Verse 116
கேளப்பா
புலத்தியனே நன்றாய்க் கேளு
கிருபையுடன் உலகமது ஜனிக்கு முன்னே
காலப்பா பரமிருந்த கருணை தன்னைக்
காரணமாய்க் குருவருளால் கருதக் கேளு
ஆளப்பா குருபதந்தான விஸ்வரூபம்
அவருடைய வடிவு ஒளி அடிபாதாளம்
வாளப்பா முடியதுதான் அண்டத்துச்சி
மகத்தான பர சொரூப வடிவுகாணே
Translation:
Listen
Pulatthiya! Listen well
Before the
world emerged
The Param
remained mercifully as prana
Listen, due to
grace of guru, to consider it as the cause
The guru padam
is all encompassing form (visvaroopam)
The
effulgence, the foot at the netherland
The head- at
the top of the universe (andam)
See the magnificient
form of Para.
Commentary:
Science and philosophy have been trying to find the
origin of the universe. Science calls it
as T0 or the time just before the world emerged and time started to tick. Agatthiyar describes the state of singularity at this T0. He says that before the world emerged as we
know it the only entity that existed was Param.
Its form was that of prana or kaal. It was the original cause with an all
encompassing form-visvaroopa. The first
name that is eulogized in Vishnu sahasra nama or thousand names of Vishnu is “visvam”. There is elaborate commentary on this
name. The visvaroopa which included
everything was in the form of light. The feet of this light were at the bottom
and its head at the top of the universe.
விஞ்ஞானமும் ஆன்மீகமும் உலகம் எவ்வாறு தோன்றியது, அது
தோன்றுவதற்கு முற்பட்ட நிலை யாது என்ற கேள்விகளைப் பல காலமாகக் கேட்டுவருகின்றன. இப்பாடலில் அகத்தியர் உலகம் தோன்றுவதற்கு முன்
இருந்த நிலையை விளக்குகிறார். இந்த உலகம் பிறப்பதற்கு முன் இருந்த ஒரே வஸ்து பரம். அது கால் அல்லது உயிர்ச்சக்தியான பிராணனாக
அனைத்துக்கும் காரணமாக இருந்தது. அதன்
உருவம் விஸ்வரூபம் அல்லது அனைத்தையும் தன்னுள் அடக்கிய உருவம். விச்வம் என்ற சொல் இறைவனின் முதல் நாமமாக விஷ்ணு
சகஸ்ரநாமத்தில் தோன்றுகிறது. இந்தப்
பெயருக்கு உரையாசிரியர்கள் விரிவாக விளக்கமளித்துள்ளனர். இறைவனின் இந்த விஸ்வரூபத்தின் அடி
பாதாளத்திலும் முடி அண்டத்து உச்சியிலும் உள்ளன என்றும் அவன் ஒளியுருவாக
இருக்கிறான் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment