Wednesday, 20 January 2016

280. Purpose of kuligai- kaya siddhi

Verse 280
காணவே இருவகையும் பார்ப்பானாகில்
கலங்கிமனஞ் சுவரில்லாச் சித்திரம்போலாம்
பூணவே அடிப்படையை வைக்குமுன்னே
பூட்டுகின்ற குளிகைக்கு மொக்கு மொக்கு
பேணவே காயசித்தி பண்ணுமுன்னே
பேறான சதுர்யுகங் கண்ட பேர்க்கும்
தேணவே செடத்தோடே முத்தி காணான்
சொக்கினபின் முத்திஎன்றே சொல்லுங் காணே

Translation:
If he sees both types
The mind will become unclear, it will be as if painting without the wall
Before placing the foundation
Attempt for the herbal preparation (kuligai) which locks it
Before performing the kayasiddhi
Even those who have lived for all the four eons
Will not be able to attain mukthi with the body
Say that mukthi is only after enchantment.  See it.

Commentary:
Agatthiyar does not say clearly what he means by two types.  It may mean the body and the soul as he says that if both are not present it will be like attempting to draw without a base, the background wall.  Here, the background wall is the body and the painting is the experiences during kundalini yoga.  Thus, this verse highlights an important Siddha philosophy that the body is an essential tool in the process of attaining higher states of consciousness.  This is similar to Tirumular saying “udampai varaltthen uyir valartthene”- I nurtured the body and thus the soul.
Agatthiyar explains this by saying that the body should also be in such a state that higher states of consciousness can be experiences.  The siddhas call this kaya siddhi.  They recommend certain herbal preparations called kuligai for that.  The kuligai locks the spiritual experiences and prevents them from being fleeting in nature.  Hence, Agatthiyar says that without the help of the kuligai one cannot attain mukhti even if one lived for four eons practicing the yoga.  Hence, one has have the base, the body well-prepared before attempting kundalini yoga.

 “Sukkuthal” or enchantment has been mentioned in several siddha verses. Agatthiyar describes this as sokki mella erudhan- climbing slowly with enchantment.  It is a state called aanandha aaspadham which occurs at the pinnacle of Samadhi.  Only when a yogin crosses this state will he attain liberation.

இருவகை என்று அகத்தியர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக இல்லை.  அது உடலையும் உயிரையும் குறிக்கலாமோ என்ற எண்ணம் அடுத்துவரும் வரியால் ஏற்படுகிறது.  இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது சுவரில்லாமல் சித்திரம் வரைவதைப் போன்றது என்கிறார் அவர்.  இங்கு சுவர் என்பது உடல், சித்திரம் என்பது உயிர்.  உடலில்லாமல் குண்டலினி யோக அனுபவங்களையும் முடிவில் முத்தியையும் பெறமுடியாது என்பது சித்தர்களின் தத்துவம்.  அது திருமூலர் “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று கூறியதைப் போல உள்ளது.  அதனால்தான் சித்தர்கள் காயசித்தியை முக்கியமான ஒரு படியாகக் கருதுகின்றனர்.  அதற்கு உதவுவது குளிகைகள் எனப்படும் தயாரிப்புக்கள்.  குளிகைகள் ஆன்மீக அனுபவங்களை தற்காலிகமானவையாக இல்லாமல் நிரந்தரமானவையாக மாற்றுகின்றன.  அதையே அகத்தியர் பூட்டுதல் என்கிறார்.  அதனால், குளிகையின் உதவியில்லாமல் ஒருவர் நான்கு யுகங்கள் வாழ்ந்து யோகத்தை மேற்கொண்டாலும் அவரால் முக்தியைப் பெறமுடியாது என்கிறார் அவர்.

இதனை அடுத்து அவர் “சொக்கினால்தான் சொர்க்கம்” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.  சொக்குதல் என்ற நிலையைப் பல சித்தர் பாடல்களில் காணலாம்.  அது ஆனந்த ஆஸ்பதம் என்ற நிலையைக் குறிக்கிறது.  இது சமாதியின் உச்சத்தில் ஏற்படுகிறது.  இந்த நிலையைக் கடந்தால்தான் முக்தி நிலை ஏற்படுகிறது.  அதை அகத்தியர் சொக்கி மெல்ல மேலே ஏறுவது என்கிறார்.  

No comments:

Post a Comment