Monday, 20 July 2015

127. Creation of manu or man

Verse 127
கேளப்பா லோகமதைப் படைத்த பின்பு
கிருபையுடன் பரமசிவன் மனுவுண்டாக்க
கேளப்பா சத்திதனை வரவழைத்துக்
கெணிதமுடன் மனுப்படைக்கக் கிருபை செய்தார்
கேளப்பா பராபரையாள் கிருபை பெற்றுக்
கெணிதமுடன் சதாசிவத்துக் குபதேசித்தான்
கேளப்பா சதாசிவனும் கிருபை பெற்றுக்
கெதியுடைய மயேஸ்பரருக்கு ஈந்தார் பாரே.

Translation:
Listen son, after creating the world
Paramasiva, with mercy, to create man
Called Sakthi
And blessed her to create Manu (man)
Paraaparai, receiving the kripa (grace)
Performed upadesa to Sadasiva
Sadasiva, receiving the grace,
Performed upadesa to Maheswara

Commentary:
While Siva created the worlds and the sun it was Sakthi who initiated the creation of manu or man.  She did this through offering upadesa to Sadasiva who performed the upadesa to Maheswara. While creation of the seven worlds is an upward process starting from muladhara, creation of man, the limited consciousness, is a downward process descending from Siva, Sakthi to Maheswara.


ஏழு உலகங்களையும் படைத்த பிறகு பரமசிவன் மனு எனப்படும் மனிதனைப் படைக்க விரும்பினார்.  அதற்காக அவர் சக்தியை அழைத்து பராபரையான அவளுக்கு உபதேசம் செய்தார்.  சிவனின் கிருபையைப் பெற்ற சக்தியும் சதாசிவனுக்கு உபதேசம் செய்தாள்.  சதாசிவன் மகேஸ்வரனுக்கு உபதேசம் செய்தார்.  இவ்வாறு ஏழு உலகங்களைப் படைப்பது என்பது மூலாதாரத்திலிருந்து, கீழிருந்து, மேலே செல்வதாக இருக்க மனிதனை, அளவுக்குட்பட்ட உணர்வைப் படைப்பது என்பது மேலிருந்து கீழிறங்குவதாக, சிவனிலிருந்து மகேச்வர நிலைக்கு வருவதாக உள்ளது. 

126. Aditya and seven worlds

Verse 126
காணவே அண்டரவி யதுதான் மைந்தா
காசினியில் அன்புடையோர் அநேகஞ்சொல்வார்
தோணவே கண்டபடி அண்டந்தன்னில்
தொகுத்துரைக்க மாட்டார்கள் சுணங்கச்சாதி
பேணவே அண்டமதில் மனுவுண்டாக்கும்
பெருமைதனைக் குருவருளால் பேசுவேன் கேள்
பூணவே மேலேழு லோகந் தன்னை
புத்தியுடன் விதம்விதமாய்ப் படைத்தார் கேளே

Translation:
Son, that is the son of the universe
The beloved in the world will describe it elaborately
The manner in which it is seen in the world
As the brilliance, the axis etc, they will not summarize it,
The great way of creating the Manu (human)
In the world, I will talk about it by Guru’s grace, hear it.
The variety of seven worlds above
He created by intellect.  Hear it.

Commentary:
As a continuation of the previous verse Agatthiyar says that the Lord created the sun we see in the world and the learned merciful souls will describe it in detail.  However, they will not say the multiple ways in which the sun is perceived.  Actually , sun in this context describes cconsciousness.  Tirumular in his Tirumandriam tantiram 7 section 22 describes anda aadhitthan or the sun of the universe in details and indicates that it is really the power that emerges during yoga.  He says that this aadhitthya emerges between water and fire thus making one realize that the locus from which this emerges is between the svadihstana and manipuraka. 

Agatthiyar says that the seven worlds are created by buddhi or intellect.  Puranas mention the names of these seven worlds as bhu, bhuvar, suvar, mahar, tapa, jana and satyam.  They are actually states of consciousness in the ascending order located at various zones in the body starting from muladhara.


முந்தைய பாடலின் தொடர்ச்சியாக அகத்தியர் இறைவனே சூரியனைப் படைத்தான், அந்த சூரியனைத்தான் நாம் அண்ட ஆதித்தனாகக் காண்கிறோம் என்கிறார் இப்பாடலில்.  அன்புடைய உயராத்மாக்கள் இதை விரிவாக விளக்குவார்கள் ஆனால் அவர்களும் அந்த சூரியன் எவ்வெவ் வகையில் இங்கு காணப்படுகிறான் என்பதைக் கூறமாட்டார்கள் என்கிறார் அவர்.  இப்பாடல் திருமூலரின் திருமந்திரம் தந்திரம் ஏழு பகுதி இருபத்திரண்டில் விளக்கப்பட்டுள்ள  அண்ட ஆதித்தனைக் குறிக்கும்.  இந்த ஆதித்தன் இறைவனே என்று பல பாடல்களில் விளக்கிய பிறகு அது உண்மையில் குண்டலினி யோகத்தில் எழும் விழிப்புணர்வு என்று கூறுகிறார் திருமூலர்.  அந்த ஆதித்தன் நீருக்கும் நெருப்புக்கும் இடைப்பட்ட இடத்தில் தோன்றுகிறது என்று அவர் கூறுவது இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறது. 


ஏழு உலகங்களும் புத்தியினால் படைக்கப்பட்டன என்று கூறுகிறார் அகத்தியர்.  இந்த உலகங்கள் பூ, புவர், சுவர், மகர், தப, ஜன மற்றும் சத்தியம் என்கின்றன புராணங்கள்.  இந்த உலகங்கள் உண்மையில் ஏழு உணர்வு நிலைகள்.  அவற்றை யோகத்தில் அனுபவிக்கலாம்.  இவை நமது உடலில் மூலாதாரத்திலிருந்து மேலே சஹஸ்ராரம் வரை பரவியுள்ளன.  

Thursday, 16 July 2015

125. creation of other elements and the sun

Verse 125
பாரான திருமாலைப் பார்க்கும்போது
பதிவான அகண்ட மேகம் படைத்து நின்றார்
ஆரான பிரம்மனையும் நோக்கும்போது
அளவற்ற பூமிதனைப் படைத்து நின்றார்
நேரான சத்திதனைக் கண்ணால் மேவி
நிஜமான சூரியனைப் படைத்து நின்றார்
பேரான சிவமதுவும் பதியாய் நின்ற
பெருமையுடன் எழுவரதி காரங் காணே

Translation:
When he (Paramasiva) looked at Thirumal the world
He created the wide clouds
When he looked Brahma
He created the limitless earth
Looking at the Sakthi
He created the true Sun
The Sivam remained as
The locus glorious. See the authority of the seven.

Commentary:
In the previous verse Agatthiyar explained that space was created by Sadasiva, Maheswara created air principle and Rudra created fire.  In this verse he mentions that Vishnu created the clouds that led to water principle and Brahma created the earth.  Paramasiva who caused these creations did so by looking at Vishnu.  Then he looked at Sakthi and Sun was created.  Thus, Sun was created directly by Paramasiva.  After the creation of the elements and hence their qualities Paramasiva stood as the locus that supports all these principles. 
Paramasiva is called akaasha.  Akaasha is that which has light and space.  Thus Paramasiva is veLi oLi.  Akaasha is that which gives space for everything.  Paramasiva is the substratum that supports everything, material and non material in nature.  Agatthiyar is beginning to describe the authority that the seven deities, beginning with Sadasiva have, the duties they perform.

முந்தைய பாடலில் அகத்தியர் வானம் சதாசிவனாலும் காற்று மகேசுவரனாலும் தீ உருத்திரனாலும் ஏற்படுத்தப்பட்டன என்றார்.  இப்பாடலில் அவர், விஷ்ணு நீர்த்தத்துவத்தை உருவாக்கும் மேகத்தை ஏற்படுத்தினார் என்றும் பிரம்மா பூமி தத்துவத்தைப் படைத்தார் என்றும் கூறுகிறார்.  பரமசிவனார் இவையனைத்தையும் விஷ்ணுவைப் பார்த்து படைத்தார்.  அடுத்து அவர் சக்தியைப் பார்த்தார். அதனால் சூரியன் தோன்றியது.  இவ்வாறு சூரியன் பரமசிவனால் நேரடியாகப் படைக்கப்பட்டது.  இவ்வாறு பூதங்களையும் சூரியனையும் படைத்த பிறகு பரம சிவன் அவையனைத்தையும் தாங்குபவராக நின்றார். 
பரமசிவனை ஆகாசம் என்று சித்தர்கள் அழைக்கின்றனர்.  ஆகாசம் என்பது ஒளியும் வெளியும் கொண்டது.  இவ்வாறு பரமசிவனார் வெளி ஒளியாக இருக்கிறார்.  ஆகாயம் அனைத்துக்கும் இடமளிப்பதாக அனைத்தையும் தாங்குவதாக உள்ளது.  பரமசிவனும் அனைத்தையும் தன்னில் தாங்குகிறார்.

இதனை அடுத்து அகத்தியர் ஏழு தேவதைகளின் அதிகாரத்தையும் விளக்கப்போகிறார்.

Wednesday, 15 July 2015

124. Creation of elements-1

Verse 124
காணவே பரமசிவன் வானுண்டாக்கக்
கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேவி
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும்போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மயேசுரனைப் பார்க்கவேதான்
உருமியிடி வாய்வு தனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்கத்
துலங்கு மின்னல் அக்கினியும் படைத்தார் பாரே

Translation:
To create the sky, Paramasiva
Looked at Thirumaal who is merciful.
When he looked at Sadasivam
He created the greate universe and buddhi
To firmly plant it, when he looked at Maheswaran
He created the drum-like thunder and air
When he looked at Rudra
He created lightning and fire.

Commentary:
Agatthiyar is explaining how the five elements were created.  Paramasiva wished to create the universe with the five elements.  So he looked at Vishnu and Sadasiva.  Sadasiva created the universe and the sky along with buddhi or intellect, one of the modifications of mind.  When Paramasiva looked at Maheswara, Maheswara created the air principle and thunder
When he saw Rudra, Rudra created fire and lightning.
It is interesting that creation happened through Vishnu, Sadasiva, Maheswara and Rudra while traditionally it is believed that Brahma is the authority for creation.

ஐம்பூதங்களாலான உலகைப் படைக்க விரும்பிய பரமசிவன் திருமாலைக் கண்ணால் மேவி சதாசிவனைப் பார்த்தார் என்றும் அப்போது சதாசிவன் புத்தியையும் வானத்தையும் உலகத்தையும் படைத்தார் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  வான் என்னும் முதல் பூதம் பிற பூதங்களுக்குத் தன்னில் இடமளிக்கிறது.  அதனால்தான் அகத்தியர், சதாசிவன் அண்டத்தைப் படைத்தார் என்கிறார். 
இதனை அடுத்து பரமசிவனார் மகேசுரனைப் பார்க்க அவர் காற்றுத் தத்துவத்தையும் இடியையும் படைத்தார்.  அவருக்கு அடுத்து பரமசிவனார் உருத்திரனைப் பார்க்க அவர் தீ தத்துவத்தையும் மின்னலையும் படைத்தார் என்கிறார் அகத்தியர்.

பொதுவாக படைப்புக்கடவுள் பிரம்மா என்று கூறுவது வழக்கம்.  இப்பாடலில் அகத்தியர் படைப்பு திருமாலின் உதவியுடன் நடந்தது என்று கூறுகிறார்.  மால் என்பது மாயை என்பதைக் குறிக்கும்.  இதனால் படைப்பு மாயையின் உதவியால் நடந்தது என்று அகத்தியர் கூறுகிறார் என்று தோன்றுகிறது. 

Sunday, 12 July 2015

123. The Paraparam remained as all pervasive jyothi

Verse 123
பாரப்பா அனுக்கிரகம் செய்துநல்ல
பரமான பராபரந்தான் எங்குந்தானாய்
நேரப்பா நின்ற பரஞ் சோதியாகி
நிறைந்ததொரு சோதியாய் நின்ற போது
சாரப்பா முன் உதித்த எழுவர் தானும்
சங்கையுடன் அவர்கள் செய்யும் முறமைதன்னை
யாரப்பா அறிவார்கள் புலத்தியா கேள்
ஆதிதொடுத்து அந்தம்வரை அறிந்துகாணே

Translation:
See son, Blessing well so,
The good Param which is Paraparam
That which remains everywhere as Self, as Supreme effulgence (paramjyothi)
When it remained as fully complete brilliance
The seven who emerged
Their actions that they perform efficiently
Who knows them, Pulatthiya listen,
Know from the beginning to end.

Commentary:
After creating the seven active entities the Paraparam, the supreme effulgence remained in this world as light or jyothi.  Following its blessing of authority the seven started functioning.  Agatthiyar will be describing their actions next.


சிவன், சக்தி, சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மன் என்ற எழுவரையும் படைத்த பிறகு பராபரம், பரஞ்சோதி எங்கும் நிறைந்த சோதியாக நின்றது.  அதனை அடுத்து அது அளித்த அனுகிரகத்தால் எழுவரும் தத்தம் செயல்களை செய்யத்தொடங்கினர்.

122. Paramasiva granted the seven the authority

Verse 122
தானான மயேஸ்வரத்தில் உருத்திரன்தான்
சங்கையுள்ள ருத்திரனிற் திருமால் தோன்றி
கோனான திருமாலில் அயனார் தோன்றிக்
குவிந்தெழுந்த எழுவருந்தான் கூர்மையாக
வானான பராபரத்தை அறியமாட்டார்
மகத்தான பரந்தானே பராபரமாய் நிற்குந்
தேனான பரமசிவம் அதிகாரத்தைத்
தீர்க்கமுடன் அனுக்கிரகஞ் செய்தார் பாரே

Translation:
In the self, the Maheswaram, Rudran occurred
In the great Rudra occurred Thirumal
In the king, Tirumaal occurred Brahma.
The seven that occurred through focusing and emerging
None of them know the space, the Paraparam.
The glorious Param stands verily as the Paraparam
The honey-like Paramasivam, granted
The authority.

Commentary:
Following the emergence of Maheswaram, Rudran, Thirumaal or Vishnu and Brahma emerged.  Thus, the seven, Sivam, Sakthi, Sadasivam, Maheswaram, Rudran, Vishnu and Brahma emerged from the origin, the Param whose original state is Paraparam.  These seven who emerged from Param are ignorant of the original singularity, the Paraparam.  After the creation of the seven, Paramasiva, the Param granted them authority for various functions. The Paraparam is called “vaan” or sky.  This term means space.  Just as how space supports everything and gives a locus for everything Paraparam supports and provides a locus for various lower principles.


மகேசுவரத்திலிருந்து ருத்திரனும் ருத்திரனிலிருந்து விஷ்ணு அல்லது திருமாலும் திருமாலிலிருந்து பிரம்மனும் தோன்றினார்கள் என்று கூறும் அகத்தியர் அந்த எழுவரும்- சிவன், சக்தி, சதாசிவன், மகேசுவரன், ருத்திரன், விஷ்ணு மற்றும் பிரம்மன், ஆதியான பராபரத்தை அறியமாட்டார்கள்.  பரமே பராபரமாக நின்றது என்றும் அந்த பரமான பரமசிவம் இந்த எழுவருக்கும் அதிகாரத்தை அனுகிரகித்தது என்கிறார் அகத்தியர். பராபரத்தை வான் என்கிறார் அகத்தியர். வானம் என்பது ஆகாயமாகும்.  இது பூத ஆகாசமல்ல.  பூத ஆகாசம் எவ்வாறு பிற பூதங்களான காற்று, நெருப்பு ஆகியவற்றுக்குத் தன்னில் இடமளிக்கிறதோ அதே போல் பராபரம் பிற தத்துவங்களுக்குத் தன்னில் இடமளிக்கிறது.  

121. Order of emergence

Verse 121
கேளப்பா பராபரமாய் நின்ற சோதிக்
கிருபையுடன் சிவன் படைக்க நினைந்தபோது
மாளப்பா வல்ல பரந்தன்னிலேதான்
வளவான சிவமதுதான் உண்டாச்சப்பா
மேலப்பா சிவமதிலே சத்தியுண்டாய்
விளங்கி நின்ற சத்தியிலே மைந்தாகேளு
சூளப்பா சதாசிவந்தான் துலங்கிநின்ற
சொற்பெரிய சதாசிவத்தின் மயேசுரந்தானே

Translation:
Listen son, the effulgence that remained as Paraparam
When it decided, with mercy, to create Siva
In the capable Param
Occurred Sivam. 
In the superior Sivam Sakthi occure
In the Sakthi, listen son,
The Sadasivam occurred
In the indescribable Sadasivam the Maheswaram.

Commentary:
Agatthiyar describes the order of creation in this verse which is similar to that seen in Tirumular’s Tirumandiram.  The original state, space, effulgence decides to create Sivan.  At that point Sivam or consciousness occurred and from Sivam the order of emergence, Sakthi, Sadasivam and Maheswaram occurred.   These states represent various principles.  We will see further details about these states in the next verse.


ஏகமாக வெளியாக ஒளியாக இருந்த பராபரம் சிவனைப் படைக்க நினைத்தபோது முதலில் பரத்தில் சிவம் அல்லது பரவுணர்வு தோன்றியது.  அதிலிருந்து சக்தி, சதாசிவம், மகேஸ்வரம் என்று நிலைகள் ஒவ்வொன்றாகத் தோன்றத் தொடங்கின.  இந்த நிலைகள் பல்வேறு தத்துவங்களைக் குறிக்கின்றன.  இவற்றைப் பற்றிய விவரங்களை அடுத்த பாடலில் காண்போம். 

120. Continuation of the previous verse

Verse 120
காணவே வேதநெறி இல்லாக்காலங்
கருவான சாஸ்திரம் ஆறு இல்லாக்காலம்
பூணவே உபதேசம் இல்லாக்காலம்
புண்ணிய பாவங்கள் இரண்டும் இல்லாக்காலம்
பேணவே குலநெறிகள் இல்லாக் காலம்
பெருகிநின்ற மந்திரங்கள் இல்லாக்காலம்
தோணவே சொன்னதெல்லாம் உண்டாய் நின்ற
சூக்ஷமதைச் சொல்லுகிறேன் சுகமாய்க் கேளே

Translation:
The time when the Vedic rules did not exist
The time when the essence, the six sastras did not exist
The time when the upadesa was not present
The time when good and bad fortunes (punya and papa) did not exist
The time when the kuladharma did not exist
The time when the great many mantra did not exist
The time when everything was created
I will tell you that subtlety, listen comfortably.

Commentary:
This is verse is an extension of the previous verse where Agatthiyar described the time before creation.  He lists all other entities that did not exist at that time.

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக இப்பாடலில் அகத்தியர் சிருஷ்டி தொடங்குவதற்கு முன் எவையெல்லாம் இல்லாமல் இருந்தன என்று கூறுகிறார்.  

119. The Param, the space, remained as singularity

Verse 119
என்றுமுள்ளார் அடிமுடியே ஆதியந்தம்
ஏகமவர் வடிவு வெளி யடிபாதாளம்
மன்று கதிர் சந்திரனும் இல்லாக்காலம்
அதிரும் இடி மின்மேகம் இல்லாக்காலம்
குன்றுசெடி ஆண் பெண்ணும் இல்லாக்காலம்
கூறு பஞ்ச பூத நெறி இல்லாக்காலம்
ஒன்றெனவே நிறைந்த பரம் நின்றவாறும்
ஒருவரறியாதசெயல் உண்மை காணே

Translation:
The head and foot of the one who is present eternally is the origin and terminus
His form is singularity, space.  Foot, the netherland
The time when there was no arena, sun and the moon
The time when the roaring thunder, lightning and clouds were not present
The time when hills, plants, man and woman were nonexistent
The time when the component, the five elements and their rules did not exist
The singular Param that fills everywhere remained
The maaner- no one knows, truth, see it.

Commentary:
Agatthiyar begins creation by describing the time when the world, as we know it, did not exist.  There were no elements or lifeforms.  Only the Supreme Being remained in its form, the space. Its feet marked the pathaala or the lower frontier. Param, the Supreme Being remained in its state of singularity.
சிருஷ்டியை விளக்கப் புகும் அகத்தியர் நாம் காணும் உருவத்தில் உள்ள உலகுக்கு முற்பட்ட காலத்தைக் குறிப்பிடுகிறார்.  அப்போதுசீவராசிகளோ பஞ்ச பூதங்களோ இருக்கவில்லை.  வெளியுருவான பரம் மட்டுமே எங்கும் நிறைந்திருந்தது.  அதன் அடி இருந்த இடம் பாதாளம் என்கிறார் அகத்தியர்.  பரம் தனது ஏக நிலையில் இருந்தது

118. History of the world

Verse 118

உலகம் படைத்த வரலாறு
பாரப்பா அடிமுடியுந் தேடிப்போன
பதிவான மாலயனுங் காணாரென்று
நேரப்பா வேதமுரைத் திட்ட செய்தி
நீள்புவியில் யாவர்களும் உரைத்திட்ட செய்தி
யாரப்பா அறிவார்கள் பரசொரூபம்
அந்தரங்கமான சிவ ரூபாரூபம்
காரப்பா குருவருளால் தெரிந்த மட்டுங்
கருணையுடன் சொல்லுகிறேன் என்று தானே

Translation:
The history of how the world was created
See son, Brahma and Vishnu
Who sent seeking the head and foot, did not see it
The news that Veda said
The message that was conveyed to everyone in this world
Who would know the Parasvaroopa
The esoteric subtle siva roopa arupa (formless form)
With the grace of guru, as much as I know
I will tell you with mercy.

Commentary:
The scriptures tell the whole world the history of creation of the world.  It says that Siva stood as a column of fire.  Brahma and Vishnu sought his head and feet unsuccessfully.  Agatthiyar says that while this is superficial information the actual history is something subtle, esoteric and that through the guru’s grace he will tell Pulatthiyar the actual story.


புராணங்கள் உலகம் தோன்றிய வரலாறை மேற்கூறிய லிங்கோத்பவ கதையாக உலகமக்களுக்குக் கூறுகின்றன என்றும் உண்மையில் அது மிக சூட்சுமமானது, அந்தரங்கமானது என்றும் கூறும் அகத்தியர் அதைக் குருவருளால் தனக்குத் தெரிந்த மட்டும் கூறுவதாகப் புலத்தியரிடம் சொல்கிறார்.

Saturday, 11 July 2015

117. Siva as column of flame

Verse 117
காணவே உச்சிமுடி தன்னை மைந்தா
கருவான பிரமனுமே தேடித்தேடி
தோணவே காணாமல் வந்தாரப்பா
சுகமான மாலவரும் ஏனமாகிப்
பூணவே பூமிபா தாளஞ்சென்று
புத்தியுடன் வைத்தவடிக் காணார்தானே
பேணவே மாலயனுந் தேடித்தேடிப்
பெருகிநின்ற வடிமுடியுங் காணார்பாரே

Translation:
To see the peak the top, son
The essence, Brahma, seeking it greatly
Came back without seeing it
The pleasurable Vishnu, as wild boar
Going to the netherland below the world
With buddhi, did not see the foot
Thus, Mal and Brahma searching greatly
Did not see the head or the foot.

Commentary:
Agatthiyar is describing a puranic episode where Siva remained as a column of fire.  Brahma and Vishnu tried to see his head and foot.  Both of them were not successful in their effot.
Brahma represents manas and Vishnu the buddhi or intellect.  This story indicates that one cannot realize the Divine through mind and intellect.  It is beyond sensual comprehension.

சிவன் ஒளிப்பிழம்பாக நிற்க மாலும் அயனின் அவனது அடியையும் முடியையும் தேடிப்போன புராணக்கதையை இங்கு அகத்தியர் குறிப்பிடுகிறார். பிரம்மா மன தத்துவத்தையும் விஷ்ணு புத்தி தத்துவத்தையும் குறிக்கின்றனர்.  இதனால் இறைவனை மனத்தாலும் புத்தியாலும் உணரமுடியாது என்று காட்டப்படுகிறது.     

Thursday, 9 July 2015

116. The original form at T zero

Verse 116
கேளப்பா புலத்தியனே நன்றாய்க் கேளு
கிருபையுடன் உலகமது ஜனிக்கு முன்னே
காலப்பா பரமிருந்த கருணை தன்னைக்
காரணமாய்க் குருவருளால் கருதக் கேளு
ஆளப்பா குருபதந்தான விஸ்வரூபம்
அவருடைய வடிவு ஒளி அடிபாதாளம்
வாளப்பா முடியதுதான் அண்டத்துச்சி
மகத்தான பர சொரூப வடிவுகாணே

Translation:
Listen Pulatthiya!  Listen well
Before the world emerged
The Param remained mercifully as prana
Listen, due to grace of guru, to consider it as the cause
The guru padam is all encompassing form (visvaroopam)
The effulgence, the foot at the netherland
The head- at the top of the universe (andam)
See the magnificient form of Para.

Commentary:
Science and philosophy have been trying to find the origin of the universe.  Science calls it as T0 or the time just before the world emerged and time started to tick.  Agatthiyar describes the state of singularity at this T0.  He says that before the world emerged as we know it the only entity that existed was Param.  Its form was that of prana or kaal. It was the original cause with an all encompassing form-visvaroopa.  The first name that is eulogized in Vishnu sahasra nama or thousand names of Vishnu is “visvam”.  There is elaborate commentary on this name.  The visvaroopa which included everything was in the form of light. The feet of this light were at the bottom and its head at the top of the universe.


விஞ்ஞானமும் ஆன்மீகமும் உலகம் எவ்வாறு தோன்றியது, அது தோன்றுவதற்கு முற்பட்ட நிலை யாது என்ற கேள்விகளைப் பல காலமாகக் கேட்டுவருகின்றன.  இப்பாடலில் அகத்தியர் உலகம் தோன்றுவதற்கு முன் இருந்த நிலையை விளக்குகிறார். இந்த உலகம் பிறப்பதற்கு முன் இருந்த ஒரே வஸ்து பரம்.  அது கால் அல்லது உயிர்ச்சக்தியான பிராணனாக அனைத்துக்கும் காரணமாக இருந்தது.  அதன் உருவம் விஸ்வரூபம் அல்லது அனைத்தையும் தன்னுள் அடக்கிய உருவம்.  விச்வம் என்ற சொல் இறைவனின் முதல் நாமமாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில் தோன்றுகிறது.  இந்தப் பெயருக்கு உரையாசிரியர்கள் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.  இறைவனின் இந்த விஸ்வரூபத்தின் அடி பாதாளத்திலும் முடி அண்டத்து உச்சியிலும் உள்ளன என்றும் அவன் ஒளியுருவாக இருக்கிறான் என்றும் அகத்தியர் கூறுகிறார்.   

Monday, 6 July 2015

115. Before the birth of the seven...


Verse 115
தானென்ற ஆதியந்த விளக்கந்தன்னைச்
சங்கையுடன் சொல்லுகிறேன் தயவாய்க் கேளு
வானென்ற உலகமதில் மைந்தா மைந்தா
மகத்தான் எழுவகையின் தோற்றந் தானும்
கோனென்ற ஜகமதிலே பிறக்குமுன்னே
குருவான பரமிருந்த குறியைமைந்தா
ஊனென்ற திருமுடியும் அடியுந்த தன்னை
உத்தமனே சொல்லுகிறேன் உறுதி கேளே

Translation:
I will explain about the self, the origin terminus entity
Hear about it please.
In the world, the sky, Son! Son!
The emergence of the seven types-
Before they were born in the world
Son, the signs of the way the Param, the guru remained,
The body of it- its head and feet
The Good one!  I will tell you.  Hear it with fortitude.

Commentary:
Agatthiyar says that before life emerged in this world only the Param remained.  The seven types of life forms are devas, humans, animals, those that crawl, those that live in water, birds and plants.

In Indian medicine the development of a fetus in the womb is divided into seven stages based on its movement.  They are muladhara (3 weeks), svadishtana (3-6 weeks), manipuraka (6-12 weeks), anahata (12-24 weeks), vishuddham (24-30 weeks) ajna (30-38 weeks) and sahasram (over 39 weeks) (http://movingmoon.com/node/36).  This classification is applicable in this verse where the Divine, the consciousness, the origin of everything, exists solely before these stages.

The seven may also mean the seven states, Siva, Sakthi, Sadasiva, Maheswara, Rudra, Vishnu and Brahma.  These are seven states of consciousness.  Before the emergence of these seven states only Param remained.

இப்பாடலில் அகத்தியர் உலகம் தோன்றுவதற்கு முன் ஆதியந்த வஸ்துவின் நிலையைக் கூறுகிறார்.  எழு வகைகள் தோன்றுவதற்கு முன் வானமான அது மட்டுமே இருந்தது என்கிறார் அகத்தியர்.  வானம் என்பது ஆகாயம்.  ஆகாயம் என்ற சொல் ஆ+காசம் அல்லது பரந்து விரியும் ஒளி, நிலம் என்று பொருள்படும்.  ஏழுவகை என்பது ஏழு வகையான உயிரினங்களைக் குறிக்கும்.  அவை தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள்,ஊர்வன, நீரில் வாழ்வன, பறப்பன மற்றும் தாவரங்கள்.

ஒரு குழந்தை கருவில்  ஏழு நிலைகளைக் கடந்து வெளிவருகிறது என்று இந்திய மருத்துவம் கூறுகிறது.  அவை மூலாதாரம் ( 3 வாரங்கள்), சுவாதிஷ்டானம் ( 3-6 வாரங்கள்) மணிபூரகம் (6-12 வாரங்கள்) அனாஹதம் (12-24 வாரங்கள்) , விசுத்தம் (24-30 வாரங்கள்), ஆக்ஞை (30-38 வாரங்கள்) சகஸ்ராரம் (39 வாரங்களுக்கு மேல்)  (wwwlmovingmoon.com/node/36)  ஏழு வகைத் தோற்றத்துக்கு முன் பரம் மட்டுமே இருந்தது என்று கூறுவது இந்தக் கருத்திலும் பொருந்தும்.

எழுவகைத் தோற்றம் என்பது ஏழு உணர்வு நிலைகளான சிவன், சக்தி, சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு மற்றும் பிரம்மாவைக் குறிக்கலாம்.  இவை தோன்றுவதற்கு முன் பரம் ஒன்று மட்டுமே இருந்தது.

114. The aadhi antham vasthu- the origin terminus entity

Verse 114
கேளப்பா நான்முகன்மால் இந்திராதி தேவர்
கெடியான வேதமுதல் சமயத்தோரும்
தேரப்பா தேடி அறியாத வஸ்து
தெளிவான வெளியதுதான் பரமதாகும்
கேளப்பா பரமான வஸ்து தன்னைக்
கிருபையுடன் அறிவதுவே ஆதியந்தம்
கேளப்பா ஆதியந்த வஸ்து மனு படைத்த
கெதியைமிக அறிவதுவே விளக்கந்தானே

Translation:
Listen son, the entity that Brahma, Vishnu, Indra and other Devas
Those who belong to religions including the vedic
Searched and never found,
Is clear space (veli), Param.
Listen Son, knowing the entity Param,
With mercy is aadhi antham (origin terminus)
Lisen son, the way in which the origin terminus created human-
Knowing about it is its explanation.

Commentary:
Agatthiyar describes the original entity that casued the emergence of this world.  He calls it vetta veli and Param. Param, the aadhi antham or origin terminus, created manu or humans. Knowing how this occurred is the explanation for the term origin terminus as it describes how lifeforms occurred and how they terminate.


அகத்தியர் ஆதியந்தம் என்ற வஸ்துவை இப்பாடலில் வெட்டவெளி, பரம் என்று அழைக்கிறார்.  இது யாராலும் காணமுடியாத வஸ்து.  இதுவே உலகையும் மனு எனப்படும் மனிதனையும் படைத்தது.  இந்த படைப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதே ஆதியந்தம் என்பதன் விளக்கமாகும் என்கிறார் அகத்தியர்.