son, all the actions and those that are included by them
Correcting them for our sake
For those who watch them with focus it is good fortune
Know that it is beneficial
All with the benefit of the sastra
Stringing them in a line is sravanam (hearing)
Leaving all the sastra
Push away the extensions that dance around.
Commentary:
The process of knowing something follows the three steps of sravanam or hearing about knowledge, mananam or internalizing it and nidhidhyasanam or contemplation. These three are not sequential processes but one that occurs continuously. Merely hearing the knowledge is not sufficient, one has to clear his doubts and internalize it. These two steps are done in the presence of a teacher. The last step is contemplation. This makes the person realize what he learnt. Hence, Agatthiyar is saying that one has to watch all the sitthu or action. This includes both physical and mental actions. One has to watch them carefully to understand their inner significance. One has to obtain knowledge as if one is stringing beads. Knowledge is presented in a sequence as it reflects the thought of the one who composed that source. As thought procedes in a sequence it is like stringing beads. By understanding the sastra one will give up vritti or modifications, extensions or extrapolations as these give erroneous vision and ideas.
அறிவைப் பெறுவதற்கான படிகள் மூன்று என்று நூல்கள் கூறுகின்றன. அவை சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்பவை. சிரவணம் என்றால் காதால் கேட்பது. வேதாந்த சாத்திரங்களை குருமுகமாக அறிவது சிரவணம். இதனை அடுத்து, தான் கேட்டவற்றில் எழும் சந்தேகங்களைக் கேள்விகளை எழுப்பித் தீர்த்துக்கொள்வது மனனம். இவ்வாறு அந்த அறிவு கேட்பவரது மனதுள் படிகிறது. இதனை அடுத்து வருவது நிதித்தியாசனம், தான் கேட்டவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் எண்ணி அந்த அறிவை அனுபவமாக, உணர்வாக மாற்றுவது. இவை மூன்று படிகள் என்று கூறப்பட்டாலும் ஒன்றோடொன்று தொடர்ந்து நடைபெறுகின்றன. அதனால்தான் அகத்தியர் எல்லா சித்துக்குகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்கிறார். இதனால் ஒருவர் அவற்றின் மூலம் செயல்படும் சக்திகளையும் அவற்றின் உண்மைப் பொருளையும் புரிந்துகொள்ளலாம். அதனை அடுத்துமணியைக் கோர்ப்பதைப் போல அறிந்துகொள்ள வேண்டும். அறிவு என்பது ஒன்றிலிருந்து மற்றொன்று பிறப்பது அதனால்தான் அது மணிகளை நூலில் கோர்ப்பதுடன் ஒப்பிடப்படுகிறது. இவ்வாறு சாத்திரங்களைச் சரியாகப் புரிந்துகொண்டால் ஒருவர் விருத்திகள் எனப்படும் விரிவுகளைத் தள்ள முடியும், இந்த விருத்திகள் தேவையற்ற கர்மங்களைத் தோற்றுவிக்கின்றன, அதன் விளைவுகளை ஒருவர் சந்திக்கவேண்டியதாகிறது.
No comments:
Post a Comment