Verse 382
தானான மூன்றுவகை ஒன்றாய் நின்று
தன்மையுடன் நீறியது காரமாச்சு
ஊனான காரமுள்ள சுன்னம்போட
உத்தமனே நவாச்சாரம் வீரம் பூரங்
கோனான குருவருளால் நாலுஞ் சேர்த்து
கூர்மையுடன் கல்வமதில் பொடித்துக் கொண்டு
வானான பீங்கானில் வைத்து மைந்தா
மகத்தான சந்திரனில் வைத்துக் காணே
Translation:
The three
types remaining as one
The water
became the kaaram
To create the
sunnam with kaaram, the body
The supreme
one! The nava aachaaram, veeram, pooram
Adding the
four together by guru’s grace
Powdering it
in the mortar carefully,
Placing it in
the sky, the porcelain
Place it
chandra and see it.
Commentary:
This is also a
step in the vaasi yogam. This talks
about turning the sukshma sareera into kaarana sareera. This occurs when the prapancha prana sakthi
is drawn into the body. The previous
verse was for the subtle body that contains the six cakra. That is body is not being turned into causal
body. Nava aachaaram may mean nine
austerities or new austerities/austerities that never lose importance. Veeram is prana and pooram is consciousness. Veeram is because of the force of prana that
flows through the body and pooram is from poornam which represents
consciousness or the soul. Now these
three components, the subtle body with the prana and the consciousness are
mixed together and placed at sky or the ajna.
This is present in the chandra mandala which extends between the
vishuddhi cakra and ajna.
இப்பாடல் சூட்சும உடலைக் காரண உடலாக மாற்றும் வழிமுறையைக்
கூறுகிறது. இது பிரபஞ்ச பிராண சக்தியை
உடலுள் இழுப்பதால் நடைபெறுகிறது. சூட்சும
உடலில் ஆறு சக்கரங்கள் உள்ளன. இவ்வுடலைக்
காரண உடலாக மாற்ற நவ ஆசாரங்களையும் வீரம் எனப்படும் பிராணனையும் (அது வீறு கொண்டு
பாய்வதால்) பூரம் எனப்படும் உணர்வையும் (பூரணமாக இருப்பது உணர்வு, ஆன்மா) கலந்து
குருவின் அருளால் அதை வான் என்னும் பீங்கானில் இடவேண்டும் என்கிறார் அகத்தியர். வான் என்பது ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கும். இவையனைத்தையும் சந்திரனில் வைக்க வேண்டும்
என்கிறார் அகத்தியர். சந்திரன் என்பது
சந்திர மண்டலத்தைக் குறிக்கும். அது
விசுத்திக்கும் ஆக்ஞைக்கும் இடையில் முகத்தின் மத்தியில் உள்ளது.