Verse 283
ஆமப்பா கோமுகா சனத்தைக் கேளு
அங்கமுடன் முழங்கால்மேல் முழங்கால் போட்டு
தாமப்பா பாதம் ரெண்டில் கையையூணித்
தானிக்க கோமுகா சனமதாச்சு
நாமப்பா வீரமென்ற ஆசனத்தைக் கேளு
நாட்டமுடன் இடக்கால் மேல் வலக்கால் போட்டு
ஓமப்பா கோமுகம் போல் இருந்து கொண்டால்
உத்தமனே வீரமென்ற வுறுதிபாரே
Translation:
Yes, son, hear about Gomukhasana
Place one knee over the other
Plant the hands in the two feet
Remaining so is Gomukhasana
Listen about veerasana
Place the right foot over the left foot
If you remain like gomukham
The supreme one! It is called veeram.
Commentary:
Agatthiyar is describing gomukhasana and veerasana. Gomukha asana or the asana which resembles the face of a cow involves place one knee over the other and planting the hand over the feet. If the order of placement is right foot over the left it is called veerasanam.
While the gomukha asana is similar to the asanas that several school describe the veera asana seems to be different.
அகத்தியர் இப்பாடலில் கோமுகாசனத்தையும் வீராசனத்தையும் விளக்குகிறார். கோமுகம் என்றால் பசுவின் முகம். அதற்கு ஒரு யோகி தனது ஒரு முழங்காலை மற்றதன் மீது வைத்து கைகளை பாதங்களின்மேல் ஊன்றிக்கொள்கிறார். இதன் ஒரு வகையே வீராசனம் என்பது போல அகத்தியர் இந்த கோமுக ஆசனத்தில் வலது காலை இடது காலின் மீது இட்டால் அது வீராசனம் என்கிறார். பல யோக பள்ளிகள் வெவ்வேறு விதத்தில் செய்யப்படும் ஆசனங்களை வீராசனம் என்று அழைக்கின்றன.
No comments:
Post a Comment