Verse 287
பாரப்பா மாத்திரைதான் முப்பத்திரண்டு
பரிவாக பூரிப்பாய் மூலத்துள்ளே
சாரப்பா மாத்திரைதான் அறுபத்தினாலு
சங்கையுடன் கும்பித்துப் பாரு பாரு
காரப்பா மாத்திரைதான் பதினாறாக
கனிவாக ரேசிப்பாய் தவுட்டாமல்
நேரப்பா இம்முரையைப் பதனம்பண்ணி
நேர்மையுடன் பிரம்மதல மறிந்து ஓதே
Translation:
See son, the time is thirty two (time to snap a finger)
Perform pooraka in the muladhara
The time is sixty four
Remain in kumbaka and see
The time is sixteen
You may perform rechaka for this time
By practicing this method
Learn about the locus of brahma truthfully and recite
Commentary:
Agatthiyar is describing the method for pranayama in this verse. He mentions the time period for inhalation, exhalation and cessation of breath. They are done in the order 32 (inhalation)-64 (cessation) and 16 (exhalation). This order 32-64-16 is the right method to reach the locus of Brahman or the point where limited consciousness meets supreme consciousness. Tirumular describes pranayama in his Tirumandiram verse 5 tantiram 3 section 5 titled pranayama. There the time periods he has given for rechakam and poorakam are reversed. To understand this contradiction one has to understand the word “vaamam” in that verse. It means reverse or opposite. Thus, the timescale that Tirumular describes is the same as Agatthiyar’s.
இப்பாடலில் அகத்தியர் பிராணாயாமத்தின் அளவுகளை விளக்குகிறார். பூரகம் அல்லது உள்மூச்சு முப்பத்திரண்டு மாத்திரைகளுக்கும் கும்பகம் அறுபத்து நான்கு மாத்திரைகளுக்கும் ரேசகம் பதினாறு மாத்திரைகளுக்கும் செய்ய வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இந்தப் பாடல் திருமந்திரப்பாடல் எண் 5 தந்திரம் 3 பகுதி 5 பாடலை நினைவுக்குக் கொண்டுவருகிறது. அப்பாடலில் திருமூலர் பூரகம் ரேசகம் ஆகியவற்றின் கால அளவுகளை மாற்றித் தந்துள்ளார். அதாவது பூரகம் பதினாறு மாத்திரை அளவுகளும் ரேசகம் முப்பத்திரண்டு மாத்திரை அளவுகளும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இந்த வேறு பட்டைப் புரிந்துகொள்ள ஒருவர் அப்பாடலில் உள்ள “வாமம்” என்ற சொல்லைப் பார்க்க வேண்டும். இந்தச் சொல் எதிர்மறை என்று பொருள்படும். இவ்வாறு அகத்தியரும் திருமூலரும் பிராணாயாமத்துக்கு ஒரே கால அளவுகளைத்தான் கூறியுள்ளனர்.
sir can please throw some light on pranayam said in geetha
ReplyDeleteDear Madam,
ReplyDeleteI have gone through your Blog. It's excellent.
I have a doubt in this song, please do clarify the same.
In Bogar 7000 - volume 1, song 312, it has got a different Time period viz, Pooragam 16 Maathirai, Kumbakam 64 and Resakam 32.
Please clarify.
Or Please give me your mail ID, so that i can forward Bogar 7000 e-book
This site gives details about the pranayama time period. Hope it helps you both
ReplyDeletehttp://www.bhagavad-gita.org/Gita/verse-04-29.html
Thanks a Lot!
Delete