Verse 121
கேளப்பா பராபரமாய் நின்ற சோதிக்
கிருபையுடன் சிவன் படைக்க நினைந்தபோது
மாளப்பா வல்ல பரந்தன்னிலேதான்
வளவான சிவமதுதான் உண்டாச்சப்பா
மேலப்பா சிவமதிலே சத்தியுண்டாய்
விளங்கி நின்ற சத்தியிலே மைந்தாகேளு
சூளப்பா சதாசிவந்தான் துலங்கிநின்ற
சொற்பெரிய சதாசிவத்தின் மயேசுரந்தானே
Translation:
Listen son,
the effulgence that remained as Paraparam
When it
decided, with mercy, to create Siva
In the capable
Param
Occurred Sivam.
In the
superior Sivam Sakthi occure
In the Sakthi,
listen son,
The Sadasivam occurred
In the
indescribable Sadasivam the Maheswaram.
Commentary:
Agatthiyar
describes the order of creation in this verse which is similar to that seen in
Tirumular’s Tirumandiram. The original
state, space, effulgence decides to create Sivan. At that point Sivam or consciousness occurred
and from Sivam the order of emergence, Sakthi, Sadasivam and Maheswaram occurred. These states represent various principles. We will see further details about these states in the next verse.
ஏகமாக வெளியாக ஒளியாக இருந்த பராபரம் சிவனைப் படைக்க
நினைத்தபோது முதலில் பரத்தில் சிவம் அல்லது பரவுணர்வு தோன்றியது. அதிலிருந்து சக்தி, சதாசிவம், மகேஸ்வரம் என்று நிலைகள் ஒவ்வொன்றாகத் தோன்றத் தொடங்கின. இந்த நிலைகள் பல்வேறு தத்துவங்களைக் குறிக்கின்றன. இவற்றைப் பற்றிய விவரங்களை அடுத்த பாடலில் காண்போம்.
No comments:
Post a Comment