Verse 275
தள்ளியுந்தன் நிழல் போலே குருவான பின்னே
சச்சிதா நந்தமயந் தானென்றெண்ணி
தெள்ளிமையாய் தெளிவுக்குச் சித்தாந்தத்தில்
சேர்ந்துகொண்டு கேட்கிறதே சிரவணமாகும்
நள்ளினமாம் பிரவிர்த்தி நிவிர்த்தி பண்ணி
நன்மையுடன் இருக்கின்ற பிரஜைகளெல்லாம்
அள்ளிமனப் பூரணமே தெய்வமென்று
அறிவிக்கும் புத்தியடா சிரவணமாமே
Translation:
After pushing away (vrtti) like your shadow and becoming enlightenend
Considering self as existence awareness and bliss (satchidananda)
To attain clarity, joining the siddhantha
And listening is sravanam.
Performing pravrithi and nivrithi
All the citizens who remain good
Are all god, the fully complete-
The discrimination that announces this is sravanam.
Commentary:
In the previous verse Agatthiyar mentioned that sravanam is obtaining textual knowledge, Vedanta. Here he explains what that knowledge will reveal. Before that we should understand the difference between Vedanta and Siddhantha. Tirumular in his Tirumandiram calls his philosophical system as Vedanta Siddhantha. Vedanta is knowledge from the Vedas or knowledge systems that one should know. However, as the Vedas present all kinds of knowledge, for example bedha (pluralistic), abedha (monistic) and bedha-abhedha or qualified monistic views one has to choose the branch of these knowledge one wishes to follow. This is siddhantham. In this verse Agatthiyar describes the Siddhantham. After hearing from the Guru about Vedanta one has to pick the siddhantha, join that branch and listen to knowledge specific for that standpoint. After that one has to perform “pravriti and nivriti”. The word pravriti= pra+vriti or towards vriti, expansion outwards. Nivriti on the other hand is ni+vriti or not going outward by inward, mental focus. The mind expands as the outside word and focusses as the single point. Thus when one understands the truth about the outside world one realizes the forces that cause pravriti and nivriti. One understands that it is the One, Supreme Being who appears as many lifeforms outside. This is pravriti and nivriti. Agatthiyar says that one will understand that all the citizens are god, the poorna or fully complete. Thus watching the pravriti one reaches nivriti. Agattiyar says that this is sravanam. One attains this knowledge through buddhi or distinction of truth.
முந்தைய பாடலில் அகத்தியர் சிரவணம் என்பது நூலறிவைப் பெறுவது என்று கூறினார். இங்கு அவர் அந்த அறிவு என்ன என்று கூறுகிறார். இதற்கு நாம் வேதாந்தம் என்றால் என்ன சித்தாந்தம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். வேதாந்தம் என்பது நூல்கள் அளிக்கும் அறிவு. ஆனால் வேதங்களும் சாத்திரங்களும் பலவித கருத்துக்களை வெளியிடுகின்றன. உதாரணமாக வேதத்தில் பேத வாதம் எனப்படும் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரு வஸ்துக்கள் என்ற வாதம் காணப்படுகிறது. வேறொரு இடத்தில் அவை இரண்டல்ல ஒன்றுதான் என்ற அபேத வாதம் உள்ளது, மற்றொரு இடத்தில் பேத அபேத வாதம் விவரிக்கப்படுகிறது. இந்த மூன்று வாதங்களில் ஒரு தான் பின்பற்றப் போகும் வாதம், சித்தாந்தம் எது என்று தேர்வு செய்யவேண்டும். பின் அந்த சித்தாந்தத்துக்கான அறிவைப் பெறவேண்டும். இதைத்தான் திருமூலர் வேதாந்த சித்தாந்தம் என்று கூறுகிறார்.
அதன்பிறகு ஒருவர் பிரவிருத்தி நிவிருத்தியைச் செய்ய வேண்டும் என்கிறார் அகத்தியர். பிர+விருத்தி என்பது விருத்தியை அதிகரிப்பது, ஒன்றைப் பலவாக்குவது. நி+விருத்தி என்பது பலவற்றை ஒன்றாக்குவது. பிரவிருத்தியே ஒன்றான பரம்பொருளை பல உயிர்களாகக் காட்டுகிறது. அந்தப் பல்லுயிர்களும் ஒன்றான இறைசக்தியே என்று புரிந்துகொள்வது நிவிருத்தி. அதைத்தான் அகத்தியர் அடுத்த வரியில் பிரஜைகள் அனைவரும் ஒன்றான பூரணம் எனப்படும் இறைவனே என்று புரிந்துகொள்வதே சிரவணம் என்கிறார். இதை ஒருவர் புத்தி எனப்படும் பகுத்தறிவின் மூலம் அறிந்துகொள்கிறார்.
No comments:
Post a Comment