Verse 256
ஒன்றாக விஸ்வமென்ற தியானமொன்று
உத்தமனே பிரணவத்தின் தியானமொன்று
நின்றாடும் நிராதார தியானமொன்று
நிசமான தியானவகை பத்துமைந்தா
அண்டர்தொழுஞ் சற்குருவைத் தியானம்பண்ணி
அகண்ட பரி பூரணமா அறிவில் நின்று
நன்றாக சிவயோகத் திருந்துகொண்டால்
நாதாந்த முத்தரென நாடுவாரே
Translation:
The dhyana of the universe as singularity
The supreme one! The dhyana of pranava
The dhyana of the unsupported centers that dance
The types of dhyana are ten
Contemplating on the Sathguru whom the devoted salute
Remaining in the expansive fully complete consciousness
If you remain well in the Sivayogam
They will seek calling you nadhantha muktha
Commentary:
Agatthiyar is continuing the list of types of dhyana. They are contemplating the universe as singularity, the dhyana of pranava and the dhyana of the niradhara or unsupported energy centers. If one performs these ten types of dhyana and the dhyana of Sathguru and Akanda Paripurna arivu or consciousness, that is, remain in Sivayogam everyone will seek you as the nadhantha mukhta or the liberated soul who has gone beyond the state of nadha, one who remains as pure consciousness.
பத்து வகை தியானங்களை இப்பாடலிலும் தொடருகிறார் அகத்தியர். அவை உலகத்தை ஒன்று என்று தியானிப்பது, பிரணவ தியானம் மற்றும் நிராதார தியானம் என்பவை. இவ்வாறு தியானம் செய்து சத்குருவையும் அகண்ட பரிபூரண அறிவில் நின்றால், அதாவது சிவயோகத்தில் இருந்தால் அனைவரும் அந்த யோகியை நாதாந்த முக்தர் என்று நாடுவர் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment