Saturday 9 April 2016

375. Ravi mathi and darkness


Verse 375
செய்யப்பா பூசைவிதி அந்தமாகுஞ்
சிவசிவா ஆதியந்தம் ஆர்தான்காண்பார்
மெய்யப்பா ஆதியிலே அமைந்த விதி மைந்தா
மெய்ஞ்ஞான மூலமடா ஓங்காரந்தான்
மையப்பா ஓங்கார ரவியுமாச்சு
மகத்தான மகாரமடா மதியுமாச்சு
பையப்பா ரவிமதியுந் தானே நின்று
பார்க்க இருள் கண்காட்சி தானுண்டாச்சே

Translation:
Perform son, the puja vidhi will end
Siva sivaa origin terminus, who will see it
True son, the rules established at the origin
The meijnana mulam is omkara
It became the sun (ravi)
The magnificiant makara became the moon (mathi)
The ravi and mathi together,
When seen a vision occurred in the darkness.

Commentary:
The external puja that siddhas recommend have an internal yoga component.  They start with an external worship such as Devi puja, Vairavan puja and move to internal worship of the adhara, deities that represent the adhara and the nirguna brahman.  When Agatthiyar says “the puja vidhi will end” he means the action stops and experience begins.  The distinction of action and actor disappears. 
The ravi and mathi refer the sun and moon in the macrocosm.  In the microcosm or the body, they are the pingala and ida nadi respectively. An important point to remember is that these nadi appear in the subtle body depending on the condition of the yogin.  Thus the omkara makes the muladhara firm and from it emerge the ida and pingala nadi.  These occur when the external worship ends and internal contemplation begins.  In the macrocosm, when the sun and the moon come together, it is called Amavasya.  It is a dark night.  In the microcosm the ida and pingala meet at the ajna.  It appears as darkness wherein visions appear.

சித்தர்கள் பரிந்துரைக்கும் வெளிப்பூசைகளுக்கு உள்ளே ஒரு யோகப்பொருள் உண்டு.  அவர்கள் தேவி பூசை, வைரவன் பூசை என்று வெளிப்பூசைகளில் தொடக்கி ஆதார பூசை, அந்த ஆதாரங்களைக் குறிக்கும் தெய்வங்களின் பூசை என்று தொடர்ந்து முடிவில் நிர்குண பிரம்மன் பூசை என்று முடிக்கின்றனர்.  இந்த பூசையின் முடிவில் செயல் நிலை முடிந்து அனுபவ நிலை ஏற்படுகிறது.  செயலும் செயல்புரிபவரும் முடிந்து ஒருமை நிலை ஏற்படுகிறது. 

ரவி மதி என்பவை பிரபஞ்சத்தில் சூரிய சந்திரர்களாகவும் உள்ளே பிங்கலை இடை நாடிகளாகவும் விளங்குகின்றன. இங்கு நாம் ஒன்றை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.  இந்த நாடிகள் சூட்சும உடலில் இந்த செயல்களைச் செய்யும் யோகியின் நிலையைப் பொருத்து தோன்றுகின்றன.  ரத்த நாளங்களைப் போல அவை நிரந்தரமாக இருப்பவை அல்ல. வெளி உலகில் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருப்பது அமாவாசை எனப்படுகிறது.  அன்று பூரண இருட்டு நிலவுகிறது.  அதேபோல் உள்ளே இடையும் பிங்கலையும் சந்திக்கும் இடமான ஆக்ஞா சக்கரத்தில் இருட்டு தோன்றி அதில் பல காட்சிகள் தோன்றுகின்றன.

No comments:

Post a Comment