Verse 271
வடிவமாக இருப்பதுவே சந்தோஷமாகும்
வரிசையுடன் ஆகம புராணந்தன்னை
பதிவாக விட்டுவிட நின்றுகொண்டு
பத்தியுடன் வேதாந்த பொருளென்றெண்ணி
முடிவாக அத்திவுரித் தடிமேல் நின்று
முன்பின்னாயாகுகின்ற முறையாதென்று
அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேளு
அவர்சொல்லும் பூரணமு மறிந்துபாரே
Translation:
Being in that form (of bliss) is happiness
Along with Agama and Purana
Leaving them and remaining in that state
Thinking with devotion that it is the object of Vedanta,
Pealing the elephant and remaining at the lower site (muladhara)
The method of reversing top and bottom
Listen to the essence that devotees/those who are experts of the lower site say
Learn about the fully complete they say and see it.
Commentary:
Agatthiyar finishes the explanation of santhosha and begins describes how one should approach the Vedanta. He is setting the stage for Vedanta sravanam which is the next niyama.
He says that one should understand the true meaning of Agama and Purana and leave the unnecessary and distracting parts. One should consider self as the object of Vedanta.
He says that one should understand the true meaning of Agama and Purana and leave the unnecessary and distracting parts. One should consider self as the object of Vedanta.
In the next Agatthiyar says “atthivurithu adimeethu ninru”. This expression is interesting. Literally, it means skinning the elephant and remaining at the foot, bottom. Atthi also means fig tree. Here Atthi means hasthi or elephant. The elephant represents the muladhara. Skinning it or exposing it means waking the kundalini and starting the process of ascendence. Adi means foot. Muladhara is the adi or foot, sahasrara is the mudi or top. This is said with respect to the prana which remains in the muladhara and climbs up. Reversing it means the prana reaching sahasrara. This represents the supreme state. In the next line we find the word “adiyaar”. Generally it means devotees. Here it has an interesting meaning, it can explained as those who possess adi, the experts of adi or muladhara, that is, kundalini yoga. Only they can describe the experience. Agatthiyar tells Pulathiyar to learn about this technique from them and experience the poorna or fully complete, Divine.
சந்தோசம் என்றால் என்ன என்று கூறி வந்ததை இப்பாடலில் முடிக்கிறார் அகத்தியர். அதன் பிறகு வேதாந்தத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் வேதாந்த சிரவணத்தை விளக்கப் போகிறார்.
ஆகமங்களும் புராணங்களும் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். அவை வழிகாட்டிகள்தான். அவற்றின் மூலப்பொருள் வேதாந்தத்தினால் விளக்கப்படும் உண்மைப்பொருள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகமங்களும் புராணங்களும் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். அவை வழிகாட்டிகள்தான். அவற்றின் மூலப்பொருள் வேதாந்தத்தினால் விளக்கப்படும் உண்மைப்பொருள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்த வரியில் அகத்தியர் “அத்திவுரித்து அடிமீது நின்று” என்கிறார். அத்தி என்பது அத்தி மரம், யானை என்று இருபொருள் பெறும். அத்தி உரித்து என்பது யானை குறிக்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்பி அங்கு பிராணனை நிறுத்தி அதை மேலே ஏற்றுவது என்று பொருள். இவ்வாறு செய்வது முன் பின்னாக்கும் என்கிறார் அகத்தியர். முன்னே பிராணன் இருக்கும் இடமான மூலாதாரத்திலிருந்து அதைப் பின் இடமான சகஸ்ராரத்துக்கு மாற்றுவது அதாவது குண்டலினியை எழுப்பி சகஸ்ராரத்தை அடையச் செய்வது என்று பொருள். இந்த அனுபவத்தை அடியார்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார். அடியார் என்ற சொல் ஒரு சுவாரஸ்ஸியமான பொருளைத் தருகிறது. அடியை உடையவர்கள், அடி அதாவது மூலாதாரத்தை அறிந்தவர்கள் அடியவர்கள். இவர்களே குண்டலினி அனுபவத்தைப் பெற்றவர்கள். அவர்களது விளக்கமே உண்மையான விளக்கமாகும் என்று அகத்தியர் இங்கே குறிப்பிடுகிறார். அவர்களிடமிருந்து பூரணத்தை அறிந்து பார் என்று அவர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
No comments:
Post a Comment